வாணி -- க்ளீடட்ஸ், வழக்கம் போல வகுப்பின் துவக்கத்தில் நேயர்களுடன் சேர்ந்து கடந்த வாரம் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்வோம்.
க்ளீட்டஸ் -- சரி. கடந்த வகுப்பில் வானிலை முன்னறிவிப்பு பற்றிய சில வாக்கியங்களைக் கற்றுக்கொண்டுள்ளோம்.
வாணி – ஆமாம். என்னை பின்பற்றி, மீளாய்வு செய்யுங்கள். tian qi, 天气,வானிலை Yu bao. 预报. முன்னறிவிப்பு.
க்ளீட்டஸ் -- tian qi, 天气,வானிலை .Yu bao. 预报, முன்னறிவிப்பு.
வாணி – 怎么说,zen me shuo? எப்படி சொல்வது.
க்ளீட்டஸ் --怎么说,zen me shuo? எப்படி சொல்வது.
வாணி – சரி. வானிலை முன்னறிவிப்பு பற்றி கேட்கும் போது, நீங்கள், 天气预报怎么说,tian qi yu bao zen me shuo என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தலாம். 天气预报怎么说,tian qi yu bao zen me shuo?
க்ளீட்டஸ் --天气预报怎么说,tian qi yu bao zen me shuo? வானிலை முன்னறிவிப்பு என்ன சொல்கிறது?
வாணி – 今天多少度?jin tian duo shao du? இன்று வெப்ப நிலை என்ன? 多少, முன்பு காற்றுக் கொண்ட பழைய சொல், எவ்வளவு என்ற பொருள். 度 du, இங்கே, திகிரி செல்சியஸ் என்ற பொருள். 今天多少度?jin tian duo shao du?
க்ளீட்டஸ் --今天多少度?jin tian duo shao du? இன்று வெப்ப நிலை என்ன?
வாணி – 天气预报说,今天有雨。Tian qi yu bao shuo ,jin tian you yu. இன்று மழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பு கூறுகின்றது.
க்ளீட்டஸ் --天气预报说,今天有雨。Tian qi yu bao shuo ,jin tian you yu. இன்று மழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பு கூறுகின்றது.
வாணி -- g, k., h. ஆகிய முதல் ஒலிகளைக் கற்றுக்கொண்டுள்ளோம். கேட்டு வாசிக்கும் போது இவற்றுக்கிடையிலான வித்தியாசத்தைக் கவனியுங்கள். g, k., h.
க்ளீட்டஸ் -- g, k., h.
வாணி – நல்லது. சொற்களுடன் வாசித்தால், நன்றாகப் புரியலாம். g, ge-ge哥哥 அண்ணா
க்ளீட்டஸ் -- g, ge-ge哥哥 அண்ணா அல்லது அண்ணன்
வாணி-- k.,kan jian看见, காண்பது
க்ளீட்டஸ் -- k.,kan jian看见, காண்பது
வாணி --喝水,he shui, நீர் குடிப்பது.
க்ளீட்டஸ் --喝水,he shui, நீர் குடிப்பது.
வாணி—சரி, இப்போது புதிய வகுப்பைத் துவக்கலாம். இன்று வானிலை பற்றிய உரையாடலைத் தொடர்ந்து நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். 天气预报说, tian qi yu bao shuo என்பதை ஏற்கனவே கற்றுக்கொண்டுள்ளோம். வானிலை முன்னறிவிப்பு கூறுகின்றது என்பது இதன் பொருள்.
1 2
|