• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-03 16:49:51    
வளர்ச்சியடையும் உருமுச்சியின் பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தை

cri

இப்பேச்சுவார்த்தை, மத்திய ஆசிய நாடுகளின் வணிக நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால்தான், மத்திய ஆசிய சந்தைக்குள் நுழைய விரும்பும் சீனத் தொழில் நிறுவனங்கள் இப்பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமாகப் பங்கு எடுக்கின்றன. பல இயந்திரத் தயாரிப்புத் தொழில் நிறுவனங்கள் இதில் அடங்கும். சாங்காயின் jiahao இயந்திரத் தயாரிப்பு நிறுவனத்தின் பொறுப்பாளர் zhujianjiang இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். தன் நோக்கத்தை விளக்கிய போது, அவர் கூறியதாவது:

இப்பேச்சுவார்த்தையில் நான் 6வது முறையாகக் கலந்துகொண்டேன். மத்திய கிழக்குப் பிரதேசம், கசகஸ்தான், தஜிக்ஸ்தான், ரஷியா ஆகியாவற்றில் எமது நிறுவனம் மற்றும் வணிகர்கள் உள்ளனர். இம்முறை, மத்திய ஆசியாவிலான வணிகத்தை முக்கியமாக நான் வளர்க்க வேண்டும். இவ்வாண்டின் வர்த்தகத் தொகை சுமார் 2 கோடி யுவானை எட்டும் என மதிப்பிட்டுள்ளோம் என்றார் அவர்.

இயந்திரச் சாதனத்தைத் தவிர, சீனாவின் மென்ரகத் தொழிற்துறையின் உற்பத்திப் பொருட்களும் இப்பேச்சுவார்த்தையில் மிகவும் வரவேற்கப்பட்டன. Zhejiang மாநிலத்தின் huadong பொழுதுபோக்கு விளையாட்டு வசதி நிறுவனம், வெளியில் மேற்கொள்ளப்படும் பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கான சாதனங்களைத் தயாரிக்கின்றது. இதன் வணிகர்கள் மத்திய ஆசிய நாடுகளிலிருந்து வருகின்றனர். இவ்வாண்டின் உருமுச்சி பேச்சுவார்த்தையில் சுமார் 10 லட்சம் யுவான் மதிப்புள்ள வர்த்தக உடன்படிக்கைகள் உருவாக்கப்பட்டன. குழந்தைகள் பொழுதுபோக்கு விளையாட்டு வசதிகளை அதிகம் நாடுவதால், மூலவளம், அரை உற்பத்திப் பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் பாதுகாப்பு மீது தாம் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றதாக சிங்கியாங்கிலுள்ள இந்நிறுவனத்தின் அலுவலகத்தின் மேலாளர் lixiujuan அம்மையார் செய்தியாளரிடம் அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:

இவ்வசதிகளைத் தயாரிக்கும் பிளாஸ்டிக், சுற்றுச் சூழல் பாதுகாப்பு கொண்ட மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டது. எல்லா உற்பத்திப் பொருட்களும், காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டன. இவ்விளையாட்டு வசதிகளில் விபத்து ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனம் இழப்புத் தொகையை வழங்கும். நமது பாதுகாப்பு மீது கவனம் செலுத்தப்படுகிறது என்றார் அவர்.

மத்திய ஆசியப் பிரதேசத்தில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள, பல வெளிநாட்டு நிறுவனங்கள், இப்பேச்சுவார்த்தையை, அவற்றின் சந்தைகளை விரிவாக்கும் சிறந்த வாய்ப்பாகக் கருதுகின்றன. தென் கொரிய shihan நிறுவனம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு உற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கின்றது. இந்நிறுவனத்தின் மேலாளர் jason park கூறியதாவது:

நான் இரண்டாவது முறையாக சிங்கியாங்குக்கு வருகின்றேன். உருமுச்சி பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தை, இப்பிரதேசத்தின் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஒன்றாகும். 1998ம் ஆண்டில் நிறுவப்பட்ட shihan நிறுவனம், தற்போது, சீனாவில் தூய்மையான தண்ணீரை வழங்கும் சாதனத் தொழில் நிறுவனங்களில் ஒரு சிறந்த தொழில் நிறுவனமாகும். தற்போது, சீனாவின் வட மேற்குப் பிரதேசச் சந்தையில் இந்நிறுவனம் நன்றாக வளர்ந்து வருகிறது. உருமுச்சி பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தை, மூலம் இந்நிறுவனம் பெரிய வளர்ச்சியடைய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

இவ்வாண்டின் உருமுச்சி பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தை, 5 நாட்கள் நீடித்தது. இதற்கிடையில், மொத்தம் 198 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டுப் பொருளாதார வர்த்தக உடன்படிக்கைகளில், சீன மற்றும் வெளிநாட்டு வணிகர்கள் கையொப்பமிட்டுள்ளனர். மொத்த உள் நாட்டு வர்த்தகத் தொகை ஏறக்குறைய 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியது.


1 2