• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-23 17:51:20    
சீனாவின் மற்ற பிரதேசங்களில் சிங்கியாங் மாணவர்களுக்கான வகுப்புகள்

cri

சிங்கியாங் மாணவர்கள், மற்ற பிரதேசங்களில் சிறந்த கல்வியை பெறும் பொருட்டு, பல்வேறு நகரங்களில் உள்ள புகழ் பெற்ற பள்ளிகளில் சிங்கியாங் மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையில், இவ்வகுப்புகளில், மிக தலைசிறந்த ஆசிரியர்கள் பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். இந்த ஆசிரியர்கள் கல்வி கற்பித்தலில் திறமை மிக்கவர். மட்டுமல்ல, அவர்கள் சிங்கியாங் மாணவர்களை, தங்களது குழந்தைகளாகக் கருதுகின்றனர்.

சிங்கியாங் மாணவர்களுக்கான உயர் இடைநிலை வகுப்புகள் நடத்தப்பட்டுள்ள கடந்த 7 ஆண்டுகளில், மகிழ்ச்சி தரும் சாதனை பெறப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளில் மொத்தம் 18 ஆயிரம் மாணவர்கள் இத்தகைய வகுப்புகளில் கல்வி பயின்றார்கள். 3400 மாணவர்கள் அங்கே பல்கலைக்கழகத்துக்கான நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களில், 90 விழுக்காட்டினர், உயர் கல்வி நிலையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். Tian Jin மாநகரின் 5வது இடைநிலைப்பள்ளியில் பயின்ற மாணவர் Behtiyar, அவர்களில் ஒருவராவார்.

இவ்வாண்டு Behtiyar, Tian Jin பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் தேர்வு மூலம் சேர்ந்தார். அவரது தந்தை இது பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகின்றார். சிறுபான்மை தேசிய இனக் கல்வியின் வளர்ச்சியை ஆதரிப்பதென்ற அரசின் கொள்கைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது:

"சீனாவின் மற்ற பிரதேசங்களில் சிங்கியாங் மாணவர்களுக்கான வகுப்புகளை அரசு நடத்துவது, சிறுபான்மைத் தேசிய இன மாணவர்களின் சீன மொழி நிலையை மேம்படுத்தி, மாணவர்களின் ஒட்டுமொத்தத் திறனை உயர்த்தி, சிங்கியாங்கின் கல்வி வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு பெரும் உதவி வழங்குகிறது. இவ்வகுப்புகளுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட மாணவர்களின் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையும் குறைந்துள்ளது. வறிய விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குழந்தைகளைப் பொறுத்த வரை, இது மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்றார், அவர்.

இதற்கிடையில், சிங்கியாங் மாணவர்களுக்கான வகுப்புகளை நடத்துவதில், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குழந்தைகளுக்கு சாதகமாக உதவி அளிக்கும் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவ்வகுப்புகளில், சிறுபான்மைத் தேசிய இன மாணவர்களின் எண்ணிக்கை, 90 விழுக்காடு வகிக்கின்றது. ஹான் இன மாணவர்களின் எண்ணிக்கை, 10 விழுக்காடு வகிக்கின்றது. இவ்வாண்டு, மாணவர்களுக்கான வகுப்புகளில், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குழந்தைகள், 60 விழுக்காடாக வகிக்கின்றனர்.

இவ்வாண்டு Tian Jin மாநகரில் உள்ள 5வது இடைநிலைப்பள்ளியிலிருந்து படிப்பு முடிந்த Dilxat தேர்வு மூலம், Ji Lin பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அவரின் குடும்பம் வறுமையானது. 4 ஆண்டுகளுக்கு முன், அவர் சிங்கியாங் மாணவர்களுக்கான வகுப்பில் சேர்க்கப்பட்ட போது, அவரது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஏனென்றால், மகனின் கல்விக் கட்டணத்தையும் வாழ்க்கைச் செலவையும் வழங்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை.

பள்ளியில் உணவு வகைகள் நன்றாக இருக்கின்றன என்றும், தனது ஆசிரியர் Corban திருநாள் அல்லது ரம்சான் திருநாளில், சாப்பிடுவதற்காக மாணவர்களை வெளியே அழைத்து போகின்றார் என்றும் Dilxat கூறினார். மாணவர்கள் நோய்வாய்பட்டால் ஆசிரியர்கள் சிகிச்சை பெற அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

சிங்கியாங் மாணவர்களுக்கான வகுப்புகளை நடத்தும் பணிக்கு, கல்வி அமைச்சகம், நிதி அமைச்சகம், வகுப்புகளை நடத்தும் நகரங்களின் அரசுகள் மற்றும் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேச அரசு பெரும் ஆதரவு அளித்துள்ளன. இது வரை, வகுப்புகளை நடத்தும் பள்ளிகளுக்கு மொத்தம் 40 கோடி யுவானை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

சிங்கியாங் மாணவர்களுக்கான வகுப்புகள், சிங்கியாங்கின் பல்வேறு சிறுபான்மை தேசிய இனங்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.


1 2