• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-07 13:33:14    
புனித ஏரிக்கரையில் திபெத் இளைஞர் ஒருவரின் வாழ்க்கை

cri

Namucuo ஏரி

நேயர்களே,  என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மையப் பகுதியில் Namucuo ஏரி அமைந்துள்ளது. இது, உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்திலுள்ள உப்பு நீர் ஏரியாகும். திபெத் மொழியில், cuo என்பது ஏரி என்று பொருட்படும். திபெத் இன மக்களின் கருத்தில், Namucuo, ஒரு புனித ஏரியாகும். Namucuo ஏரிக்கரை புனிதமான இடமாகும்.

Namucuo ஏரியின் அருமையான காட்சிகள் மற்றும் எழில் மிக்க புராணக்கதைகள் அதிகப்படியான ஹஜ் திருப்பயணிகளை ஈர்த்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், Namucuo ஏரிக்கு வந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருகின்றது. சுற்றுலாத் தொழில் விரைவாக வளர்ந்து வருகின்றது. Namucuo ஏரிக்கு அருகில் வாழும் திபெத் இன ஆயர்கள் புல்வெளியிலிருந்து வெளியேறி, சுற்றுலா துறையில் ஈடுபடத் துவங்கினர். Gong Jue Ci Ta என்னும் திபெத் இன இளைஞர், அவர்களில் ஒருவராவார்.

ஹஜ் திருப்பணிகள்

Namucuo ஏரிக்கரையில், Gong Jue Ci Taவை எதேச்சையாகச் சந்தித்தோம். அன்று, எல்லையற்ற, தெளிவான Namucuo ஏரியை பார்த்து நான் மகிழ்ச்சியுடன் பாராட்டி ரசித்துக் கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் என்னை நோக்கி நடந்து வந்தார். "வணக்கம்! உங்களுக்கு படம் எடுக்க வேண்டுமா" என்று சரளமான சீன மொழியில் அவர் கேட்டார். குரல் கேட்டு நான் திரும்பியதும், திபெத் இன இளைஞர் ஒருவர் நின்றிருந்தார். அவர் வலிமையான உடல் கொண்டவர். வண்ணமிகு திபெத் மேலாடையையும் உள்ளூர் பிரதேசத்தில் பொதுவாக காணப்படும் ஆயர் தொப்பியையும் அணிந்திருந்தார். உரையாடல் மூலம், அவரின் பெயர் Gong Jue Ci Ta.. Namucuo ஏரியின் வடக் கரையில் உள்ள Qiang Tang புல்வெளியில் அவர் வசிக்கின்றார் என்று அறிந்து கொண்டேன். முன்பு அவர் புல்வெளியில் ஆடுமாடுகளை மேய்த்தார்.

கடந்த சில ஆண்டுகளாக, மேலதிக பயணிகள் Namucuo ஏரிக்கு வந்து பயணம் செய்துள்ளனர். சுற்றுலாத் தொழிலின் வளர்ச்சியில் ஆயர்கள் பங்கெடுக்க அரசு ஊக்கமளித்துள்ளது. இதனால், Gong Jue Ci Ta, எருமை ஒன்றைக் கொண்டு வந்து, புனித ஏரிக்கரையில் பயணிகளுக்காக படம் பிடிக்கும் தொழிலில் ஈடுபடத் துவங்கினார்.

Namucuo ஏரிப் பிரதேசத்தின் நீல வானம், தெளிவான ஏரி நீர், பனி நிறைந்த சிகரம் ஆகியவை, உலகின் பல்வேறு இடங்களின் பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன. தேசிய ஆடையை அணியும் இந்த திபெத் இன இளைஞரும், அவரது எருமையும் இப்புனித இடத்துக்கு எழில் ஊட்டுவதாக அமைந்துள்ளன. ஆண்டுதோறும் மே திங்கள் முதல் அக்டோபர் திங்கள் வரை, விறுவிறுப்பான சுற்றுலா காலமாகும். பயணிகள், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து Namucuo ஏரிக்கு வருகை தருகின்றனர்.

