• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-14 11:44:28    
சீன மக்களின் ஓய்வு நேர வாழ்க்கை

cri

20க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன், உணவு மற்றும் உடை பற்றி சீன மக்கள் கவலைப்பட்ட போது, பெரும்பாலானோரின் ஓய்வு நேர பொழுது போக்கு மிகவும் எளிமையாக இருந்தது. வீட்டில் நூல்களைப் படிப்பது, வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பது, நண்பர்களுடன் சதுரங்கம் விளையாடுவது முதலியவை மட்டுமே. சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பணி ஆழமாகி வருவதுடனும், பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து வருவதுடனும், சீன மக்களின் சமூக வாழ்க்கையில் ஆழ்ந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுப் பயணம்

மக்களின் ஓய்வு நேர வாழ்க்கை பல்வகை மயமாகும் அதே வேளை, அவர்களது தனிப்பட்ட வாழ்வில் மேலும் முக்கியமான இடமும் வகிக்கிறது. மேலதிக சீன மக்கள் பொழுது போக்கில் புதிய வாழ்க்கை இலக்கை கண்டறிந்து, தங்களது மதிப்பை மீண்டும் அறிந்து கொள்கின்றனர்.

33 வயதான LV TONG ZHOU என்பவர், இதழ் வெளியீட்டகம் ஒன்றில் பணி புரிகிறார். துவக்கப் பள்ளி மாணவராக இருந்த போது, சிறிய சுற்றுப் பயணியர் போன்ற அவர், தாய்தந்தையாருடன் இணைந்து சுற்றுப் பயணம் மேற்கொள்வார். 20க்கு மேற்பட்ட ஆண்டுகள் ஆகிவிட்டன. சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அவர் நேரில் கண்டுணர்ந்துள்ளார்.

"கடந்த காலத்தில் பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் இருந்தது. மாணவராக இருந்த போது, அதிவேக நெடுஞ்சாலை இல்லை. விமானப் பயணம் செய்ய பணம் இல்லை. இருப்புப்பாதை மூலம் பயணம் செய்த போது, படுக்கை வசதிக்காக பணம் செலவிட விரும்பவில்லை என்பதால், இருக்கை வசதி மட்டுமே கொண்ட தொடர் வண்டியை தெரிவு செய்தேன். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையுடன், தற்போது போக்குவரத்துத் துறையில் பிரச்சினை இல்லை என்று சொல்லலாம். சுற்றுலா பற்றிய மக்களின் கருத்து படிப்படியாக மாறியுள்ளது. தற்போதைய மக்கள், பெரும்பாலும், தற்சார்பு சுற்றுப் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர்" என்றார் அவர்.

LV TONG ZHOU குறிப்பிட்ட மாற்றத்தை, சீன மக்கள் பலர் உணர்ந்துள்ளனர். இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப்பதைத் தவிர, தற்போதைய சுற்றுலாவில், மேலதிக அம்சங்களும் பொருளும் உள்ளடங்கியுள்ளன. LV TONG ZHOU பொறுத்த வரை, கடின உடற்பயிற்சிகளை அவர் நேசிக்கிறார். அதிக கடினத்தன்மையுடைய வெளிப்புற விளையாட்டு மற்றும் நடைப் பயணத்தின் மீது அவர் பேரார்வம் கொள்கிறார்.

இத்தகைய ஆர்வம் மற்றும் ஓய்வு நேர வாழ்க்கையின் மூலம்தான், சுற்றுலா பற்றிய அவரது புரிந்துணர்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன், நடைப் பயணம் மூலம் சீனாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சி சுவான் மாநிலத்தின் ஏழை மலைப் பிரதேசம் சென்றடைந்து, பின்தங்கிய நிலையிலுள்ள அப்பிரதேசத்தின் நிலைமையைக் கண்ட பின், இணைய தளத்தில், மலைப் பிரதேச பள்ளிகளுக்கு நன்கொடை திரட்டும் நடவடிக்கையை அவர் துவக்கினார். நாடு முழுவதிலும் ஆக்கப்பூர்வ பதில் பெற்ற இந்நடவடிக்கை மூலம், அங்குள்ள 200க்கு அதிகமான பள்ளிகளுக்கு இறுதியில் நூல்கள் கிடைத்தன. இதற்குப் பின்னர், ஏழை இடங்களுக்குச் செல்ல சுற்றுலா நேசிப்பவருக்கு அவர் அடிக்கடி ஏற்பாடு செய்கிறார்.

சுற்றுப் பயணம் பொது நல நடவடிக்கையுடன் அவரால் இவ்வாறு இணைக்கப்படுகிறது. சுற்றுலா செய்யும் போது சுற்றுச்சூழலைப் பேணிக்காக்குமாறு அவர் சுற்றுலா பற்றிய இணைய தளம் மூலம் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறார். அவர் கூறியதாவது—

"சுற்றுலா முதல் வெளிப்புற விளையாட்டு ஊடாக, பொது நல சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரையான இந்நடவடிக்கை மூலம், எனது சிந்தனை புதிய நிலைக்கு உயர்ந்துள்ளது என்று உணர்கின்றேன்" என்றார் அவர்.

1 2