• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-14 15:50:03    
Gui Zhou மாநிலத்தின் Shui இனம் பற்றி

cri

சீனாவின் பல சிறுபான்மைத் தேசிய இனங்களில், தென் மேற்கு சீனாவின் Gui Zhou மாநிலத்தில் வாழும் Shui இனம், சொந்த மொழி மற்றும் எழுத்துக்கள் கொண்ட சிறுபான்மைத் தேசிய இனங்களில் ஒன்றாகும். இன்றைய நிகழ்ச்சியில், "Shui இனம் பற்றி" அறிமுகப்படுத்துகின்றோம்.

நேயர்களே, இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, Shui இனத்தின் மதுபானம் அருங்துவோம் என்ற பாடல். விருந்தோம்பல் மிக்க Shui இன மக்கள், தொலைவில் உள்ள இடங்களிலிருந்து வரும் விருந்தினர்களை வரவேற்கும் போது, மதுபானம் அருந்த அழைப்பதன் மூலம் விருந்தினர்களுக்கான வரவேற்பை தெரிவிக்கின்றனர். Gui Zhou மாநிலத்தின் San Du Shui இனத் தன்னாட்சி மாவட்டம், சீனாவில் உள்ள ஓரே Shui இனத் தன்னாட்சி மாவட்டமாகும். நீண்டகால வரலாறுடைய இம்மாவட்டத்தில், எழில் மிக்க இயற்கைக் காட்சிகள் காணப்படுகின்றன. இங்குள்ள Shui இனப் பண்பாடு, தனித்தன்மை வாய்ந்தது. இதனால், இங்குள்ள Shui இனக் கிராமங்கள், Gui Zhou மாநிலத்தின் முக்கிய பழஞ்சமூக வாழ்க்கை சுற்றுலா சின்னமாக மாறியுள்ளன. கடந்த ஆண்டு, Shui இனப் பண்பாட்டு உதாரணமான Shui Ge கிராமம், இம்மாநிலத்தின் புதிய கிராம வளர்ச்சிக்கான சோதனை திட்டப்பணிகளில் சேர்க்கப்பட்டது. உள்ளூர் பிரதேச அரசு பழஞ்சமூக வாழ்க்கை சுற்றுலாவை பெரிதும் முன்னேற்றி வருகிறது. தற்போது Shui Ge கிராமத்தில் மாற்றம் காணப்பட்டுள்ளது என்று உள்ளூர் அதிகாரி Hu Xue Li அம்மையார் கூறினார். அவர் கூறியதாவது:

"2005ஆம் ஆண்டில், மாவட்ட அரசு Shui Ge கிராமத்தில் சுற்றுலா தொழிலை வளர்க்கத் தொடங்கி, 3 ஆண்டுகள் ஆகின்றன. Shui Ge கிராமத்தில் அதிக மாற்றங்கள் காணப்பட்டுள்ளன. பொது மக்கள் செல்வடைந்துள்ளனர். கிராமச் சூழலும், நிர்வாகமும் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகின்றன. சுற்றுலாத் தொழிலை வளர்த்த பின், கடந்த ஆண்டு, Shui Ge கிராமத்தின் நபர்வாரி நிகர வருமானம் 1883 யுவானை எட்டியுள்ளது. நபருக்கு 376 கிலோகிராம் தானியம் கிடைத்தது" என்றார், அவர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், சுற்றுலாத் தொழிலின் வளர்ச்சியினால், Shui Ge கிராமத்தின் தோற்றம் மென்மேலும் அதிகமாக காணப்பட்டுள்ளது. தனித்தன்மை வாய்ந்த மரப்பலகை கட்டமைப்பு வீடுகள், அடுக்கு வயல், சித்திர வடிவ எழுத்துக்கள், இனிமையான Shui இனப் பாடல்கள் ஆகியவை, Shui இனச் சுற்றுலாவில் இடம்பெறுகின்றன. இவை மேலதிக பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. மலைக்கிராமத்தில் வாழும் Shui இனத்தவர்கள், பயணிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம், செழிப்பான வெளியுலகத்தை புரிந்துக் கொள்ளத் துவங்கினர். Shui இனப் பாரம்பரிய பண்பாடு மீது வெளியுலகம் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளதை அவர்கள் படிப்படியாக அறிந்து கொண்டுள்ளனர். இதனால், சுற்றுலாத் தொழிலின் தூண்டுதலுடன், மறக்கப்பட்டிருந்த Shui இன இசை மற்றும் நடனத்தின் உயிராற்றல் தூண்டி எழுப்பப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தொழிலின் வளர்ச்சி, சொந்த பாரம்பரிய பண்பாடு மீதான Shui இனக் கிராமவாசிகளின் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் முன்னேற்றியுள்ளது. Shui இனப் பெற்றோர்கள் பலர், Shui இனக் கலையை அடுத்த தலைமுறையினருக்குக் கையேற்றியுள்ளனர். பள்ளிகளில் பூத் தையல் உள்ளிட்ட பாடங்கள் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. Shui Ge கிராமவாசி Wu Hong Zhuan பேசுகையில், தேசிய இனப் பண்பாட்டின் கையேறுதலும், நாட்டுப்புற வாழ்க்கை சுற்றுலாவும் ஒன்று மற்றதைத் தூண்டுவதால், கிராமவாசிகளின் வாழ்க்கை செழிப்பாகியுள்ளது என்றார். Shui இன மக்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர்.

1 2