• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-30 16:55:58    
யுன்னான் மாநிலத்தில் சிறுபான்மை தேசிய இனப் பண்பாடு மீதான பாதுகாப்பு பற்றி

cri

யுன்னான் மாநிலம், சீனாவின் தென் மேற்கு எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. அங்கு 25 சிறுபான்மைத் தேசிய இனங்கள் வாழ்கின்றன. இதனால், உலகில் தனிச்சிறப்பு மிக்க சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டை இம்மாநிலம் கொண்டுள்ளது. நீண்டகாலமாக, இப்பண்பாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் யுன்னான் மாநிலம் பெரும் கவனம் செலுத்தி வருகின்றது. இத்துறையில், ஆக்கப்பூர்வ பயன் பெறப்பட்டுள்ளது.

இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, சீனாவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள, "யுன்னான் பற்றிய மனப்பதிவு" என்ற பெரிய ரக சிறுபான்மை தேசிய இன ஆடல் பாடலின் ஒருபகுதியாகும். யுன்னான் மாநிலத்தின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு மையத்தின் துணைத் தலைவர் Ni Jin Kui பேசுகையில், இந்த பெரிய ரக ஆடல் பாடல் அரங்கேற்றத்தில் வெளிப்படுத்தப்படும் சிறுபான்மைத் தேசிய இனக் கலை, தேசிய இனப் பண்பாட்டு கனியை யுன்னான் மாநிலம் பாதுகாப்பதை முக்கியமாக பிரதிபலிக்கின்றது என்றார். சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டைப் பாதுகாப்பதோடு, இப்பண்பாட்டுத் தொழிலை யுன்னான் மாநிலம் ஆக்கப்பூர்வமாக வளர்க்கின்றது. "யுன்னான் பற்றிய மனப்பதிவு" போன்ற சிறுபான்மை தேசிய இன ஆடல் பாடலை அரங்கேற்றி, தேசிய இனப் பண்பாடு மீதான பாதுகாப்பை, உள்ளூர் பொருளாதார வளர்ச்சியுடன் இணைத்து, பொருளாதாரத்தை வளர்க்கும் வேளையில், சிறுபான்மை தேசிய இனப் பண்பாடு மீதான பாதுகாப்பை விரைவுபடுத்துவது ஒரு நல்ல வடிவமாகும் என்றும் Ni Jin Kui தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"வளர்ச்சி அடையும் போக்கில், சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டை பாதுகாக்கின்றோம். இது, சமூக முன்னேற்றத்துக்கு ஏற்றது. சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டை மேலும் செவ்வனே பிரச்சாரம் செய்து, வளர்ப்பது, பாதுகாப்பின் நோக்கமாகும்" என்றார், அவர்.

சிறுபான்மை தேசிய இன வரலாற்றுப் பண்பாட்டு வளத்தைத் தோண்டி, தேசிய இனப் பண்பாட்டைக் கையேற்றி, பாதுகாத்து, வளர்க்கும் பொருட்டு, பல கொள்கைகளை யுன்னான் மாநில அரசு வெளியிட்டுள்ளது என்று Ni Jin Kui கூறினார். எடுத்துக்காட்டாக, 2000ஆம் ஆண்டின் மே திங்களில், "யுன்னான் மாநிலத்து சிறுபான்மை தேசிய இன மற்றும் நாட்டுப்புறப் பாரம்பரியப் பண்பாடு மீதான பாதுகாப்பு விதிகள்" வெளியிடப்பட்டு, நடைமுறைக்கு வந்தன. சீனச் சிறுபான்மை தேசிய இன மற்றும் நாட்டுப்புறப் பாரம்பரியப் பண்பாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முதலாவது பிரதேச சட்டவிதி இதுவாகும். யுன்னான் மாநிலத்தின் சிறுபான்மை தேசிய இன பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி, சட்ட அமைப்பு முறைமயமாக்கப் பாதையில் செல்வதை இது கோடிட்டுக்காட்டுகிறது. தவிர, சிறுபான்மை தேசிய இன மற்றும் நாட்டுப்புறப் பண்பாட்டு பாதுகாப்பு பற்றிய கள ஆய்வுப் பணியை யுன்னான் மாநிலம் மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதிலும், பல்வேறு சிறுபான்மை தேசிய இனங்களின் பழைமை வாய்ந்த ஆவணங்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. பழைமை வாய்ந்த நூல்கள், 10 ஆயிரத்துக்கு அதிகமான வகைகளில் இருக்கிறன. இந்த அடிப்படையில், சிறுபான்மை தேசிய இன மற்றும் நாட்டுப்புற உயர் நிலை நுண் கலை ஆசிரியர், சிறுபான்மை தேசிய இன மற்றும் நாட்டுப்புற நுண் கலை ஆசிரியர் மற்றும் நுண் கலை கலைஞர் என்ற பெயர்கள் 660 பேருக்கு அடுத்தடுத்து சூட்டப்பட்டுள்ளன. 80க்கு அதிகமான சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டு சூழல் பாதுகாப்பு கிராமங்களும் மண்டலங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளின் மூலம், யுன்னான் மாநிலத்தின் சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டுப் பாதுகாப்புப் பணி, அதிக பயன் பெற்றுள்ளது.

1 2