சீன புதுமண தம்பதியர் அதிகம் செலவளிக்கின்றனர்
சீனாவில் திருமணம் மிக முக்கியமானது. இதற்காக இளம் தம்பதியர் தங்களது மாத வருமானத்தை விட 20 மடங்கு அதிகமாக செலவு செய்கின்றனர். சீன நகர்புறங்களில் புதிதாக மணம் செய்தவர்கள் சராசரியாக 1,26,600 யுவான் செலவு செய்துள்ளனர் என வணிக அமைச்சகத்தின் ஆய்வை சுட்டிக்காட்டி சாங்சிங் இளைஞர் நாளேடு வியாழன் செய்தி வெளியிட்டுள்ளது. 60,000 நகர்வாழ் தம்பதியரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அடுக்குமாடி வீடு அழகுபடுத்துதல், வீட்டு மர மற்றும் தட்டுமுட்டு சாதனங்கள் ஆகியவற்றிற்கு 64 விழுக்காடும், இதர தொகை மட்டுமே திருமண சடங்கு, ஆடை மற்றும் புகைப்படம் என செலவிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

திருமணத்திற்கு முன்பே, பல சீன தம்பதியர் அடுக்குமாடி வீடு மற்றும் கார் வாங்குவதால், ஒட்டுமொத்த தொகையில் திருமணச்செலவு மிக சிறிய பங்கு என்பதை ஆய்வு சுட்டுகிறது. சராசரியாக 6,240 யுவான் மாத வருமானம் பெறும் 81.6 விழுக்காடு புதுமண தம்பதியர் பெற்றோரின் உதவியை பெறுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்களில் புகைப்படத்தை 88.4 விழுக்காட்டினரும், திருமண விருந்தை 78.74 விழுக்காட்டினரும் பிரதான செலவாக கூறியுள்ளனர்.
இதற்கு மாறாக, கிராமபுற இளம் தம்பதியர் சராசரியாக 40,000 யுவான் மட்டுமே திருமணத்திற்காக செலவிடுகின்றனர். இது நகர இளம் தம்பதியரின் செலவில் மூன்றில் ஒரு பங்கை விட குறைவாகும் என ஆய்வு தெரிவிக்கிறது. 2006 ஆம் ஆண்டில் 8.49 மில்லியன் இணைகள் திருமணம் செய்துள்ளனர்.
குடியிருப்பிட கௌரவ விருது
ஒவ்வொரு ஆண்டின் அக்டோபர் திங்கள் முதல் திங்கட்கிழமையன்று உலக குடியிருப்பிட நாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மனித குலத்தின் குடியிருப்பு மற்றும் வாழ்விடங்கள் துறையிலும், அது தொடர்பான வசதிகளின் உருவாக்கத்தில் ஈடுபடுவோருக்கும் ஐ நா வின் மனித குடியிருப்பு திட்ட அலுவலகம் சிறப்பு விருது வழங்கி மரியாதை அளிக்கிறது. குடியிருப்பிட கௌரவ விருது என்று கூறப்படும் இந்த மரியாதை 1989ம் ஆண்டு ஐ நா பேரவையால் நிறுவப்பட்டது. மனித குல குடியிருப்பு மற்றும் வாழ்விடத்துறையிலான விழிப்புணர்வுக்கு தூண்டுதலாக இந்த விருதை ஐ நா பேரவை நிறுவியது. இவ்வாண்டு இந்த சிறப்பான விருது சீனாவின் நான்னிங் நகராட்சி அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. குவாங்சி சுவாங்

தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான நான்னிங்கில் 2005ம் ஆண்டு மே மாதம் முதல் நடைமுறையில் உள்ள ஒருங்கிணைந்த நெருக்கடி நேர, அவசர கால மீட்புப்பணி முறைமையின் வெற்றிகரமான பங்களிப்புக்காகவே இந்த சிறப்பு மரியாதை தரும் விருது வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான ஆசிய நகரங்கள் என்ற ஐ நாவின் ட்நிறப்பு நடவடிக்கை திட்டத்டிற்கான ஒரு முன்மாதிரியாக நான்னிங் நகரின் அவசர கால மீட்புதவி முறைமை விளங்குகிறது எனலாம். மேலும் இவ்வாண்டுக்கான உலக குடியிருப்பிட நாளின் தலைப்பான பாதுகாப்பான ஒரு நகரம், நீதியான நகரம் என்ற கருத்துக்கும் நான்னிங்கின் இந்த அவசர கால மீட்புதவி முறைமையும் அதற்கான விருதும் பொருத்தமாக அமைந்துள்ளன. இவ்வாண்டு நான்னிங் இந்த விருதை பெற்றது போல கடந்த 6 ஆண்டுகளாக சீனாவின் நகரங்கள் தொடர்ந்து இவ்விருதை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2001 முதல் 2006 வரை முறையே தாங்ஷான், ஹாங்ஷோ, பாவ்தோ, வெய்ஹாய், சியாமன், யாந்தாய், யாங்ஷோ ஆகிய நகரங்கள் தொடர்ச்சியாக இவ்விருதை பெற்றுள்ளன.
1 2
|