• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-16 14:47:21    
உள் மங்கோலியாவில் நடைமுறைக்கு வரும் தேசிய இனப் பிரதேசத் தன்னாட்சி அமைப்பு முறை பற்றி

cri

வட சீனாவில், ஒரு நீளமான குறுகிய அகலமுடைய பீடபூமி பிரதேசம் அமைந்துள்ளது. இதன் வடபகுதி, ரஷியா மற்றும் மங்கோலிய நாட்டை ஒட்டியமைந்துள்ளது. அழகான, பரந்துபட்ட உள் மங்கோலியத் தன்னாட்சி பிரதேசம் இதுவாகும். 1947ஆம் ஆண்டு, உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்டது. இது சீனாவில் மிக முன்னதாக நிறுவப்பட்ட சிறுபான்மை தேசிய இனத் தன்னாட்சி பிரதேசமாகும். இன்றைய நிகழ்ச்சியில், கடந்த 60 ஆண்டுகளாக உள் மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தில் சிறுபான்மை தேசிய இனத் தன்னாட்சி அமைப்பு முறையின் மேம்பாடு பற்றி அறிமுகப்படுத்துக்கின்றோம்.

60 ஆண்டுகளுக்கு முன், உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்டது பற்றி 92 வயதான மங்கோலிய இன முதியோர் ஒருவர் கூறியதாவது:

"அப்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. சிறுபான்மைத் தேசிய இனத்தவர்களான நாம், விடுதலை பெற்றோம். சிறுபான்மைத் தேசிய இனங்கள் நாட்டின் உரிமையாளராக மாறின. எங்கள் தலைவிதி எங்கள் கைகளில் உள்ளது" என்றார், அவர்.

60 ஆண்டுகளுக்கு முன், உள் மங்கோலியாவில் பல்வேறு சிறுபான்மை இன மக்கள் அல்லல்பட்டனர். 1947ஆம் ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சிறுபான்மை தேசிய இன தன்னாட்சி என்ற கோட்பாட்டின் படி, உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்டது. இத் தன்னாட்சிப் பிரதேசத்தில், பல்வேறு சிறுபான்மை தேசிய இனங்கள் சம நிலையில் இருக்கின்றன. அடக்கு முறையும், சுரண்டலும் அகற்றப்பட்டன. மிகப் பல பொது மக்கள், அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் உரிமையாளராக மாறியுள்ளனர்.

உள் மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தில், மங்கோலிய இன மக்கள் தொகை மிகவும் அதிகம். தவிர, தாவோர், Owenke, Elunchun, ரஷியா முதலிய 8 சிறுபான்மைத் தேசிய இனங்கள் இங்கே தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றன. சிறுபான்மை தேசிய இன தன்னாட்சி கொள்கையின் வழிகாட்டலுடன், உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தில் தாவோர், Owenke, Elunchun ஆகிய மூன்று சிறுபான்மைத் தேசிய இனத் தன்னாட்சி மாவட்டங்களும், 19 சிறுபான்மைத் தேசிய இன வட்டங்களும் அடுத்தடுத்து நிறுவப்பட்டுள்ளன. சிறுபான்மைத் தேசிய இனத்தவர்கள், உரிமையாளராக மாறி, தன்னாட்சி அதிகாரத்தை முழுமையாக செயல்படுத்தி, தன்னாட்சிப் பிரதேசத்தின் உள் விவகாரங்களை நிர்வகிக்கத் துவங்கினர்.

உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்து சிறுபான்மை தேசிய இன விவகாரக் குழுவின் துணைத் தலைவர் Cao Yan Rong அம்மையார் பேசுகையில், கடந்த பல ஆண்டுகளாக, உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேச அரசு, நிர்வாக அதிகாரத்தைத் தவிர, சட்டமியற்றல், மொழி மற்றும் எழுத்து, ஊழியர்களைப் பயிற்றுவித்தல் முதலியவற்றில் தன்னாட்சி அதிகாரத்தை உணர்வுபூர்வமாக செயல்படுத்தியுள்ளது என்றார்.

நிதித் தொகை ஒதுக்கீட்டில், உற்பத்தி, வாழ்க்கை, பண்பாடு, கல்வி உள்ளிட்ட துறைகளில், சிறுபான்மைத் தேசிய இன மக்களின் இன்னல்களைத் தீர்க்க, தன்னாட்சிப் பிரதேச அரசு ஆண்டுதோறும் சிறப்பு நிதித் தொகையை வழங்குகிறது.

வட கிழக்கு உள் மங்கோலியாவில் உள்ள Bayan Tuohai கிராமம், 10 ஆண்டுகளுக்கு முன், வறுமைக்கு பெயர் பெற்ற ஒரு கிராமமாகும். இக்கிராமவாசிகள், Owenke இனத்தையும், தாவோர் இனத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

நீண்டகாலமாக இவ்விரு இனத்தவர்கள் நாடோடி வாழ்க்கை நடத்துபவர்கள். இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் பின்தங்கியது. கடந்த சில ஆண்டுகளில், மக்கள் தொகை குறைவான சிறுபான்மை தேசிய இனங்களுக்கான ஆதரவை உள்ளூர் அரசு அதிகரித்துள்ளது. அரசின் ஆதரவுடன், பசுமாடு வளர்ப்பில் இக்கிராமம் ஈடுபட்டுள்ளது. கிராமவாசிகளின் நபர்வாரி வருமானம், பத்துக்கு அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 4 மடங்கு அதிகரித்துள்ளது. தாவோர் இனத்தைச் சேர்ந்த கிராமவாசி Sun Guan Suo செய்தியாளரிடம் கூறியதாவது:

"எங்கள் கிராமத்தில், சுமார் 30 முதியோர் வாழ்கின்றனர். ஆண்டுதோறும் 1500 யுவான் உதவித்தொகை அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அவர்கள் சிகிச்சை பெறும் போது, மருத்துவ அட்டையைப் பயன்படுத்தலாம். அவர்கள் மாவட்டத்தின் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் போது, சுமார் 60 விழுக்காட்டு மருத்துவ கட்டணத்தை அரசு ஏற்றுக்கொள்கிறது" என்றார், அவர்.

1 2