• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-26 15:04:14    
சான்துங் மாநிலப் பொருளாதார வளர்ச்சி

cri

சான்துங் மாநிலம், சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இது, பொருளாதார வளர்ச்சி கொண்ட மற்றும் பெருமளவிலான மக்கள் தொகை மிகுந்த மாநிலமாவதோடு, சீனாவின் மூல வளத்தில் அதிக நுகர்வு பெறும் மாநிலங்களிலும் ஒன்றாகும். அண்மையில், சான்துங்மாநிலம், சுற்று வட்ட பொருளாதார வளர்ச்சியிலிருந்து தொடங்கி, எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி, பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் ஒரு புதிய பாதையைக் கண்டறிந்துள்ளது. இதனால் சீரான சமூக மற்றும் பொருளாதாரப் பயன்களைப் பெற்றுள்ளது.

1958ம் ஆண்டில் கட்டப்பட்ட ji nan இரும்புருக்குக் குழுமத் தலைமை நிறுவனம், ஆண்டுக்கு ஒரு கோடி டன்னுக்கு மேலான உற்பத்தி திறன்கொண்ட ஒரு மாபெரும் இரும்புருக்குத் தொழில் நிறுவனமாகும். முந்திய காலங்களில், இந்நிறுவனம், இரும்புருக்கியதால் ஏற்பட்ட காற்று மற்றும் நீர் மாசுக்களால் சிக்கலானது. தற்போது, ji nan இரும்புருக்கு இயற்கை காட்சியைச் வளர்க்கும் இரும்புருக்குத் தொழில் நிறுவனமாகியுள்ளது என்பதை எமது செய்தியாளர் கண்டு கொண்டார்.

முந்திய ஆண்டுகளில், ji nan இரும்புருக்குத் தொழிற்சாலையின் தென்பகுதியிலுள்ள bao shanமலை ,ஒரு மரங்கள்ல்லாத மலையாகும். ji nan இரும்புருக்கு, தொழில் நிறுவனம் உள்ளுர் அரசுடன் உடன்படிக்கையில் கையொப்பமிட்டு, bao shan மலையைப் பசுமையாக்கும் முக்கிய பொறுப்பேற்றது. கடந்த 10 ஆண்டுகளாக, ji nan இரும்புருக்கு தொழில் நிறுவனத்தின் அனைத்து தொழிலாளர்களும் ஊழியர்களும் மரங்களை நட்டதோடு, செயற்கை ஏரியையும் ஏற்படுத்தியுள்ளனர். பலவித மீன்களை வளர்க்கும் வகையில், மறுசுழற்சி முறை மூலம், தூய்மை செய்யப்பட்ட, இரும்புருக்கியதால் ஏற்பட்ட கழிவு நீர், செயற்கை ஏரியில் விடப்பட்டது. ji nan இரும்புருக்கு தொழில் நிறுவனம் ஆராய்ந்த காற்றுக் கழிவு மறு சுழற்சி மறை மூலம் தூய்மையாக்கும் மின்னாக்கும் முறைமை, உலகில் முதலிடம் வகிக்கின்றது.

கடந்த ஆண்டுகளில், காற்று மாசுபாடு, எரியாற்றல் வீண் விரையம் ஆகியவற்றால் சுற்றுச் சூழல் மாசுபாடு ஏற்பட்டது. இப்புதிய திட்டப்பணி துவகிய பின், ஆண்டுதோறும், மாபெரும் பொருளாதாரப் பயனையும் சுற்றுச் சுழல் பயனையும் உருவாக்கியுள்ளது. மறு சுழற்சி முறையில் உருவாகும் பொருளாதாரத்தை வளர்ப்பது, பாரம்பரிய பெரும் தொழில் நிறுவனங்களின் மாற்றத்துக்கு துணை புரியும் அதே வேளையில், புதிய தொழில் நிறுவனங்களுக்கும் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குகின்றது. Shandong மாநிலத்தின் Jinan நகரத்திலுள்ள சீன கன ரக வாகன குழுமம், 1998ஆம் ஆண்டு FuQiang இயக்கு ஆற்றல் நிறுவனம் ஒன்றை நிறுவியுள்ளது. இந்நிறுவனம் பழைய விசைப்பொறிகளைப் புதிய விசைப்பொறிகளாக மாற்றுகின்றது. நாசமாகிய அல்லது கழிவாகிய விசைப்பொறிகளை மறுசுழற்சி செய்து, முறைவழியாக்கம் மூலம் அவற்றை மீண்டும் ஆக்கப்பூர்வ புதிய விசைப்பொறிகளாக மாற்றுகின்றது. இத்தகைய விசைப்பொறிகளின் செயல் திறன், புதிய இயந்திரத்துக்குச் சமமானது, அதன் விற்பனை விலையோ புதிய இயந்திரத்தின் விலையின் பாதியாக விளங்குகின்றது.

கடந்த சில ஆண்டுகளில், மீண்டும் தயாரான விசைப்பொறிகளைப் கன ரக வாகன குழுமம் பரவலாக்கும் நிலைமையைக் குறித்து, FuQiang இயக்கு ஆற்றல் நிறுவனத்தின் பொது மேலாளர் சாய்துங் கூறியதாவது:

தற்போது, நாடு முழுவதும் 600க்கு அதிகமான சேவைத் தலங்களும், 600க்கு அதிகமான விற்பனவு அமைப்புகளும் கனரக வாகன குழுமத்துக்கு உள்ளன. இவை மூலம், விசைப்பொறிகளை மறுசுழற்சி செய்கிறோம். இது மறு ஆக்கபூர்வ தொழிற்துறை பொருளாதாரப் பயனைக் விளைவிப்பதோடு, மாபெரும் சுற்றுச்சூழல் பயனையும் ஏற்படுத்துகின்றது. கடந்த சில ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட பழைய விசைப்பொறிகள், சீனாவின் சுமார் 59 இலட்சம் கிலோவாட் மணி எரியாற்றல் செலவுகளை குறைத்துள்ளன. ஏறக்குறைய 14 இலட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்துள்ளன.

1 2