• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-06 15:35:06    
புதிய சோஷலிச கிராமப்புறத்தின் கட்டுமானம்

cri

தமிழன்பன்........கலை இன்றைய நிகழ்ச்சியில் இரண்டாவதாக விவாதிக்க போகின்ற தலைப்பு என்ன?

கலை.......2005ம் ஆண்டு நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 16வது மத்திய கமிட்டியின் 5வது முழுஅமர்வில் முன்வைக்கப்பட்ட புதிய சோஷலிச கிராமப்புறத்தை கட்டுவதென்ற குறிக்கோள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

தமிழன்பன்........ உற்பத்தி வளர்ச்சி, வசதியான வாழ்க்கை, கிராமப்புறத்தில் தார்மீக நாகரீகம், கிராமங்களில் சுத்தம், ஜனநாயக நிர்வாகம் ஆகியவை கொண்ட புதிய கிராமப்புறத்தை நிறுவுவது இந்த குறிக்கோளின் நோக்கம் அப்படிதானே.

கலை........ஆமாம். இக்குறிக்கோளை விபரமாக கூறினால் நான்கு பகுதியாக கூறலாம்.

தமிழன்பன்........அப்படியானால் நீங்கள் விபரமாக பகுதி பகுதியாக விளக்கிக் கூறுங்கள்.

கலை.......மகிழ்ச்சி. புதிய சோஷலிச கிராமப்புறத்தை நிறுவுவதில் முதலில் கிராமப்புற பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்ய வேண்டும். விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க வேண்டும். அப்புறம், கிராமபுறத்திலுள்ள வட்டங்களின் கட்டுமானத்தை மேம்படுத்தி கிராம சுற்றுச் சூழலை சீராக்க வேண்டும்.

தமிழன்பன்........சுற்றுச் சூழலை சீராக்கும் அதேவேளையில் கிராமப்புறத்தின் பொது சேவைத் துறையை விரிவாக்க வேண்டும் இதன் மூலம் சமூகத்தின் இணக்கத்தை முன்னேற்ற முடியும்.

1 2