அப்போது, Ci Ta நாள்தோறும் ஏரிக்கு வந்து, பயணிகளைப் படம் பிடித்து தந்தார். நாள் ஒன்றுக்கு, சுமார் 200 யுவானை அவர் ஈட்டுகின்றார். நகரில் வேலை செய்யும் அதிகாரியின் வருமானத்தை விட இது அதிகம். Namucuo ஏரிக்கு அருகில் வசிக்கும் ஆயர்களுக்காக வீடுகளை அரசு கட்டியமைத்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆயர்கள் குடியிருப்பு இடத்தில் வாழ்கின்றனர். முந்திய அலைந்து திரியும் மேய்ச்சல் வாழ்க்கையை தற்போது அவர்கள் நடத்தவில்லை. அவர்களின் வருமானம் நிதானமானதாகியுள்ளது. சுற்றுலா துறையில் ஈடுபடுவதால், Ci Taவின் வருமானம், முன்பை விட பெருமளவில் அதிகரித்துள்ளது. அவர் கூறியதாவது:

"விறுவிறுப்பான சுற்றுலா காலத்தில், நாளுக்கு 200 யுவான் ஈட்டுகின்றேன். அன்றாட வாழ்க்கைச் செலவைத் தவிர்ந்த நிகர வருமானம், 7-8 ஆயிரம் யுவானை எட்டலாம். ஒரு குடும்பத்தின் ஓராண்டு செலவுக்கு இது போதுமானதாக இருக்கிறது" என்றார், அவர்.

முன்பு, கால் நடை வளர்ப்பு ஆயர்களின் வருமானத்தில் முக்கிய பங்கு வகித்தது. எருமைகள் மற்றும் ஆடுகளின் எண்ணிக்கை, குடும்பத்தின் சொத்தின் அடையாளமாக இருந்தது. தற்போது, சுற்றுலாத் தொழில், உள்ளூர்வாசிகளின் வருமானத்தில் முக்கிய பங்களிப்பாக மாறியுள்ளது. குளிர்காலத்தில் பயணிகள் குறைவாக இருக்கும் போது மட்டுமே, அவர்கள் புல்வெளிக்குத் திரும்பி, நாடோடி வாழ்க்கை நடத்துகின்றனர் என்று Ci Ta தெரிவித்தார்.

நாள்தோறும் விடியற்காலையில், Ci Ta உணவுகளைக் கொண்டு, குதிரை சவாரி செய்து, தனது வீட்டை விட்டுப் புறப்படுகிறார். சுமார் 2 மணி நேரத்துக்குப் பின், Namucuo ஏரியை அடைகின்றார். Namucuo ஏரியை அடைந்ததும், வீட்டிலிருந்து கெண்டு வந்த அவரைகளை எருமைக்கு ஊட்டுகிறார். எருமை, Ci Taவின் மிக உற்ற கூட்டாளியாகும். இதற்குப் பின், Ci Ta பயணிகளுக்காக படம் பிடிக்கத் துவங்குகின்றார். நண்பகலில், அவரின் நண்பகல் உணவு, வீட்டிலிருந்து கொண்டு வந்துள்ள கோதுமை ரொட்டி, இறைச்சித்துண்டு மற்றும் காய்ந்த மாட்டிறைச்சி ஆகும். சில சமயங்களில், அவர் ஏரிக்கு அருகில் உள்ள ஒரு தேநீரகத்தில், மூன்று யுவானை செலவிட்டு, நெய் தேனீர் குடிக்கின்றார். மாலை 5 அல்லது 6 மணியளவில், Ci Ta குதிரைச் சவாரி செய்து, வீட்டுக்குத் திரும்புகின்றார். படப் பிடிப்பில் பயன்படுத்தப்படும் எருமைகள் மேன்மையானவை. இரவில், புனித ஏரிக்கரையில் அவை மேய்ந்து, ஓய்வு பெற்று, அடுத்த நாள் உரிமையாளரின் வரவுக்காக காத்திருக்கின்றன.

இவ்வாறு, Ci Ta Namucuo ஏரிக்கரையில் பயணிகளுக்காக படம் பிடிப்பதில் ஈடுபட்டு, மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பயணிகளுடன் மேலும் செவ்வனே தொடர்பு கொள்ளும் வகையில், அவர் சீன மொழியைக் கற்றுக்கொண்டார். தற்போது, சரளமான சீன மொழியில், சீனாவின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த நண்பர்களுடன் அவர் உரையாட முடியும். எதிர்காலம் பற்றியும், வெளியுலகம் பற்றியும் குறிப்பிடுகையில், நகரவாசிகளின் வாழ்க்கை மீது தாம் பொறாமைப்படவில்லை என்று அவர் கூறினார். தற்போது தனது வாழ்க்கை மிகவும் இன்பமானது என்றும், Namucuo ஏரிக்கு அருகில் வாழ்வது மிக அதிர்ஷ்டமானது என்றும் அவர் கூறினார். தாம் மிகவும் இன்பம் மற்றும் மகிழ்ச்சி அடைவதாக அவர் கருதுகின்றார்.

1 2