• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-09 12:57:08    
ஒரு முஸ்லிம் குடும்பம் பற்றி

cri

இந்த அருஞ்காட்சியகத்தில் பணி புரிந்த Ding Mei Shan அம்மையார், Ding குடும்பத்தின் 26வது தலைமுறையினர் ஆவார். அவர் தனது குடும்பம் பற்றி பெருமையுடன் கூறியதாவது:
"Chen Dai பட்டிணத்தின் Ding குடும்பத்தினரின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துள்ளது. பூர்வாங்க புள்ளி விபரங்களின் படி, இது வரை, Ding குடும்பத்தின் வழித்தோன்றல்களின் எண்ணிக்கை, 20-40 ஆயிரமாகும்" என்றார், அவர்.

அல்லல்பட்ட போதிலும், கடந்த பல நூறு ஆண்டுகளில், இஸ்லாமிய மதம் மீதான நம்பிக்கையை இக்குடும்பத்தினர்கள் கைவிடவில்லை. இஸ்லாமிய மதம், மூதாதையர் Ding குடும்பத்தினர்களுக்கு விட்டுச்சென்ற தார்மீகச் செல்வம் என்றும், இக்குடும்பம் நிலவினால், குடும்பத்தின் நம்பிக்கை மாறப் போவதில்லை என்றும் Ding Tong Zhi கூறினார். அவர் கூறியதாவது:

"எங்கள் குடும்பத்தின் வம்சாவழி குறிப்பில், சில கட்டுரைகள் இருக்கின்றன. எங்கள் மூதாதையர்களின் மத நம்பிக்கையும், பழக்க வழக்கங்களும் இக்கட்டுரைகளில் வர்ணிக்கப்படுகின்றன. அதாவது, இஸ்லாமிய மத திருநாட்கள், அன்றாட வாழ்க்கை பழக்க வழக்கங்கள் போன்றவை" என்றார், அவர்.

கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளில், சீனாவில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின், Chen Dai பட்டிணத்தில் Ding குடும்பத்தின் வழித்தோன்றல்கள், தொழிற்துறையை பெரும் முயற்சியுடன் நடத்தினர். அவர்கள் உற்பத்தி செய்த பொருட்கள் சீனாவின் மற்ற இடங்களுக்கும் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 45 வயதான Ding Zhen Pei, Chen Dai பட்டிணத்தில் மிக வெற்றிகரமான தொழில் முனைவோரில் ஒருவர். தற்போது, அவர் இப்பட்டிணத்தில் தேசிய இன விவகாரத்துக்குப் பொறுப்பான அதிகாரியாவார். அவர் கூறியதாவது:

"கடந்த ஆண்டு, Chen Dai பட்டிணத்தின் குவெய் இன குடியிருப்புப் பிரதேசத்தின் மொத்த தொழிற்துறை மற்றும் வேளாண்மையின் மதிப்பு, 950 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இது, எனது குடும்பத்தினர்கள் நிறுவிய தொழில் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பட்டிணத்தின் மொத்த தொழிற்துறை மற்றும் வேளாண்மை மதிப்பில் இது 51 விழுக்காடாகும். Ding குடும்பத்தினரால் நிறுவப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களில், சொத்து மதிப்பு 10 கோடி யுவானைத் தாண்டிய தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 19 ஆகும். 17 தொழில் நிறுவனங்கள் நாட்டின் புகழ் பெற்ற வணிகச் சின்னங்களாக திகழ்கின்றன" என்றார், அவர்.

Ding குடும்பத்தினர் உருவாக்கிய வணிக அற்புதம் பற்றி, Ding குடும்பத்தினர்கள் தன்னடக்கம் கொள்கின்றனர். மூதாதையர் நடத்திய வணிகத் தொழிலில் தாங்கள் மீண்டும் ஈடுபடுவதாக மட்டுமே என்று அவர்கள் கருதுகின்றனர். அவர்களது மூதாதையர் போல், இந்த வளமான காலத்தில், இக்குடும்பத்தினர் செவ்வனே செயல்பட்டு, வெற்றி பெறுவர்.


1 2