• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-12 09:42:34    
தமிழ் மூலம் சீனம் பாடம் 109

cri

வாணி -- க்ளீடட்ஸ், வழக்கம் போல நிகழ்ச்சியின் துவக்கத்தில் நேயர்களுடன் சேர்ந்து கடந்த வாரம் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்வோம்.

க்ளீட்டஸ் -- சரி. கடந்த வகுப்பில் வானிலை பற்றிய வாக்கியங்களைக் கற்றுக்கொண்டோம்.

வாணி – ஆமாம். என்னை பின்பற்றி, கற்று கொண்டதை மீளாய்வு செய்யுங்கள்.
முதலில் 下雨了,xia yu le. மழை பெய்கிறது. நீங்கள் வெளியில் உள்ள போது, திடீரென மழை பெய்ததால், இந்த வாக்கியத்தைப் பயன்படுத்தலாம். 下雨了,xia yu le.

க்ளீட்டஸ் --下雨了,xia yu le. மழை பெய்கிறது.

வாணி – அதே போல், குளிர் காலத்தில் வெளியே பனி பெய்ததைப் பார்த்தால், நீங்கள் 下雪了。xia xue le. என்பதைக் கூறலாம்.

க்லீட்டஸ் --下雪了。xia xue le. பனி பெய்கிறது.

வாணி – அடுத்து, 起风了。Qi feng le.

க்ளீட்டஸ் --起风了。Qi feng le. காற்று வீசுகிறது.

வாணி – கடந்த வாரம், உச்சரிப்பு பகுதியில் Z, c என்ற 2 ஒலியைக் கற்றுக்கொண்டோம். முதலில், z, க்ளீட்டஸ், நீங்கள் உச்சரியுங்கள்.

க்ளீட்டஸ் – Z

வாணி --最 zui, என்பது மிகையானது.

க்ளீட்டஸ் --最 zui, என்பது மிகையானது.

வாணி --最高,zui gao, z-ui 4வது தொனி, g-ao, முதலாவது தொனி. 最高,zui gao

க்ளீட்டஸ் --最高,zui gao, z-ui 4வது தொனி, g-ao, முதலாவது தொனி. 最高,zui gao

வாணி – அடுத்து, c

க்ளீட்டஸ் – c

வாணி –菜单,cai dan。c-ai 4வது தொனி, d-an, முதலாவது தொனி. 菜单,cai dan。

க்ளீட்டஸ் --菜单,cai dan。 c-ai 4வது தொனி, d-an, முதலாவது தொனி. 菜单,cai dan。

வாணி – சரி. இப்போது, புதிய வகுப்பைத் துவக்கலாம். முதலில், 天晴了,tian qing le. வானிலை தெளிவாகி விட்டது. 晴, qing, 3வது தொனி,晴, qing என்பது வெயில் என்பதாகும். 天晴了,tian qing le.

க்ளீட்டஸ் --天晴了,tian qing le. வானிலை தெளிவாகி விட்டது.

வாணி – மீண்டும் ஒரு முறை, 天晴了,tian qing le.

க்ளீட்டஸ் --天晴了,tian qing le.

வாணி – அடுத்து, 雨停了,yu ting le. மழை நின்றுவிட்டது. 停, t-ing, 2வது தொனி, 停, t-ing, என்பது நிற்பது என்பதாகும். 雨停了,yu ting le.

க்ளீட்டஸ் --雨停了,yu ting le. மழை நின்றுவிட்டது.

வாணி --雨停了,yu ting le.

க்ளீட்டஸ் --雨停了,yu ting le. மழை நின்றுவிட்டது.

வாணி – அடுத்து, 风小了,feng xiao le. 风, காற்று, 小,xiao, முன்பு கற்றுக் கொண்ட சொல்லாகும். 小,xiao, என்பது சிறியது. ஆனால், இங்கே காற்றை வர்ணிக்கும் போது மெல்ல என்ற பொருள். 风小了,feng xiao le. காற்று மெல்ல வீசுகிறது.

க்ளீட்டஸ் --风小了,feng xiao le. காற்று மெல்ல வீசுகிறது.

வாணி --风小了,feng xiao le. காற்று மெல்ல வீசுகிறது.

க்ளீட்டஸ் --风小了,feng xiao le. காற்று மெல்ல வீசுகிறது.

வாணி – இனி, ஆண்டின் 4 பருவங்கள் பற்றி கற்றுக்கொள்கின்றோம்.

க்ளீட்டஸ் – தமிழில் இவை, வசந்தகாலம், கோடைக்காலம், இலையுதிர்காலம், குளிர்காலம் என்பதாகும்.

1 2