• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-23 17:51:20    
சீனாவின் மற்ற பிரதேசங்களில் சிங்கியாங் மாணவர்களுக்கான வகுப்புகள்

cri

மேற்கு சீனாவின் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஒதுக்குப்புறப் பகுதியில் வளரும் மாணவர்களைப் பொறுத்த வரை, சீனாவின் மற்ற பிரதேசங்களின் உயர் இடைநிலை பள்ளிகளில் கல்வி பயில்வது ஒரு கனவாகும். 2000ஆம் ஆண்டு சீனாவின் மற்ற பிரதேசங்களில் சிங்கியாங் மாணவர்களுக்கென சீன அரசு வகுப்புகளை துவங்கி வைத்தது. பின், வேறு ஊரில் சிங்கியாங் மாணவர்கள் கல்வி பெறும் கனவு எளிதில் நனவாக முடியும். தலைசிறந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மற்ற பிரதேசங்களின் உயர் இடைநிலை பள்ளிகளில் கற்றுக்கொண்டுள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில், சிங்கியாங் மாணவர்களுக்குத் துவங்கி வைக்கப்படும் உயர் இடைநிலை வகுப்புகள் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

நீண்டகாலமாக, வரலாறு, இயற்கை, பொருளாதாரம் உள்ளிட்ட காரணிகளின் பாதிப்பினால், சிங்கியாங் கல்வி துறைக்கும், பொருளாதார வளர்ச்சியடைந்த மற்ற பிரதேசங்களின் கல்வி துறைக்குமிடையே பெரும் இடைவெளி உள்ளது. சிங்கியாங்கில் பல்வேறு சிறுபான்மை தேசிய இனத் திறமைசாலிகளைப் பயிற்றுவிப்பதை விரைவுபடுத்தும் பொருட்டு, 2000ஆம் ஆண்டு பெய்சிங், ஷாங்காய், Tian Jin, Hang Zhou உள்ளிட்ட பொருளாதாரம் வளர்ச்சியடைந்த நகரங்களில், சிங்கியாங் மாணவர்களுக்கான உயர் இடைநிலை வகுப்பு நடத்த சீன அரசு தீர்மானித்துள்ளது. அங்குள்ள பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டைப் பயன்படுத்தி, எல்லைப் பகுதியில் பிறந்த சிறுபான்மைத் தேசிய இன மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த அரசு விரும்புகிறது.

2004ஆம் ஆண்டு உய்கூர் இன மாணவர் Xepghet, Hang Zhou ஆசிரியர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயர் இடைநிலை பள்ளியில், சிங்கியாங் மாணவர்களுக்கான வகுப்பில் தேர்வு மூலம் சேர்க்கப்பட்டார். இவ்வாண்டு அவர் மூன்றாவது வகுப்பில் கல்வி பயில்கின்றார். அவர் சிறந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளார். இது மட்டுமல்ல, அவர் கலையில் தேர்ச்சி பெற்றவர். மாணவர்கள் சங்கத்தின் துணைத் தலைவராகிய அவர், வகுப்புக்குப் பிந்திய நேரத்தில், செய்திச் சேகரிப்பு நடவடிக்கைகளில் அடிக்கடி ஏற்பாடு செய்து ஈடுபடுகிறார். Hang Zhou நகருக்கு வந்த பின், உள்ளூர் சக மாணவர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு Xepghetக்கு கிடைத்துள்ளது. கல்வி கற்கும் வேளையில், தனது திறமைகளையும் பெரும் முயற்சியுடன் உயர்த்த முயல்கின்றார். அவர் கூறியதாவது:

"எதிர்காலத்தில், பணி புரிவதற்கு கல்வியறிவு மட்டுமல்ல திறமையும் போட்டியிடப்படும். சில சமூக நிறுவனங்களின் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, எனது திறமையை உயர்த்துவதற்குத் துணை புரியும்" என்றார், அவர்.
தனது குழந்தை, மற்ற பிரதேசத்தில் கல்வி பயில்வது குறித்து, Xepghetவின் தாய் மிகவும் மகிழ்ச்சியடைகின்றார். அவருடைய தந்தை பேசுகையில், Xepghet மற்ற பிரதேசத்தின் உயர் இடைநிலை வகுப்பில் பயில தேர்ந்தெடுக்கப்பட்டதை கண்டு குடும்பத்தினர் அனைவரும் பெருமை அடைந்தனர் என்று கூறினார். இரண்டு ஆண்டுகள் கழிந்தது. Xepghetவின் நல்ல வளர்ப்பை குறித்து, பெற்றோர் மனநிறைவு அடைந்தனர். தாய் இவ்வகுப்புக்கு நன்றி தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"பொருளாதாரம் வளர்ச்சியடைந்த பிரதேசத்தில் பள்ளிகளின் கல்வி வசதியும், ஆசிரியர்களின் கல்வி அறிவும் சிறந்ததாக இருக்கின்றன. இவை, சிங்கியாங்கில் இருப்பதை விட மேம்பட்டுள்ளன" என்றார், அவர்.

1 2