• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-12 12:43:48    
உளநல ஒதுக்கீடு வியாபார யுக்தியே

cri

"இவ்வாய்வு உண்மையிலேயே முற்போக்கானது" என்று கூறும் மனநோய் தேசிய கூட்டமைப்பு என்ற சேவை அமைப்பின் மருத்துவர் கென் டக்வெர்த் "மனஅழுத்தத்திற்கு அக்கறை காட்டுவதால் முதலாளிகளுக்கு கிடைக்கும் பயன்களை இது காட்டுகிறது" என்றார். உடல் மற்றும் உளநலத்தை உள்ளடக்கும் காப்பீட்டை முதலாளிகள் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற வரைவுச்சட்டத்தை நிறைவேற்ற டக்வெர்த் குழு அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

இவ்வாய்வு 604 அலுவலக மற்றும் அமெரிக்க 16 பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலையிலான பணியாளர்களிடம் நடத்தப்பட்டது. இதில் விமானஓட்டுனர்கள், வழக்கறிஞர்கள், வங்கி தொழிலாளர்கள், சரக்குந்து ஓட்டுனர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர் அடங்குவர். ஆய்வு செய்யப்பட்டவர்கள் இணையதளத்தின் மூலமான மனஅழுத்த அறிகுறிகளை அறியும் கள ஆய்வு கேள்விகளுக்கு விடையளித்தனர்.

பாதிபேர் வழக்கமான நல சிகிச்சைகளை பெற்றதோடு பிரதான மருத்துவரையோ அல்லது உளநல மருத்துவ உதவிபெற அமைப்பின் தொலைபேசி செய்தியையோ, கடிதத்தையோ பெற்றனர். இதர சிறப்பு சிகிச்சை பெற்ற தொழிலாளர்கள் பணியிலில்லா நேரத்தில் ஒட்டுமொத்த நடத்தை சுகாதார அமைப்பின் உளநல பயிற்சி பெற்ற சேவை ஆலோசகர்களின் தெலைபேசி அழைப்புகளை அடிக்கடி பெற்றனர். இவர்கள் தொழிலாளர்களை சிகிச்சை பெற தூண்டியதோடு தொலைபேசி மூலம் அழைத்து அதன் செயலாக்கத்தையும் தெரிந்து கொண்டனர். உதவியை தேட மறுத்த தொழிலாளர்களுக்கு தொலைபேசி முலமான சிகிச்சை முறையை சேவை ஆலோசகர்கள் வழங்கினர். இம்முறை பல தொழிலாளர்களால் உளநல மருத்துவரை நாடிச்சென்று சிகிச்சை பெறுவதிலான தப்பறையான சமூக எண்ணங்களைக் காட்டிலும் எளிமையானதாக உணரப்பட்டது.

இரண்டு குழுக்களிலும் 40 விழுக்காட்டு தொழிலாளர்கள் மனஅழுத்த நிவார மருந்துகளை பெற்றனர். சிறப்பு சிகிச்சை பெற்ற தொழிலாளர்களில் 60 விழுக்காட்டினர் உளநல சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதை விரும்பினர். உளநல உதவி பெற்றவர்களில் பெரும்பான்மையானோர் வேலையில் நிலைத்தது நிறுவனத்திற்கான சேமிப்பாகும். இவ்வாய்வில் பங்குகொண்ட தொழிலாளர்கள் வாரன்வில்லிலுள்ள சர்வதேச சரக்குந்து மற்றும் இயந்திரம் குழும நிறுவனத்தை சேர்ந்தவர்களாகும். "இவ்வாய்வு முடிவுகள் இந்நிறுவனத்தின் உளநல திட்டத்தை மேம்படுத்தவும், மேலதிக தொழிலாளர்களிடையே மனஅழுத்தம் பற்றிய சோதனை மேற்கொள்ளவும் உதவியது" என்று இந்நிறுவனத்தின் மருத்துவ இயக்குனர் மருத்துவர் வில்லியம் பன் தெரிவித்ததோடு, "தொழிலாளர்கள் நலனுக்கான இச்சிறப்பு கவனம் செலுத்தும் நடவடிக்கை செலவுக்கேற்ற பயனாய் அமைவதோடு சரியான செயல்பாடாகவும், நிறுவனத்திற்கு இலாபம் சேர்ப்பதாகவும் உள்ளது" என்றார்.

தொழிலாளர் நலன் தேடும் நிறுவனங்கள் தங்கள் இலாபத்திலும் வளர்வது நிச்சயம் என்பதையும், தனது நலனில் அக்கறைகாட்டும் நிறுவனத்தின் நலனில் தொழிலாளி எப்போதும் நாட்டம் கொண்டுள்ளான் என்பதையும், இவ்வாய்வில் நிறுவனங்களுக்கு வந்த இலாபங்களும், சேமிப்புகளும் நிரூபிக்கின்றன. தொழிலாளர் நலன் பேணும் நிறுவனத்தை தமது சொந்த நிறுவனமாக தொழிலாளர்கள் நினபை;பர். எனவே அது நிச்சயம் மேம்பாடு அடையும் என்பதில் ஐயமில்லை.

"உலகில் உயர்ந்தது உழைப்பு

உழைப்பால் பெறுவது படைப்பு

உழைப்பாளர் நலனிலான பொறுப்பு

உருவானால் பெரும் சிறப்பு"


1 2