• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-21 16:30:53    
Di Qing தன்னாட்சி சோவில் மக்களின் இன்பமான வாழ்க்கை பற்றி

cri

Di Qingகில் உள்ள ஷாங்ரிலாவின் வீதிகளில், தேசிய இன ஆடைகளை அணிந்துள்ள சிறுபான்மைத் தேசிய இனத்தவர்களை அடிக்கடி காணலாம். இந்த சிறுபான்மைத் தேசிய இனத்தவர்கள், வீதிகளின் இரு பக்கங்களில் உள்ள திபெத் இன நடையுடை பாவனைகள் கொண்ட கட்டிடங்களுடன், அழகான ஓவியம் போல் காட்சியளிக்கின்றனர். ஷாங்ரிலாவுக்கு வெளியே, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குடியிருப்புப் பிரதேசங்கள், பழமைவாய்ந்த, அமைதியான வாழ்க்கை முறையை வெளிக்காட்டுகின்றன. இதற்கு அருகில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகள் மெதுவாக மேய்கின்றன. பள்ளத்தாக்கில் பீடபூமி சிங்கோ பார்லி வளர்கின்றன.
Di Qingகில் உள்ள சிறுபான்மைத் தேசிய இன மக்கள், தத்தமது பாரம்பரிய வாழ்க்கையை நிலைநிறுத்தும் வேளையில், பொருளாதார வளர்ச்சியினால் ஏற்பட்டுள்ள நலன்களையும் அனுபவிக்கின்றனர். Na Xi இன விவசாயி Yang Chun Sheng அம்மையார் செய்தியாளரிடம் கூறியதாவது:

"என் வீட்டில் மின்சாரக் கருவிகள் அதிகம். எடுத்துக்காட்டாக, தொலைக்காட்சி பெட்டி, குளிர் சாதனப் பெட்டி மற்றும் திரவ பெற்றோரிய வாயு சாதனம் இருக்கின்றன. ஓரளவு வசதியான சமூகத்தின் வாழ்க்கை வரையறையை இது நெருங்கியுள்ளது. நான், எனது கணவன் மற்றும் மகன் அடிக்கடி வெளியே பயணம் மேற்கொள்கிறோம்" என்றார், அவர்.

கடந்த சில ஆண்டுகளாக, Di Qing தன்னாட்சி சோவின் மொத்த உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு சுமார் 22 விழுக்காடு அதிகரித்துள்ளது. விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி நிகர வருமானம் ஆண்டுக்கு 14.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. Di Qing தன்னாட்சி சோவின் மக்கள் செல்வமடைந்துள்ளனர். ஓய்வு நேரத்தில், வெளியே பயணம் செய்வது, சாதாரண பொழுதுபோக்கு முறைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

வெளியூர் பயணிகள் ஷாங்ரிலாவுக்கு வருகை தருகின்றனர். உள்ளூர்வாசிகள் வெளியுலகத்துக்கு செல்கின்றனர். Di Qingகில் உள்ள சிறுபான்மைத் தேசிய இன மக்கள் வெளியே பயணம் செய்து, வணிகம் செய்கின்றனர். அல்லது பெரிய நகரங்களுக்குச் சென்று கல்வி பயில்கின்றனர். வெளியுலகத்தின் மக்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம், அவர்களின் அறிவுகள் அதிகரித்துள்ளன. அவர்கள், சொந்த ஊர் மீது மேலதிக அன்பு மற்றும் பெருமை கொள்கின்றனர். Di Qing தன்னாட்சி சோவில் வளர்ந்த திபெத் இன மங்கை Zha Xi Qu Chu, தற்போது பெய்சிங் அறிவியல் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொள்கின்றார். அவர் தனது ஊரை மிகவும் நேசிக்கின்றார். அவர் கூறியதாவது:

"நான் பெய்சிங்கில் கல்வி பயில்கின்றேன். பெய்சிங்கில் மூன்று ஆண்டுகள் கல்வி கற்று, ஷாங்ரிலாவுக்கு திரும்பினேன். ஷாங்ரிலாவின் பல பகுதிகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கண்டறிந்தேன். திபெத் இன மக்கள் வாழும் பிரதேசம் முழுவதிலும், எனது ஊர் மிகவும் சிறந்தது. தற்போது நாங்கள் வெளியே உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்கின்றோம். எமது ஊர் ஷாங்ரிலா பற்றி குறிப்பிடுகையில், மிகவும் பெருமை கொள்கின்றோம்"என்றார், அவர்.

ஷாங்ரிலாவில் வாழும் மக்கள் பெருமை கொள்கின்றனர். ஏனெனில், அவர்களின் வசிப்பிடம், மக்கள் எதிர்பார்க்கும் மனிதர் சொர்க்கம். Di Qing தன்னாட்சி சோவில் வாழும் மக்கள் மேலும் பெருமை கொள்கின்றனர். ஏனெனில், Di Qing, ஷாங்ரிலாவின் தாயகம்.


1 2