க்ளீட்டஸ் -- இன்றைக்கு நண்டு வறுவல் பற்றி கூறுகின்றோம்.
வாணி -- ஆமாம். இலையுதிர்காலம், நண்டுகளைச் சாப்பிடுவதற்கு மிகவும் சாதகமான காலமாகும். பண்டைகாலம் முதல், நண்டு வறுவல், மது முதலிய உணவு வகைகளை உட்கொள்வது இரவில் அழகான சந்திரனைக் கண்டுகளிப்பது சீன மக்களின் பழக்கவழக்கமாகும். பல கவிஞர்கள் இந்த நிலைமையில், சந்திரனை பாராட்டும் பல சுவையான கவிதைகளை எழுதினர்.
க்ளீட்டஸ் -- அப்படியா, வாணி, இன்று நீங்கள் ஏதாவது கவிதை பாட போகிறீர்களா?
வாணி -- இல்லை இல்லை. இன்று சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி. பண்பாடு நிகழ்ச்சி அல்ல. கவிதையை விட, நண்டு வறுவல் பற்றி அறிந்து கொள்ள நேயர்கள் விரும்புகின்றனர் என்று நினைக்கின்றேன்.
க்ளீட்டஸ் -- எனது பண்பாடு நிகழ்ச்சியில் சந்திரனை புகழ்ந்து பாடும் கவிதைகள் இடம்பெறுவது தோன்றுகின்றது. சரிசரி, இந்த வறுவலுக்குத் தேவையான பொருட்களை நீங்கள் தெரிவிக்கவும்.
வாணி -- முதலில், பெரிய அளவுடைய நண்டுகள் இரண்டு தேவை. சிறியதாக இருந்தால், மேலும் அதிகமாக தேவைப்படும்.
பட்டாணி 100 கிராம் கறுப்பு மிளகுத் தூள் அரை தேக்கரண்டி பூண்டு 2 சோயா சாஸ் 1 தேக்கரண்டி கத்தரிக்காய் சாஸ் 1 தேக்கரண்டி சர்க்கரை 5 கிராம் உருளைகிழங்கு மாவு 15 கிராம் சமையல் எண்ணெய் 10 கிராம் வெங்காயம் தேவைப்படும் அளவு முட்டை 1
வாணி -- முதலில், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். 2 தேக்கரண்டி நீருடன் உருளைக்கிழங்கு மாவைக் கலந்து கொள்ளவும். முட்டையை நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். பூண்டுகளை மாவாக்க வேண்டும்.
க்ளீட்டஸ் -- பூண்டுகளை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிக்கொள்ளப்பட்ட பகுதியில், உருளைக்கிழங்கு மாவை DIPPING செய்ய வேண்டும்.
வாணி -- அடுப்பின் மீது வாணலியை வைத்து, சமையல் எண்ணெயை ஊற்றவும். 10 வினாடிக்கு பின், பூண்டு பொடிகளைத் தனித்தனியாக இதில் வைத்து, வறுக்கவும். பொன் நிறமாக மாறிய பின், இவற்றை வெளியே எடுக்கலாம்.
1 2
|