• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-09 12:57:08    
ஒரு முஸ்லிம் குடும்பம் பற்றி

cri

தென் கிழக்கு சீனாவின் கடலோரத்தில் உள்ள Fu Jian மாநிலத்தின் Quan Zhou நகர், பண்டைக்காலத்தில் புகழ் பெற்ற கடல் வழி பட்டுப்பாதையின் துவக்க இடமாக இருந்தது. கி.பி. 600ஆம் ஆண்டு தொட்டு, அரபு நாடுகள் மற்றும் பெர்சியாவின் வணிகர்கள் வாரம் வாரமாக Quan Zhouவுக்கு வந்து, வர்த்தகம் செய்தனர். இதனால், Quan Zhou நகர், இஸ்லாமிய மதம் மிக முன்னதாக சீனாவில் பரவிய இடங்களில் ஒன்றாகும். பின்னர், முஸ்லிம் வணிகர்கள் Quan Zhou நகரில் குடியேறினர். அவர்களின் வழித்தோன்றல்கள், உள்ளூர் மக்களை திருமணம் செய்தனர். Quan Zhouவில் உள்ள Chen Dai பட்டிணத்தில் வசித்து வரும் Ding என்னும் குடும்பம், சுமார் 700 ஆண்டுகால வரலாறுடைய ஒரு முஸ்லிம் குடும்பமாகும். இன்றைய நிகழ்ச்சியில், இக்குடும்பம் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

Quan Zhou நகருக்கு தென் கிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள Chen Dai பட்டிணத்தின் நிலப்பரப்பு, 7-8 சதுர கிலோமீட்டர் மட்டுமே. இருந்த போதிலும், சீனாவில், ஏன் ஆசியாவில் மிகப் பெரிய விளையாட்டு காலணி தயாரிப்புத் தளம், இங்கு அமைந்துள்ளது. சீனாவின் பல புகழ் பெற்ற விளையாட்டு காலணி சின்னங்களின் தயாரிப்பு இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து புகழ் பெற்ற விளையாட்டு காலணி சின்னங்களும், Chen Dai பட்டிணத்தில் வாழ்கின்ற Ding குடும்பத்தினரால் வடிவமைக்கப்படுகின்றன. இது மக்களுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. Chen Dai பட்டிணத்துக்குச் சென்று, இக்குடும்பத்தின் திரு Ding Tong Zhiஐச் சந்தித்துரையாடினோம்.
80 வயதான Ding Tong Zhi, முன்பு இப்பட்டிணத்தில் தேசிய இன விவகாரத்துக்குப் பொறுப்பான அதிகாரியாக பணி புரிந்தார். தனது குடும்பத்தின் வரலாறு பற்றி அவர் கூறியதாவது:

"என் குடும்பத்தின் வம்சாவழி குறிப்பு மற்றும் வரலாற்று ஆவணங்களின் படி, சுங் வம்சத்தின் இறுதியில் (சுமார் 1270ஆம் ஆண்டு), என் மூதாதையர், அரபு நாட்டிலிருந்து கடல் வழி பட்டுப்பாதை மூலம் Su Zhou நகர் வந்தடைந்தனர். பின்னர், மூதாதையர் Su Zhou நகரிலும், Quan Zhou நகரிலும் வர்த்தகம் செய்தனர்" என்றார், அவர்.
சுமார் கி.பி. 1400ஆம் ஆண்டு, Ding குடும்பத்தின் மூதாதையர், Chen Dai பட்டிணம் வந்து குடியேறி, இங்கு வசிக்கத் துவங்கினர். அவர்கள் வணிகத் தொழிலைக் கைவிட்டு, வேளாண் துறையில் ஈடுபடத் தொடங்கினர். அப்போது முதல் இன்று வரை இக்குடும்பம் Chen Dai பட்டிணத்தில் வசித்து வருகின்றது.

இதற்கான காரணம் பற்றி, Quan Zhou நகரிலான வெளிநாடுகளுக்கு ஏற்றிச்சென்ற வரலாறு அருங்காட்சியகத்தில் பணி புரியும் அறிஞர் Liu Zhi Cheng சில தகவல்களை விவரித்தார். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் சீனாவின் மிங் வம்சக்காலம் தொட்டு, வெளிநாடுகளிலிருந்து வந்த இனங்களைப் புறக்கணித்ததோடு, வெளிநாடுகளுடனான வர்த்தகத்தை தடை செய்யும் கொள்கையை அரசு நடைமுறைப்படுத்தியது. இதனால், Quan Zhou நகரில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள், ஆபத்து நிகழாமல் தவிர்க்கும் பொருட்டு, வெளியூருக்குச் சென்றனர். அப்போது புகழ் பெற்ற Ding குடும்பத்தினர்கள், இத்தகைய நிலைமையில் Chen Dai பட்டிணத்துக்கு வந்து குடியேறி, வேளாண்மையில் ஈடுபடத் துவங்கினர். Liu Zhi Cheng கூறியதாவது:

"Chen Dai பட்டிணம், Jin Jiang ஆற்றின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. அங்கு நெல் வயல்கள் அதிகம். வேளாண்மை மிகவும் வளர்ச்சியடைந்திருந்தது. Ding குடும்பத்தினர்கள் அதிக தரிசு நிலங்களைப் பண்படுத்தினர். Ding குடும்பம், இப்பகுதியில் மிகச் செல்வமடைந்த குடும்பமாக மாறியது. பின்னர், Ding குடும்பத்தினர் நிலங்களைப் பண்படுத்தியதோடு, வணிகத்திலும் ஈடுபட்டனர். இதன் மூலம் இக்குடும்பம் மேலும் செல்வமடைந்தது" என்றார், அவர்.

1 2