• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-07 13:33:14    
புனித ஏரிக்கரையில் திபெத் இளைஞர் ஒருவரின் வாழ்க்கை

cri

திபெத் மக்கள்

"Namucuo ஏரி, திபெத் இன மக்களின் கருத்தில், புனித ஏரியாகும். இந்த ஏரிக்கரையில் வாழ்வது, எனது அதிர்ஷ்டம். நாள்தோறும், புனித ஏரி, பனி நிறைந்த மலை, புல்வெளி, திபெத் மறிமான் ஆகியவற்றைக் காண்பது, எனக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது. இந்த இடம், எனது சுவர்க்கம்" என்றார், அவர்.

திபெத்தின் மூன்று புனித ஏரிகளில், Namucuo ஏரி முதலிடம் வகிக்கின்றது. திபெத் மக்களின் மனத்தில், Namucuo ஏரி உயர்வான இடத்தில் உள்ளது. திபெத் இனத்தின் பாரம்பரியத்துக்கிணங்க, Namucuo ஏரி உயிருடன் இருக்கிறது என்று Ci Ta செய்தியாளரிடம் கூறினார்.

விறுவிறுப்பான சுற்றுலாத் தொழில், உள்ளூர் பிரதேசத்துக்கு அதிக பொருளாதாரப் பயனைத் தந்துள்ளது. ஏரிக்கரையில் உள்ள உயர்வான இடத்தில் வெவ்வேறான கூடாரங்கள் காணப்படலாம். அவற்றில், உணவகங்கள், விடுதிகள் மற்றும் தேநீரகங்கள் இடம்பெறுகின்றன. கடந்த ஆண்டு, சிங்காய்-திபெத் இருப்புப்பாதை போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டப் பின், இங்கு பயணிகளின் எண்ணிக்கை தெள்ளத்தெளிவாக அதிகரித்துள்ளது. Ci Ta கூறியதாவது:

Namucuo ஏரி

"சிங்காய்-திபெத் இருப்புப்பாதை போக்குவரத்து தொடங்கியது முதல், இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எங்கள் வியாபாரம் நாளுக்கு நாள் சிறப்படைந்து வருகிறது. பயணிகள் எங்கே இருந்து வந்தாலும், அவர்களுக்கு செவ்வனே சேவை புரிகின்றோம்" என்றார், அவர்.

நாங்கள் இங்கிருந்து வெளியேறிய போது, சீன வானொலி நிலையத்தின் நிகழ்ச்சியின் மூலம், உலகளவிலான நண்பர்களுக்கு Ci Ta உளமார்ந்த அழைப்பை விடுத்தார். அவர் கூறியதாவது:

"அன்னிய நண்பர்களே! திபெத்துக்கு வாருங்கள். புனித Namucuo ஏரிக்கு வாருங்கள். இந்த இடம் மிகவும் அழகானது. நீங்கள் இங்கு வந்தால், உங்களுக்கு சேவை புரியப் பாடுபடுவோம்" என்றார் அவர்.

எங்களை வழி அனுப்பும் பொருட்டு, Ci Taஉம், அவரது திபெத் நண்பர்கள் சிலரும் Namucuo ஏரி பிரதேசத்தின் நாட்டுப்புறப்பாடலைப் பாடினர்.

இனிமையான பாட்டு ஒலி, புனித ஏரிக்கரையில் வீசுகிறது. அழகான புனித ஏரி, வானத்தின் நட்சத்திரங்களைப் போல் பளபளப்பாக இருக்க வேண்டும் என்றும், புனித ஏரிக்கரையில் வாழும் மக்கள் என்றுமே இன்பமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.


1 2