• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-28 13:36:46    
சீன மக்களின் உணவு வழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்

cri

அண்மை காலத்தில் ஒரு வெள்ளிக்கிழமையின் காலை, பெய்ஜிங் மாநகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள YU QUAN XI LI குடியிருப்புப் பகுதியிலுள்ள பொழுது போக்கு அறை கோலாகலமாக காணப்பட்டது. தெளிவான ஒரு உரை இங்கே வழங்கப்பட்டு கொண்டிருந்தது. இவ்வுரையைக் கேட்ட 20க்கு அதிகமான முதியோர் இக்குடியிருப்புப் பகுதியில் வாழ்கின்றனர். அவர்களில் மிக இளமையானவருக்கு வயது 53. மிக முதுமையானவருக்கு வயது 81. குடியிருப்புப் பகுதி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் HAN RUI, உணவு மற்றும் கறிகளின் ஊட்டச்சத்து ஏற்பாடு பற்றி அவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

"ஒவ்வொரு நாளும் நாம் உண்ணும் உணவுப் பொருட்களில், அமிலமும் காரத்தன்மையும் கண்டிப்பாக இருக்க வேண்டும். எளிமையாகக் கூறினால், ஒரு வாய் இறைச்சிக்கு 4 முதல் 7 வாய் காய்கறி உண்ண வேண்டும். 4 வாய் காய்கறிக்குக் கீழ் குறைக்க கூடாது" என்றார் அவர்.

தற்போதைய சீனாவில், இத்தகைய உரை பரவலாக காணப்படுகிறது. உணவு மீதான சீன மக்களின் ஆர்வம், போதியளவிலான உணவு என்பதிலிருந்து, ஊட்டச்சத்து மிக்க மற்றும் உடல் நலத்துக்கான உணவு என்பதாக மாறி வருகிறது. மேற்கூறிய குடியிருப்புப் பகுதியில் வாழும் ZHAO GUI LAN அம்மையார், ஊட்டச்சத்து உணவு மற்றும் கறிகள் பற்றிய அறிவு மீதான சீன மக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது—

"புதிய சமூக நிலைமையில், எவ்வாறு உடல் நலத்துடன் வாழ்வது என்பது பற்றியும் எவ்வாறு தரமான வாழ்க்கை நடத்துவது என்பது பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். இன்பமான முதுமை காலத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டும்" என்றார் அவர்.

ZHAO GUI LAN அம்மையார் போன்ற முதியோர்கள் மட்டுமல்லாமல், இளைஞர்கள் பலரும், உணவு மற்றும் கறிகளின் நியாயத்துக்கு முக்கியத்துவம் தரத் துவங்கியுள்ளனர்.

உடல் நலப் பாதுகாப்பு மற்றும் உணவு சிகிச்சை என எழுதப்பட்ட நூல்

பெய்ஜிங் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள WANG FU JING நூல் கடையில், அந்நிய முதலீட்டு நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த MA JIAN ZHONG என்பவர், உடல் நலப் பாதுகாப்பு மற்றும் உணவு சிகிச்சை என எழுதப்பட்ட நூல் அலமாரிக்கு முன், பெருமளவு உட்கொள்ளப்படா தானியங்கள் பற்றிய நூல்களை தெரிவு செய்து கொண்டிருந்தார். இத்தகைய நூல்களில் கவனம் செலுத்துவது ஏன் என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் கூறியதாவது—

"மாணவராக இருந்த போது இவற்றில் கவனம் செலுத்தவில்லை. இளமையாகவும், உடல் நல நிலை நன்றாகவும் இருப்பதாக உணர்ந்தேன். வெளிநாட்டில் கல்வி பயின்ற காலத்தில் உடல் நலம் திடீரென மோசமடைந்தது. நாடு திரும்பிய பின், என் பெற்றோர் உணவு சிகிச்சை முறை மூலம் எனது உடல் நலத்தை மேம்படுத்தினர். தொடக்கத்தில் இம்முறையின் பயன் மிக மந்தமாக இருந்ததாகவே உணர்ந்தேன். ஆனால் சில திங்களுக்குப் பின், எனது உடல் நலம் சீராக மீட்கப்பட்டது. உணவு சிகிச்சை பயனுள்ளது என்று உணர்ந்தேன்" என்றார் அவர்.

1 2