• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-30 16:55:58    
யுன்னான் மாநிலத்தில் சிறுபான்மை தேசிய இனப் பண்பாடு மீதான பாதுகாப்பு பற்றி

cri

Li Jiang என்னும் பழமை வாய்ந்த நகர், சுமார் 800 ஆண்டுகால வரலாறு உடையது. 1997ஆம் ஆண்டு உலகப் பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பெயர்ப்பட்டியலில் இந்நகர் சேர்க்கப்பட்ட பின், இந்நகர் மீதான பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துக்கென, பல்வேறு நிலை அரசுகளும், பல்வேறு சமூகத் துறைகளும் சுமார் 50 கோடி யுவான் ஒதுக்கீடு செய்துள்ளன. இதில், சுமார் 30 கோடி யுவான், இந்நகரின் பராமரிப்புக்கு நேரடியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிதித்தொகையினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பயன், Li Jiang நகரின் சுற்றுலா தொழிலின் வளர்ச்சியை முன்னேற்றுவதாகும். கடந்த பத்து ஆண்டுகளாக, சுற்றுலா பண்பாட்டுத் தொழிலின் தூண்டுதலுடன், Li Jiang நகரின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில், குறிப்பிடத்தக்க பயன் பெறப்பட்டுள்ளது. Li Jiang நகர பாதுகாப்பு நிர்வாக அலுவலகத் தலைவர் He Shi Yong பேசுகையில், சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டுப் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்குமிடை உறவை செவ்வனே கையாள்வது, Li Jiang நகர் விரைவாக வளர்வதற்குத் திறவுகோலாகும் என்றார். அவர் கூறியதாவது:

"பாதுகாப்பை, முதலிடத்தில் வைக்கும் கோட்பாட்டை எப்போதும் கடைப்பிடிக்கின்றோம். இதற்குப் பின், வளர்ச்சி மற்றும் நியாயமான பயன்பாடு. வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பயன் தான், மரபுச் செல்வப் பாதுகாப்பு லட்சியத்துக்கு உதவி அளிக்கிறது. ஒன்று, மற்றதன் குறைவை நன்றாக நிரப்பியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, Li Jiang நகரில், மரபுச் செல்வப் பாதுகாப்பும், சுற்றுலாத் தொழிலும் ஒருங்கிணைப்பாக வளர்ந்து வருகின்றன என்று ஐ.நா நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இனிமேல், பாதுகாப்புப் போக்கில், மரபுச் செல்வப் பாதுகாப்பு தொடர்பான விதிகள் மற்றும் சட்டங்களின் படி, ஒழுங்கான நிர்வாகம் மேற்கொள்வதைத் தவிர, அறிவியல் ஆய்விலும், சேவை மேம்பாட்டிலும் பாடுபட வேண்டும்" என்றார், அவர்.

தற்போது, சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டுத் தொழிலை வளர்க்கும் பொருட்டு, பண்பாட்டுத் தொழில் குழுக்கள், வெவ்வேறான பிரதேசங்களிலும், வெவ்வேறான தொழில்களிலும் அலுவல் செய்வதை ஊக்குவித்து, அதிக அரசு சாரா மூலதனம், பண்பாட்டுத் துறையில் நுழைவதை யுன்னான் மாநிலம் ஈர்த்துள்ளது. 2003ஆம் ஆண்டு முதல், யுன்னான் பற்றிய மனப்பதிவு கூட்டு நிறுவனம், Bai Lian He Shun சுற்றுலா பண்பாட்டு வளர்ச்சி கூட்டு நிறுவனம், Feng Chi Media முதலிய பல அரசு சாரா பண்பாட்டுத் தொழில் நிறுவனங்கள், யுன்னானின் பண்பாட்டு அரங்கில், முக்கிய பங்காற்றியுள்ளன.

யுன்னான் மாநிலத்தில் உள்ள, He Shun என்னும் பழமை வாய்ந்த பட்டிணம், "சீனாவில் ஈர்ப்பு ஆற்றமிக்க பட்டிணமாக அழைக்கப்படுகின்றது. இம்மாநிலத்தின் அரசு சாரா பண்பாட்டுத் தொழில் நிறுவனமான யுன்னான் Bai Lian He Shun சுற்றுலாப் பண்பாட்டு வளர்ச்சி கூட்டு நிறுவனத்தின் முதலீட்டுடன் இது வளர்க்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பொது மேலாளர் Wang Da San பேசுகையில், He Shun பட்டிணத்தின் பண்பாடு பாதுகாக்கப்பட்டு, கையேற்றப்பட்டு, வளர்க்கப்படுவது, He Shun பட்டிணத்துக்கு மட்டும் நன்மை பயக்கவில்லை என்றார். அவர் கூறியதாவது:

"கடந்த 4 ஆண்டுகளாக, அரசு Bai Lian He Shun கூட்டு நிறுவனத்தை உட்புகுத்தியுள்ளது. இங்குள்ள வேலை வாய்ப்பும், வரி வசூலிப்புத் தொகையும் அதிகரித்துள்ளன. He Shun பட்டிணத்துக்கு "சீனாவில் ஈர்ப்பு ஆற்றமிக்க நகர்" என்ற பெயர் சூட்டப்பட்டப் பின், இந்நகரின் சுற்றுலா பண்பாட்டுத் தொழில் வளர்ச்சியடைந்ததுடன், இந்நகரவாசிகளின் வருமானம் தெளிவாக அதிகரித்துள்ளது" என்றார், அவர்.


1 2