• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-14 11:44:28    
சீன மக்களின் ஓய்வு நேர வாழ்க்கை

cri

பிரெஞ்சு மொழி பயிலும் வகுப்பு ஒன்று

வெளிப்புற விளையாட்டை விரும்பும் LV TONG ZHOU என்பவருக்கு மாறாக, அரசு சார் தொழில் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் WANG QI QI என்பவர், தனது ஓய்வு நேரத்தை வகுப்பில் செலவிடுகிறார். சில திங்களுக்கு முன், பிரெஞ்சு மொழி பயிலும் வகுப்பு ஒன்றில் அவர் கலந்து கொண்டார். தற்போதைய சமூகம், கல்வியறிவின் மீது ஆர்வம் காட்டும் சமூகமாகும். ஓய்வு நேரம் அறிவை மேலதிகம் வளர்க்க முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.

"சக மாணவர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள் ஆகியோருடன் உரையாடிய போது, அவர்கள் வேறுபட்ட அளவில் கல்வி பயில்கின்றனர் என்று தெரிந்து கொள்கின்றேன். பிரெஞ்சு மொழி வகுப்பு முடிவடைந்த பின், திட்டப்பணிகளுக்கான வரவு செலவு பற்றிய ஓய்வு நேர வகுப்பு ஒன்றின் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளேன்" என்றார் அவர்.

தனது பணியில் பிரெஞ்சு மொழியைப் பயன்படுத்தும் வாய்ப்பு அவருக்கு குறைவு. படிப்பானது, வாழ்க்கையில் ஒரு வகை மகிழ்ச்சி என்று அவர் கருதுகிறார்.

சீனாவில் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன், பொது மக்களின் வாழ்க்கை, உணவு உடைக்கான தேவையிலிருந்து ஓரளவு வசதி படைத்த நிலையை எட்டியுள்ளது. பொருட்கள் செழுமையாக இருப்பதால், வாழ்க்கை தர மேம்பாடு மற்றும் தங்களது பண்பாட்டு உயர்வுக்கு பொது மக்கள் மேலும் பெரும் முக்கியத்துவம் தந்துள்ளனர். WANG QI QI போன்று ஓய்வு நேரத்தில் புதிதாக ஏதாவது படிக்க வகுப்புகளில் கலந்து கொள்ளும் மக்கள் மிக அதிகம்.

LU GU குடியிருப்புப் பகுதியின் தொண்டர்கள்

ஓய்வு நேரத்தில் சிலர் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். வேறு சிலர் சமூகத்துக்கு சேவை புரிகின்றனர். பெய்ஜிங் மாநகரிலுள்ள LU GU குடியிருப்புப் பகுதியில் வாழும் LI YONG FENG என்பவர், தனது ஓய்வு நேரத்தில் தொண்டராக சேவை புரிகிறார். LU GU குடியிருப்புப் பகுதியின் தொண்டர் சேவை மையம் 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் நிறுவப்பட்டது. 37 வயதான LI YONG FENG அப்போதுதான் இம்மையத்தில் சேர்ந்தார்.

சட்ட நீதித் துறையில் வேலை செய்யும் அவர் சிறப்பு சட்ட அறிவு கொண்டிருப்பதால், குடியிருப்பு பகுதியின் சட்ட அமைப்பு கட்டுமானத்துக்கான பிரச்சார சேவைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் அடிக்கடி தனது குழுவினர்களை அழைத்துச் சென்று, வேறுபட்ட பிரிவினருக்கான சட்ட அமைப்பு பற்றிய சிரமதான பிரச்சாரம் மற்றும் சேவை நடவடிக்கை மேற்கொள்கிறார். அவர் கூறியதாவது

சமூகத்துக்கு சேவை புரிகின்றனர்

"இவ்வாண்டு ஏப்ரல் திங்களில், பள்ளிகளில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டோம். முதலில், சட்ட விதிகள் பற்றி பிரச்சாரம் செய்வதோடு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் இணைந்து, சட்ட அமைப்பு பற்றி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தோம். பின்னர், கண்காட்சி பலகைகள், படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, போக்குவரத்து பாதுகாப்பு, தீ விபத்து தடுக்கும் அறிவு, தனது சட்டப்பூர்வ உரிமை மற்றும் நலனைப் பேணிக்காப்பது ஆகியவை பற்றி அவர்களுக்குப் பிரச்சாரம் செய்தோம்" என்றார் அவர்.

சீரான, ஆக்கப்பூர்வமான மற்றும் தனித்தன்மை வாய்ந்த ஓய்வு நேர ஆர்வமும் வாழ்க்கை முறையும், மக்களின் நிர்ப்பந்தத்தைத் தணிவு செய்யும் அதே வேளை, சீன மக்களின் சமூக வாழ்க்கையை மேலும் செழிப்பாகவும் இணக்கமாகவும் மாற்றியுள்ளன.


1 2