• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-02 14:18:38    
She இனப் பாடல்கள் மீதான பாதுகாப்பு பற்றி

cri

She இனம், தென் சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனங்களில் ஒன்றாகும். 90 விழுக்காட்டுக்கு அதிகமான She இனத்தவர்கள், சீனக் கடலோர மாநிலமான பூஃச்சியனின் கிழக்குப் பகுதியிலும், Zhe Jiang மாநிலத்தின் தென் பகுதியிலும் வாழ்கின்றனர்.

She இனத்தவர்களின் மூதாதையர் அடிக்கடி குடிபெயர்ந்தனர். குடிபெயர்வு ஆண்டுகளில், She இன மக்கள், She இனப் பாடல்களைப் பாடி வந்தனர். இதனால், தற்போதைய She இனக் கிராமம், பாடல் கடல் என அழைக்கப்படுகின்றது. இன்றைய நிகழ்ச்சியில், Fu Jian மாநிலத்தின் Ning De நகரில் உள்ள Bailukeng என்ற She இனக் கிராமத்துக்குள் நுழைந்து, She இன மக்களின் பாடல்களை உணர்ந்து கொள்ளலாம், வாருங்கள்.

Bailukeng, கடலுக்கு அருகில் மலையுடன் காணப்படும் ஒரு சிறு கிராமமாகும். Zhe Jiang மாநிலத்தின் கிழக்குப் பகுதியில், இது மிக முக்கிய She இனக் குடியிருப்புப் பிரதேசமாகும். இங்கு, அனைவராலும் பாடல் பாட முடியும். அவர்கள், உழைக்கும் போதும் ஓய்வு பெறும் போதும் பாடல்களை பாடுகின்றனர். மகிழ்ச்சியடையும் போதும், துன்பமடையும் போதும், அவர்கள் பாடுகின்றனர். She இனப் பாடல், She இன மக்களின் வாழ்க்கையில் முக்கிய பகுதியாக மாறியுள்ளது.

Bailukeng கிராமத்தில், 75 வயதான முதியவர் Zhong Chang Yaoஐ சந்திப்போம். திரு Zhong தனது குழந்தைப் பருவத்தில் மூத்த தலைமுறையினர்களிடமிருந்து She இனப் பாடல்களைப் பாடுவதைக் கற்றுக்கொண்டார். She இன மக்கள் வாழும் பிரதேசத்தில், இனிமையான பாடல்கள் ஒலிக்கின்றன. குறிப்பாக, She இனத்தின் சில பாரம்பரிய விழா நாட்களில், ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பாடல் விழாக்கள் நடைபெறுகின்றன. பாடல் விழாவின் போது, She இன பாடல்களைப் பாடும் பொருட்டு, வெளியூரில் வசிக்கும் கிராமவாசிகள் பலர், ஊர் திரும்புகின்றனர். இள வயதில், பாடல் விழாக்களில் Zhong Chang Yao பல முறை பாடினார். இன்று வரை, இந்த அனுபவம் பற்றி அவர் மகிழ்ந்து பேசுகிறார்.

She இன மொழிக்கு, எழுத்துகள் இல்லை. She இனப் பாடல்கள் சீன மொழியில் பதிவு செய்யப்படுகின்றன. சமூகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், உற்பத்தி நடவடிக்கைகளிலும் வாழ்க்கையிலும் She இனம் மற்றும் ஹான் இனத்தின் பழக்க வழக்கங்கள் நாளுக்கு நாள் ஒன்றுகலந்துள்ளன. She இன இளைஞர்களில், சிலர் She இன மொழியை பேச தெரியாது. அவர்களுக்கு She இனப் பாடல்களை பற்றி ஏதும் தெரியாது. She இனப் பாடல்கள் அழியும் அபாயத்தில் உள்ளன. இதனால், Zhong Chang Raoவுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. "முன்னதாக Bailukeng கிராமத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும் பாடல் வரிகள் கொண்ட கையெழுத்து பிரதிகள் உண்டு. சில குடும்பங்கள், சில பத்து பிரதிகள் கொண்டிருந்தன. இப்போது, இந்த கையெழுத்து பிரதிகள் காணாமல் போயின. என்ன காரணம்? 60 வயது முதல், 70 வயது வரையான முதியோர் மரணமடைந்துள்ளனர். இளைஞர்கள் இப்பாடல்களைக் கற்றுக்கொள்ளவில்லை. ஏன், சிலரால், She இன மொழியை பேசக்கூட தெரியாது" என்றார், அவர்.

1 2