• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-31 18:12:04    
வாழ்க்கை மாற்றத்தை வெளிப்படுத்தும் ஊதியச் சீட்டு

cri

"வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் ஊதியம் பல முறை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 1700 யுவானுக்கு மேலாக உயர்த்தப்பட்டது" என்றார் அவர்.
நவ சீனா நிறுவப்பட்டது முதல் இன்று வரை, தொழிலாளரின் ஊதிய முறைமையில் 4 பெரிய சீர்திருத்தங்களை சீனா மேற்கொண்டுள்ளது. தொடக்கத்திலான பொருள் வடிவிலான வினியோகம் பணமாக மாறியது. பின்னர், பதவி நிலையிலான ஊதிய முறை மேற்கொள்ளப்பட்டது. ஊதியத்தின் வகைப்பாடு மேலும் விபரமானது.

தொழிலாளருக்கு ஒவ்வொரு திங்களும் நீண்ட மெல்லிய ஊதியச் சீட்டு ஒன்று

அடிப்படை ஊதியம், பதவி ஊதியம், பணி காலத்துக்கேற்ற ஊதியம், ஊக்கத் தொகை முதலியவை இதில் அடங்கும். வேலையிலிருந்து ஓய்வு பெற்ற தொழிலாளருக்கான ஓய்வூதியத்தை அதிகரிப்பது என்பதும், இந்தச் சீர்திருத்தங்களில் அடங்கும்.

தற்போதைய வாழ்க்கை பற்றி முதியவர் DU மனநிறைவு கொள்கிறார். ஆனால், ஷாங்காய் மாநகரில் வேலை செய்யும் பேத்தி XIAO XINஐ அவர் சில சமயம் நினைத்து ஏங்குகிறார்.

2003ஆம் ஆண்டில் ஷாங்காயில் வேலை செய்யத் துவங்கிய XIAO XINஇன் திங்கள் ஊதியம் சுமார் 3000 யுவானாகும். அவர் வாடகை வீட்டில் வசிக்க வேண்டியிருந்தது. இவ்வாண்டில், நில விலை மிக அதிகமான மாநகரில் 60 சதுர மீட்டருக்கு மேற்பட்ட பரப்பளவுடைய வீடு ஒன்றை அவர் வாங்கியுள்ளார். ஷாங்காயில் வீடு வாங்கும் XIAO XINஇன் எண்ணம் 2006ஆம் ஆண்டில் ஏற்பட்டது. ஏனென்றால், ஊதியச் சீட்டில் வீடு வாங்குவதற்கான சேமிப்பு நிதியின் எண் அவருக்கு நம்பிக்கை தருகிறது.

வீடு வாங்குவதற்கான சேமிப்பு நிதி, சீனாவில், குடியிருப்புக்கான ஒரு உத்தரவாத முறைமையாகும். இந்தச் சேமிப்பு நிதி, ஊதியம் போல, ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளரின் பணி காலத்துடன் அதிகரிக்கும்.

XIAO XINஇன் தந்தை, அதாவது முதியவர் DUவின் மகன், கூட்டு முதலீட்டு தொழில் நிறுவனம் ஒன்றில் நடு நிலை ஊழியராக வேலை செய்கிறார். தமது ஊதிய வருமானம் பற்றி அவர் மனநிறைவு அடைகிறார்.

புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டில் சீனத் தொழிலாளரின் மொத்த ஊதியத் தொகை, 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி யுவானாகும். 2005ஆம் ஆண்டில் இருந்ததை விட 13.5 விழுக்காடு அதிகரித்தது. வருமான அதிகரிப்பினால், நுகர்வு கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பருவ கால வண்ண ஆடை, வீட்டுப் பயன்பாட்டு மின் வசதி, வீடு, கல்வி, சுற்றுலா, பொழுது போக்கு உள்ளிட்ட பல துருவ நுகர்வு கட்டமைப்பு உருவாகியுள்ளது.


1 2