• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-28 13:36:46    
சீன மக்களின் உணவு வழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்

cri

1988ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து உணவு மற்றும் கறிகளுக்கு வழிகாட்டல் என்ற கையேட்டை சீனா வெளியிட்டது. ஆனால், சுமார் 20 ஆண்டுகள் கடந்த இன்று தான், ஊட்டச்சத்து உணவு மற்றும் கறிகளில் சீன மக்கள் பரவலாக கவனம் செலுத்துகி்ன்றனர். இதற்கு காரணம் என்ன? சீன ஊட்டச்சத்து இயல் கழகத்தின் தலைமைச் செயலாளர் ZHAI XIU YING அம்மையார் இக்கையேட்டின் உருவாக்கத்தில் பங்கெடுத்தார். அவர் கூறியதாவது—

"முதலில், 1980ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், உணவு உடை பிரச்சினையைத் தீர்ப்பது என்பது நாட்டின் முக்கிய கடமையாக இருந்தது. ஊட்டச்சத்து பற்றி குறிப்பிடவில்லை. மறு புறம், நிதி ஆதரவு கிடைக்கவும் வாய்ப்பில்லை. 1990ஆம் ஆண்டுகளிலிருந்து 21வது நூற்றாண்டில் நுழையும் வரை, சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகம் பெரும் முயற்சியுடன் ஊட்டச்சத்து பற்றிய ஆய்வு நடத்தியுள்ளது. அத்துடன், தற்போதைய வாழ்க்கை நிலை உயர்ந்த பின், மேலும் உடல் நலத்துடன் இருக்கச் செய்யும் வகையில், ஊட்டச்சத்து பற்றிய அறிவு பொது மக்களுக்கு தேவைப்படுகிறது" என்றார் அவர்.

பெய்ஜிங் LING NAN பாலர் பள்ளி, பெய்ஜிங் மாநகரின் மேற்கு 4வது வளைய சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இப்பாலர் பள்ளியில் 4 சமையற்காரர்கள் 200க்கு அதிகமான சிறுவர்களுக்கு 3 வேளை உணவுகளையும் 2 வேளை சிற்றுண்டிகளையும் தயாரிக்கின்றனர். இப்பாலர் பள்ளியின் பொறுப்பாளர் LI JI HUA பேசுகையில், சீனக் கல்வி அமைச்சகம் கட்டாய விதிமுறையை வகுக்கவில்லை என்ற போதிலும், சீனப் பெருநிலப்பகுதியிலுள்ள பாலர் பள்ளிகளில் சிற்றுண்டி உள்ளிட்ட நாளுக்கு 3 உணவு வேளைகள், ஊட்டச்சத்து உணவு மற்றும் கறிகளுக்கு வழிகாட்டல் எனும் கையேட்டின் கோரிக்கைக்கு இணங்க தயாரிக்கப்படுகின்றன என்று கூறினார்.

அண்மையில், சீனச் சுகாதார அமைச்சகம், சீன ஊட்டச்சத்து இயல் கழகத்தின் உதவியுடன், சீனாவில் எவ்வாறு உணவு உண்பது என்பதை வகுக்கும் முதலாவது சட்டமான ஊட்டச்சத்து மேம்பாடு பற்றிய விதிமுறையின் வரைவுப் பணியை நிறைவேற்றியுள்ளது. 2007ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் முதல் நாளில் "ஒன்று இரண்டு ஒன்று" என்ற திட்டப்பணியின் முக்கிய அம்சங்களை சீனச் சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. சீன ஊட்டச்சத்து இயல் கழகத்தின் தலைமைச் செயலாளர் ZHAI XIU YING அம்மையார் இத்திட்டப்பணியின் முக்கிய அம்சங்களைப் பயன்படுத்தி, சீன மக்களிடையில் பரவலாக்கப்படும் நலமான உணவு வழக்கம் மற்றும் வாழ்க்கையைத் தொகுத்துக் கூறினார்.

"ஒன்று என்றால், ஒரு நாளில் 10 ஆயிரம் காலடிகள் நடக்க வேண்டும் என்பது பொருள். இரண்டு என்றால், உணவு மற்றும் கறிகளும் உடற்பயிற்சியும் சரிசமநிலையில் உள்ளன. மற்றொரு ஒன்று என்றால், வாழ்க்கையில் உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்பது பொருள்" என்றார் அவர்.

எமது செய்தியாளர் பேட்டிப் பணியை நிறைவேற்றிய போது, பெய்ஜிங் LING NAN பாலர் பள்ளியிலுள்ள சிறுவர்கள் நண்பகல் உணவை சாப்பிட்டு முடிந்தனர். ஆனால், பல் துலக்கிய பின், அவர்கள் உடனே படுக்கைக்கு செல்லவில்லை. அவர்கள் உலாவிச் செல்ல, உரக்க குரலில் பண்டைய சீனக் கவிதைகளை மனப்பாடம் செய்தனர். மேற்கூறிய "ஒன்று இரண்டு ஒன்று" என்ற திட்டப்பணியிலான முதல் இரண்டு கோரிக்கைகளைப் பின்பற்றும் வழக்கத்தை இந்தச் சிறுவர்கள் உருவாக்கியுள்ளனர் என்பதை இது காட்டுகிறது.


1 2