• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-06 15:35:06    
புதிய சோஷலிச கிராமப்புறத்தின் கட்டுமானம்

cri

கலை.......ஆமாம் நான் கூற வேண்டிய மூன்றாவது பகுதியை நீங்கள் சரியாக சொன்னீர்கள். கடைசியான பகுதி என்ன? இது பற்றி கூற நீங்களே முயற்சியுங்கள்.

தமிழன்பன்.......முயற்சி செய்கின்றேன். இப்போது பொருளாதார வளர்ச்சி, சுற்றுச் சூழல் சீரமைப்பு, பொதுச் சேவை விரிவாக்கம் ஆகியவை பற்றி விவாதித்தோம். அப்புறம் விவசாயிகளுக்கு பயிற்சியளித்து அவர்களின் கல்வியறிவை உயர்த்த வேண்டும் என்பது நாம் மேற்கொள்ள வேண்டிய கடைசி வேலையாகும்.

கலை........சரியாக சொன்னீர்கள். புதிய சோஷலிச கட்டுமானத்தில் கிராமப்புற தார்மீக நாகரீக உருவாக்கம் சேர்க்கப்பட வேண்டும்.

தமிழன்பன்.......ஆமாம். தார்மீக நாகரீக உருவாக்கம் ஆரோக்கியமான நாகரீக சமூக வாழ்க்கையில் முக்கிய அம்சமாக கருதப்பட வேண்டும்.

கலை.......உண்மை. தார்மீக நாகரீகம் இல்லை என்றால் வேறு வளர்ச்சி காண முடியாது.

தமிழன்பன்........தார்மீக நாகரீகம் வளர்ந்து வரும் போக்கில் கிராமப்புறத்தின் பண்பாட்டு வசதிகளை முழுமையாக்க வேண்டும். விவசாயிகளின் தார்மீக பண்பாட்டு வாழ்க்கையை செழுமையாக்க வேண்டும்.

கலை......ஆமாம். விவசாயிகளின் தார்மீக வாழ்க்கையில் கவனம் செலுத்தும் அதேவேளையில் சிற்றூர் நிலை தன்னாட்சி குழுவை நிறுவ வேண்டும். விவசாயிகள் முன்முயற்சியுடனும் ஒழுங்கான முறையிலும் கிராமப்புற கட்டுமானத்தில் பங்கெடுப்பதற்கு வழிகாட்ட வேண்டும்.

தமிழன்பன்.........ஆகவே புதிய சோஷலிச கிராமப்புறத்தை நிறுவுவதில் சீன கிராமப்புற பொருளாதாரம், அரசியல், பண்பாடு, கல்வி, மருத்துவம், சுகாதாரம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு முதலிய துறைகள் அடங்கும்.

கலை.......இவ்வளவு அம்சங்கள் கொண்ட குறிக்கோள் தற்போதைய சீனாவின்"வேளாண்மை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகளுக்கான"பணிக்கு வழிகாட்டும் செயல் திட்டமாகும்.

தமிழன்பன்.......கலை இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் நாம் இணக்க சமூகத்தை கட்டியைமைப்பது பற்றியும், புதிய சோஷலிச கிராமப்புறத்தை நிறுவுவது பற்றியும் அதிகமாக விவாதித்தோம்.

கலை.......எங்கள் விவாதத்தின் மூலம் நேயர் நண்பர்கள் சீனா மேற்கொண்டிருக்கும் புதிய சோஷிலிச கிராமப்புற கட்டுமானம் பற்றி அறிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம்.

தமிழன்பன்.......கண்டிப்பாக நாம் விளக்கி கூறியதை கேட்டு சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கிராமப்புற வளர்ச்சி முயற்சியை அறிந்து கொள்வார்கள்.


1 2