வாணி -- க்ளீடட்ஸ், வழக்கம் போல நிகழ்ச்சியின் துவக்கத்தில் நேயர்களுடன் சேர்ந்து கடந்த வாரம் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்வோம்.
க்ளீட்டஸ் -- சரி. கடந்த வகுப்பில் வானிலை முன்னறிவிப்பு பற்றிய சில வாக்கியங்களைக் கற்றுக்கொண்டுள்ளோம்.
வாணி – ஆமாம். என்னை பின்பற்றி, மீளாய்வு செய்யுங்கள். முதலில் சில புதிய சொற்கள். Jiang wen , 降温
க்ளீட்டஸ் -- கோடைகாலத்தில் மிகவும் வரவேற்கப்படும் சொல். Jiang wen , 降温, வெப்பம் குறையும்.
வாணி --明天降温。 Ming tian jiang wen.
க்ளீட்டஸ் -- Ming tian jiang wen. நாளை வெப்பம் குறையும்.
வாணி – 天气预报说,明天降温。 Tian qi yu bao shuo, ming tian jiang wen.
க்ளீட்டஸ் -- Tian qi yu bao shuo, ming tian jiang wen. நாளை வெப்பம் குறையும். குளிராக இருக்கும் என்று வானிலை முன்னறிவிப்பு கூறுகின்றது.
வாணி – கடந்த வாரம், உச்சரிப்பு பகுதியில் q என்ற முதல் ஒலியைக் கற்றுக்கொண்டோம்.
க்ளீட்டஸ் – ஆமாம். q
வாணி – நல்லது. மீண்டும் ஒரு முறை. q
க்ளீட்டஸ் – q
வாணி --天气,tian qi. T-i-an, முதல் தொனி, q-i, 4வது தொனி, tian qi
க்ளீட்டஸ் -- T-i-an, முதல் தொனி, q-i, 4வது தொனி, tian qi வானிலை.
வாணி – சரி. இப்போது, புதிய வகுப்பைத் துவக்கலாம். முதலில் புதிய சொல், 最高, zui gao. இங்கே, zui என்பது மிகவும் என்ற பொருள். Gao என்பது உயர்வு. 最高, zui gao. க்ளீட்டஸ் --最高, zui gao. மிகவும் உயர்வான
வாணி --最高, zui gao.
க்ளீட்டஸ் --最高, zui gao. மிகவும் உயர்வான
வாணி – அடுத்து, 最低, zui di. இங்கே 低 di என்பது தாழ்வு最低, zui di.
க்ளீட்டஸ் --最低, zui di. மிகவும் தாழ்ந்த
வாணி --最低, zui di.
க்ளீட்டஸ் --最低, zui di. மிகவும் தாழ்ந்த
வாணி -- 气温. qi wen, வெப்பநிலை.
க்ளீட்டஸ் --气温. qi wen, வெப்பநிலை.
வாணி – மீண்டும் ஒரு முறை, 气温. qi wen, வெப்பநிலை.
க்ளீட்டஸ் --气温. qi wen, வெப்பநிலை.
1 2
|