
இன்றைய படைப்பாற்றல் நமது உழைப்பால் உருவாகிறது. உழைப்பை உரமாக்கும் தொழிலாளர்கள் நாட்டின் அல்லது நிறுவனத்தின் முதுகெலும்பு என்றால் மிகையாகாது. தொழிலாளர் நலன்பேணும் எச்செயலும் நிறுவனத்தை மேம்படுத்தி நாட்டின் வளர்ச்சியை துரிதபடுத்தும். இக்கால சூழலில் தொழிலாளர்களின் உடல் நலத்தோடு உளநலத்திலும் அக்கறை காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தொழிலாளர் உளநலம் பேணும் நிறுவனங்கள் காணும் பயனை இன்றைய அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் கேட்க இருக்கிறோம்.
மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உடனடி மற்றும் தொலைபேசி வழியான உளநல சிகிச்சைகள் அளிப்பது உடல்நலத்தை மேம்படுத்துவதோடு, அவர்கள் பணிக்கு வராத நிலமைகளையும் குறைக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல முதலாளிகள் உளநலத்திற்காகன மருத்துவ சேவையை பணவிரயமாக கருதும்போது தொழிலாளர்களின் மனஅழுத்தங்களை போக்க செலவு செய்வது நல்ல வியாபார யுக்தி என்பதை இது சுட்டுகிறது என்று ஆய்வாளர் மருத்துவர் பிலிப் வாங் கூறுகிறார். அவர் இவ்வாய்வு நடத்த உதவிய தேசிய உளநல நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
மருத்துவரை அல்லது சிறப்பு உளநல மருத்துவரை சந்திக்க அறிவுரை என்ற தொழில் நிறுவனங்களின் வழக்கமான நலத்திட்டங்களில் மனஅழுத்தத்திலிருந்து விடுபட தீவிர சிகிச்சை உள்ளிட்ட சிறப்பு கவனம் செலுத்தப்பட்ட தொழிலாளர்கள், சராசரியாக 2 வாரங்கள் அதிகமாக பணிபுரிந்ததை ஓராண்டுகால ஆய்வின்போது கண்டுபிடிக்க முடிந்தது. சிறப்பு சிகிச்சை பெற்ற தொழிலாளர்களில் 93 விழுக்காட்டினர் ஆண்டுமுடிவில் பணியிலிருந்தபோது வழக்கமான சிகிச்சை பெற்றவர்களில் 88 விழுக்காட்டினரே பணியிலிருந்தனர். வாடகை மற்றும் பயிற்சி செலவுகள் முதலாளிகளுக்கு சேமிப்பாயின என ஆய்வாளர்கள் கூறினர். தீவிர சிகிச்சை உள்ளிட்ட சிறப்பு கவனம் பெற்ற 40 விழுக்காட்டு தொழிலாளிகள் மனஅழுத்தங்களிலிருந்து விடுபட்டனர் என ஒராண்டுகால ஆய்வு சுட்டியது என்று அமெரிக்க மருத்துவ சங்கத்தின் இதழில் தெரிவிக்கப்பட்டது.

செலவு மற்றும் இலாபம் பற்றிய முறையான கணக்குகள் முடிக்கப்படுவதற்கு முன்பான முடிவு, அதிக உழைப்பாற்றல் நேரத்தின் மூலமாக சராசரியாக ஒரு தொழிலாளிக்கு 1800 டாலர் என்ற அளவில் நிறுவனத்திற்கு சேமிப்பானது என்று கூறுகிறது. தீவிர சிகிச்சை உள்ளிட்ட சிறப்பு கவனம் செலுத்தப்படும் மருத்துவ நலத்திட்டத்தில் தொழிலாளி ஒருவருக்கான நிறுவனத்தின் செலவு 100 முதல் 400 டாலராகும். இலாபம், மருந்துகள் மற்றும் சிகிச்சையின் செலவை விட அதிகமாக இருந்ததை ஆய்வாளர்கள் கண்டனர். "மனஅழுத்தத்திற்கு சிகிச்சையளிப்பது மருத்துவ ரீதியாக நன்மை தரும் என நாங்கள் அறிவோம். ஆனால் இச்சிறப்பு கவனம் செலுத்தப்படும் அணுகுமுறை வர்த்தகரீதியிலும் நன்மைதரும் என்பது தற்போது தெரியவந்துள்ளது" என்கிறார் இந்நிறுவன இயக்குனர் மருத்துவர் தாமஸ் இன்செல்.
அமெரிக்காவில் மனஅழுத்த பிரச்சனை தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களை பெரிதும் பாதித்துள்ளது. மனஅழுத்தம் ஆண்டுதோறும் சுமார் 6 விழுக்காட்டு தொழிலாளர்களை பாதித்து உற்பத்தி இழப்பில் 30 பில்லியன் டாலருக்கு மேலான தொகையை விழுங்குகிறது என்று ஹார்வார்டு மருத்துவ கல்லூரி ஆய்வாளரும்இவ்வாய்வின் இணை ஆசிரியருமான ரோனால்டு கெஸ்லர் கூறுகிறார். இவர் மருந்து ஆய்வு நிறுவனங்களுக்கு ஆலோசகராக பணிபுரிந்துள்ளார். பிற இரண்டு இணை ஆசிரியர்களும் ஒட்டுமொத்த நடத்தை சுகாதாரம் என்ற இவ்வாய்வில் பங்கேற்ற மிகப் பெரிய நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். மேற்கூறப்பட்ட ஆய்வு இவ்அமைப்பின் தொலைபேசி மூலமான நல உதவி திட்டத்தோடு ஒத்து பார்க்கப்பட்டது. ஆய்வின் நல்ல முடிவுகளால் இவ்வமைப்பு அதே நலத்திட்டத்தை ஆய்வு முடிந்த ஒராண்டுக்கு பின்னரும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
1 2
|