உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்து பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியுடன், பல்வகை சமூக துறைகள் பன்முகங்களிலும் வளர்ந்துள்ளன. இவற்றில், சிறுபான்மை தேசிய இனங்களின் கல்வியின் வளர்ச்சி மிக முனைப்பானது. 60 ஆண்டுகளுக்கு முன், உள் மங்கோலியாவில் 80 விழுக்காட்டுக்கு அதிகமானோர், எழுத படிக்க கல்வி தெரியாதவர்களாக இருந்தனர். தற்போது, தன்னாட்சிப் பிரதேசம் முழுவதிலும், 9 ஆண்டுகாலக் கட்டாயக் கல்வி, மிகப் பெரும்பான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இளம் வயதினர் மற்றும் வயதுவந்தோரிடையே எழுத்தறிவின்மை அடிப்படையில் ஒழிக்கப்பட்டுள்ளது. இது பற்றி, தன்னாட்சிப் பிரதேசத்தின் கல்வி ஆணையத்தின் துணைத் தலைவர் He Cheng Bao கூறியதாவது:
"முன்பு புல்வெளிப் பிரதேசத்தில் கல்வி அறிவு பெறாதவர்கள் எங்கெங்கும் வாழ்ந்தனர். வரிசையான சில மண் வீடுகளே பள்ளிகளாகும். புல்வெளியில், சிறுபான்மைத் தேசிய இன அடிப்படைக் கல்வி, குதிரையில் அமர்ந்தபடி கற்பது, கல்களால் கட்டியமைக்கப்படும் Kang என்னும் படுக்கையில் கற்பது ஆகியவற்றிலிருந்து வளர்கின்றது. இன்று 9 ஆண்டுகால கட்டாயக் கல்வி பரவல் செய்வது, பெரும் முக்கியத்துவம் வாயந்தது" என்றார், அவர்.

தவிர, உயர் நிலை கல்வியில், உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தனிச்சிறப்புக்கிணங்க, சில உயர் கல்வி நிலையங்களில் தனிச்சிறப்புடைய துறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, உள் மங்கோலிய சிறுபான்மை தேசிய இனப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டுள்ள 46 பட்டதாரி சிறப்பு துறைகளில், 16 சிறப்பு துறைகளின் பாடங்கள், மங்கோலிய மொழியில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் Wang Ding Zhu கூறியதாவது:

"இந்த 16 சிறப்புத் துறைகளில், மங்கோலிய மருத்துவவியல் துறை, மங்கோலிய மருந்துவியல் துறை, மங்கோலிய மொழி மற்றும் இலக்கியம், சிறுபான்மைத் தேசிய இன வெளியீட்டு மற்றும் பதிப்பு துறை, மங்கோலிய மொழி-ஹான் மொழி துறை இடம்பெறுகின்றன" என்றார், அவர்.
சிறுபான்மைத் தேசிய இனத்தவர்களுக்கான உயர் நிலை கல்வியைச் செவ்வனே நடத்துவது, சிறுபான்மைத் தேசிய இனத்தவர்களின் அறிவியல் மற்றும் பண்பாட்டு கல்வியறிவை உயர்த்த முடியும். இது மட்டுமல்ல, சிறுபான்மைத் தேசிய இனப் பண்பாட்டைக் கையேற்றி, வளர்க்கத் துணை புரியும். இதன் மூலம், சிறுபான்மை தேசிய இனப் பிரதேசத் தன்னாட்சி அமைப்பு முறையின் மேம்பாடு வெளிக்கொணரப்படுகின்றது என்று பல்கலைக்கழக வேந்தர் தெரிவித்தார். 1 2
|