• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-14 15:50:03    
Gui Zhou மாநிலத்தின் Shui இனம் பற்றி

cri

உண்மையில், கடந்த சில ஆண்டுகளாக, தேசிய இன உயிரின வாழ்க்கைச் சூழல் சுற்றுலா மற்றும் தேசிய இன உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பை Gui Zhou மாநிலம் பெரிதும் விரைவுபடுத்தும் ஒரு மாதிரியாக Shui Ge கிராமம் மாறியுள்ளது. சீனாவின் பல்வேறு நிலை அரசுகளின் தலைமையில், Gui Zhou மாநிலத்தின் பல்வேறு சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்கள், உள்ளூர் பிரதேச வளர்ச்சி மேம்பாட்டுடன், தமது கிராமத்தின் வளர்ச்சிக்கு ஏற்ற பாதையை ஆராய்ந்துள்ளன. Gui Zhou மாநிலத்தின் கட்சிக் கமிட்டித் துணைச் செயலாளர் Wang Fu Yu பேசுகையில், உள்ளூர் தனித்தன்மைக்கிணங்க, பழஞ்சமூக வாழ்க்கை சுற்றுலாவை மேற்கொண்டு, அதன் மூலம் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு, Shui இனப் பண்பாட்டையும் பாதுகாத்துள்ளோம் என்று தெரிவித்தார். தற்போது, Shui இன கிராவாசிகள் இன்பமடையும் பாதையில் முன்னேறிச் செல்கின்றனர் என்றும் அவர் கூறினார். அவர் கூறியதாவது:

"சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முன்நிபந்தனையில், Gui Zhou மாநிலத்தின் அருமையான இயற்கைக் காட்சிகள் மற்றும் தேசிய இன நடையுடை பாவனைகளைச் சார்ந்து, வரலாறு மற்றும் பண்பாட்டையும், தேசிய இன நடையுடை பாவனையையும் இணைத்து, தேசிய இனப் பண்பாட்டைக் காட்டும் கிராம சுற்றுலாத் தொழிலை வளர்த்துள்ளோம். கடந்த ஆண்டு, பயணிகளின் எண்ணிக்கை, 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. சுற்றுலாத் தொழிலின் வளர்ச்சியுடன், விவசாயிகள் அதிக நலன்களை பெற்றுள்ளனர். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, Gui Zhou மாநிலத்தின் சுற்றுலா வருமானம், 50 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது" என்றார், அவர்.

தற்போது, Gui Zhou மாநிலத்தில் சுற்றுலா தொழில் மூலம், பொது மக்கள் நன்மை பெறும் முன்மாதிரியாக, Shui Ge கிராமம் மாறியுள்ளது. மிக அதிக நலன் பெறுவோர், Shui இன கிராமவாசிகள்தான். தற்போது, Shui Ge கிராமத்தில், அனைத்து குடும்பங்களும், புதிய மர வீடுகளைக் கட்டியமைத்துள்ளன. முதியோர் அமைதியாக முதுமைக் கால வாழ்க்கையை கழிக்கின்றனர். குழந்தைகள் மகிழ்ச்சியாக வளர்கின்றனர். பொது மக்களின் வாழ்க்கை நிலை, பெருமளவில் உயர்ந்துள்ளது. இவ்வாண்டின் ஜனவரி திங்கள் முதல் அக்டோபர் திங்கள் வரை, சுமார் ஒரு லட்சம் உள்நாட்டு வெளிநாட்டுப் பயணிகள், Shui Ge கிராமத்துக்கு வந்து பயணம் மேற்கொண்டனர். சுற்றுலா தொழில் மூலமான வருமானம், 20 லட்சம் யுவானை எட்டியது. கிராமவாசி Meng Ze Kun கூறியதாவது:

"சுற்றுலா தொழில் வளர்க்கப்படாத போது, நான் வெளியூரில் வேலை செய்தேன். அப்போது, ஒரு திங்களுக்கு ஆயிரம் யுவானை ஈட்டினேன். தற்போது, சுற்றுலா தொழில் வளர்ச்சியடைந்த பின், வெளியூருக்கு போகவில்லை. நானும் என் குடும்பத்தினரும் சுற்றுலா சங்கத்தில் வேலை செய்கின்றோம். எங்கள் வருமானம், முன்பை விட அதிகம். தற்போது, சுற்றுலா மூலம் மட்டுமே ஒரு திங்களுக்கு 2 ஆயிரம் யுவானை ஈட்டுகின்றோம். கைவினைப் பொருள் உள்ளிட்ட சுற்றுலாப் பொருட்களையும் உற்பத்தி செய்கின்றோம்" என்றார், அவர்.

சுற்றுலாத் தொழிலின் வளர்ச்சி, Shui Ge கிராமப் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது. மட்டுமல்ல, Shui இனப் பண்பாட்டையும் பாதுகாத்துள்ளது. Shui இன மக்கள், வெளியுலக நாகரிகத்தை அறிந்து கொள்ளும் வேளையில், சொந்த பண்பாட்டுச் செல்வம் அரிதானது என்று மேலும் உணர்ந்து கொள்கின்றனர். இன்றைய மாபெரும் மாற்றம் பற்றி Shui இன மக்கள் நன்றி உணர்வு கொண்டுள்ளனர். கிராமவாசி Wu Hong Zhuan செய்தியாளரிடம் கூறியதாவது:

"சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு அரசு உதவி அளித்துள்ளது. வறுமை ஒழிப்புக்கென நிதித்தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. அரசுக்கு உளமார்ந்த நன்றி தெரிவிக்கின்றோம்" என்றார், அவர்.


1 2