• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-21 16:30:53    
Di Qing தன்னாட்சி சோவில் மக்களின் இன்பமான வாழ்க்கை பற்றி

cri

Di Qing திபெத் இனத் தன்னாட்சி சோ, யுன்னான் மாநிலத்தில் அமைந்துள்ளது. உயர்ந்த மலைகள் மற்றும் ஏரிகளால் சுற்றிவளைக்கப்படும் இப்பிரதேசம், சீனாவில் மிகப் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். "ஷாங்ரிலா" என்னும் புகழ் பெற்ற பெயரால் இது அழைக்கப்படுகிறது. தற்போது, சீன மக்களின் மனதில், Di Qing ஒரு சொர்க்கமாகும். இன்றைய நிகழ்ச்சியில், Di Qing தன்னாட்சி சோவில் வாழும் சிறுபான்மைத் தேசிய இன மக்களின் இன்பமான வாழ்க்கையை அறிமுகப்படுத்துகின்றோம்.

Di Qing, யுன்னான் மாநிலத்தின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது, திபெத் தன்னாட்சி பிரதேசத்தை ஒட்டியமைந்துள்ளது. Di Qing என்றால், திபெத் மொழியில் "மங்கா இன்பம்" என்று பொருள். திபெத், Li Su, Na Xi, ஹான், Bai உள்ளிட்ட 26 தேசிய இனங்கள் அங்கு வாழ்கின்றன. திபெத் இன மக்கள் தொகை, அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியாகும்.

ஒரு அருமையான புராணக்கதையின் காரணமாக, Di Qing, வெளியுலகத்தினரால் அறிந்து கொள்ளப்பட்டது. அமெரிக்க நூலாசிரியர் James Hilton 1933ஆம் ஆண்டு வெளியிட்ட "Lost Horizon" என்ற நாவலில் ஒரு கீழை நாட்டில் மலைகளிடையே அமைந்துள்ள முடிவில்லாத அமைதி மற்றும் சீர்மை கொண்ட இடமான "ஷாங்ரிலா" வர்ணிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், Di Qing, இந்த நாவலில் வர்ணிக்கப்பட்ட அனைத்துக்கும் ஏற்றது என்று மக்கள் கண்டறிந்தனர். தவிர, Di Qing தன்னாட்சி சோவின் தலைநகர் Zhong Dian, திபெத் மொழியில் "ஷாங்ரிலா" எனப்படுகிறது. ஷாங்ரிலா என்றால், "சந்திரனும் சூரியனும் மக்களின் மனதில்" என்று பொருள். 2001ஆம் ஆண்டு, Zhong Dian என்ற பெயர், ஷாங்ரிலா ஆக மாற்றமடைந்தது.

"ஷாங்ரிலா", Di Qingகில் இருக்கின்றது என்று கருதப்பட்டதற்குக் காரணம் உண்டு. இவ்விடம் நாவலில் வர்ணிக்கப்பட்ட தலைசிறந்த பீடபூமி உயிரின வாழ்க்கைச் சூழலை கொண்டுள்ளது. இது மட்டுமல்ல, மேலும் முக்கியமானது, உள்ளூர் பிரதேசத்தில் சிறுபான்மைத் தேசிய இன மக்கள் நீண்டகாலமாக நிலைநிறுத்தும் அமைதியான வாழ்க்கை நிலையாகும். Di Qing தன்னாட்சி சோ பண்பாட்டுத் துறையின் தலைவர் Pu Jiang பேசுகையில், Di Qing மக்களின் மனதில், கற்பனையான வாழ்க்கைச் சூழலையும் உயர்வான நிலையையும் ஷாங்ரிலா பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றார். அவர் கூறியதாவது:

"நல்லிணக்கம், அமைதி மற்றும் இன்பம், ஷாங்ரிலாவின் சாராம்சமாகும். Di Qingகில் மக்களுக்கிடை உறவு இணக்கமானது. மனிதருக்கும் இயற்கைக்குமிடை உறவும் இணக்கமானது. இங்கு வாழும் 26 தேசிய இனங்களில், 9 தேசிய இனங்கள் தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்ந்து வருகின்றன. பல தேசிய இன மக்கள் குழுமி வாழ்கின்றனர். பல மதங்கள் கூட்டாக நிலவுகின்றன. மக்கள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் உதவி செய்து கொள்கின்றனர். இங்குள்ள இயற்கைக் காட்சிகள் எழில் மிக்கவை. இவ்விடத்தில் மக்கள் இன்பமாக வாழ்கின்றனர். மக்கள் தேடும் புனிதமான தாயகம், ஷாங்ரிலாவில் இருக்கின்றது" என்றார், அவர்.

Di Qingகில் சிறந்த வாழ்க்கைச் சூழல், உலக மக்களின் கவனத்தை ஈர்க்கின்றது. வெளிநாட்டுப் பயணிகள் பலர் Di Qingகிற்கு வந்த பின், இந்த இடத்தை நேசிக்கத் துவங்குகின்றனர், ஏன் இங்கு நீண்டகாலமாக வசிக்கவும் செய்கின்றனர். சீனாவிலான ஐ.நா வளர்ச்சித் திட்ட அலுவலகத்தின் தலைமை பிரதிநிதி Khalid Malikக்கின் மனைவி Cater Saher Malik அம்மையார், அவர்களில் ஒருவர் ஆவார். 2004ஆம் ஆண்டு அவர் ஷாங்ரிலாவுக்கு முதன்முறையாக வந்த பின், இங்கு வசிக்கத் தீர்மானித்தார். கடந்த சில ஆண்டுகளாக, Di Qingகின் சிறுபான்மைத் தேசிய இனப் பண்பாட்டை, பிற நாடுகளின் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, யுன்னான் மலைப் பிரதேச மரபுச் செல்வ நிதியத்தை நிறுவி, உள்ளூர் கல்வி லட்சியத்துக்கு நன்கொடைத் தொகையை திரட்டினார். இதனால், Di Qingகின் கெளரவ குடி மகள் என்ற புகழ் அவருக்கு சூட்டப்பட்டது.

1 2