வாணி -- க்ளீடட்ஸ், வழக்கம் போல நிகழ்ச்சியின் துவக்கத்தில் நேயர்களுடன் சேர்ந்து கடந்த வாரம் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்வோம்.
க்ளீட்டஸ் -- சரி. கடந்த வகுப்பில் வானிலை முன்னறிவிப்பு பற்றிய சில வாக்கியங்களைக் கற்றுக்கொண்டுள்ளோம்.
வாணி – ஆமாம். என்னை பின்பற்றி, மீளாய்வு செய்யுங்கள். 天气预报说, tian qi yu bao shuo
க்ளீட்டஸ் –天气预报说, tian qi yu bao shuo , வானிலை முன்னறிவிப்பு கூறுகின்றது என்பது இதன் பொருள்.
வாணி—இதற்கு பிறகு, வானிலை வர்ணிக்கும் வாக்கியத்தைச் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, 今天下午有雨。Jin tian xia wu you yu .இன்று பிற்பகல் மழை பெய்யும்.
க்ளீட்டஸ் --今天下午有雨。Jin tian xia wu you yu .இன்று பிற்பகல் மழை பெய்யும்.
வாணி—இவ்விரண்டு பகுதிகளைச் சேர்த்து வாசித்தால், 天气预报说,今天下午有雨。tian qi yu bao shuo, Jin tian xia wu you yu என்பதாகும்.
க்ளீட்டஸ் – எனக்கு புரிக்கிறது. நான் சொல்கின்றேன்.天气预报说,今天下午有雨。tian qi yu bao shuo, Jin tian xia wu you yu .
வாணி – சரி. அடுத்த வாக்கியம் பார்க்கலாம். நாளை பிற்பகல் கடும் காற்று வீசும் என்பதைச் சொல்ல வேண்டுமானால், 天气预报说,明天下午有大风。tian qi yu bao shuo, ming tian xia wu you da feng.
க்ளீட்டஸ் --天气预报说,明天下午有大风。tian qi yu bao shuo, ming tian xia wu you da feng.
வாணி – மேலும், உச்சரிப்பு பகுதியில் j என்ற முதல் ஒலியைக் கற்றுக்கொண்டோம்.
க்ளீட்டஸ் – ஆமாம். J
வாணி – மேலும் 2 சொல்கள். J-I , முதல் தொனி, ji என்பது தமிழில் கோழி என்பதாகும்.
க்ளீட்டஸ் -- J-I , முதல் தொனி, ji என்பது கோழி.
வாணி -- மேலும், J-I , முதல் தொனி, d-an, 4வது தொனி. Dan 鸡蛋, என்பது முட்டை.
க்ளீட்டஸ் – ஓ. J-I , முதல் தொனி, d-an, 4வது தொனி. Ji Dan 鸡蛋, என்பது தமிழில் கோழி முட்டை.
1 2
|