• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-03 16:49:51    
வளர்ச்சியடையும் உருமுச்சியின் பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தை

cri

இவ்வாண்டின் செப்டம்பர் திங்கள், 16வது உருமுச்சி வெளிநாட்டுப் பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தை சிங்கியாங் உயிகூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உருமுச்சியில் நடைபெற்றது. ஆண்டுக்கொருமுறை நடைபெறும் உருமுச்சி பேச்சுவார்த்தையும், பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகர்களை ஈர்த்து வருகிறது. இப்பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தை, சீனாவின் வட மேற்குப் பிரதேசத்தின் மிக முக்கிய சர்வதேசத் தன்மை வாய்ந்த பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

சிங்கியாங் உயிகூர் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவின் வட மேற்கு எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இப்பிரதேசம், பண்டைக்காலத்தில் பட்டுப் பாதையின் முக்கிய வழியாக இருந்தது. சிங்கியாங்கின் தலைநகர் உருமுச்சி, சீனாவின் மேற்குப் பகுதியில் வெளிநாட்டுத் திறப்புக்கான முக்கிய வாயிலாகவும் இருக்கிறது. சிறப்பு நிலவியல் அமைப்பு கொண்டிருப்பதால், உருமுச்சியில் வெளிநாட்டுத் திறப்புப் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகள் சுறுசுறுப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. உருமுச்சி நகராட்சி தலைவர் naiyimu yasen செய்தியாளர்களிடம் இது பற்றி அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:

உருமுச்சி, நிலவியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய ஆசிய நாடுகளின் வணிகர்கள் பலர், உருமுச்சியில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். சீனாவின் வளர்ச்சியடைந்த பல நகரங்களின் தொழில் முனைவோர் உருமுச்சியில் முதலீடு செய்துள்ளனர். கடந்த ஆண்டில், உருமுச்சியின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத் தொகை, 450 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. அதற்கு முந்தைய ஆண்டில் இருந்ததை விட 15 விழுக்காடு அதிகரித்தது.

உருமுச்சி பேச்சுவார்த்தை முறைமை 1992ம் ஆண்டில் நிறுவப்பட்டது. தலைசிறந்த புவிநிலை அமைவை கொண்டிருப்பதால், உருமுச்சி விரைவாக வளர்ந்து வருகிறது. கடந்த 15 உருமுச்சி பேச்சுவார்த்தைகளில், மொத்தம் 70 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 10 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டன. வெளிநாட்டு வர்த்தகத் தொகை ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபது கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இவ்வாண்டின் உருமுச்சி பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தையின் அளவு, வரலாற்றில் மிகப் பெரியதாக அமைந்தது. பொருட்காட்சியின் மொத்த பரப்பளவு 30 ஆயிரம் சதுர மீட்டராகும். ரஷியா, கசகஸ்தான், சிங்கப்பூர், இந்தியா, ஆஸ்திரேலியா, ஈரான், தென் கொரியா முதலிய நாடுகளின் சுமார் ஆயிரம் வெளிநாட்டு வணிகர்கள் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். உருமுச்சி பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தையின் அளவு, சீனாவின் வட மேற்குப் பிரதேசத்தில் முதலிடம் வகிக்கின்றது. இப்பேச்சுவார்த்தையின் தலைமை ஆணையத் துணை இயக்குநர் zhangye கூறியதாவது:

கடந்த 15 ஆண்டுகளில், சீனாவின் வட மேற்குப் பிரதேசத்தில் ஏன் மத்திய ஆசிய பிரதேசத்தின் மிகப் பெரிய அளவு மற்றும் செல்வாக்கு வாய்ந்த பன்நோக்குச் சர்வதேசப் பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையிலான மாபெரும் விழாவாக உருமுச்சி பேச்சுவார்த்தை மாறியுள்ளது. மேற்காசியாவுக்கான திறப்பு சன்னல் இதுவே ஆகும். உலகின் பல்வேறு நாடுகள், குறிப்பாக, மத்திய, மேற்கு மற்றும் தெற்காசியாவின் நாடுகளிடை பொருளாதார மற்றும் வர்த்தகத்தின் முக்கிய தொடர்புப் பாலமாக அமைந்துள்ளது.

1 2