• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-24 15:14:53    
சீனாவின் வடகிழக்குப் பகுதியிலான சாங் சிங் தீவு பற்றி

cri

சீனாவின் வடகிழக்குப் பகுதியிலான chang xing தீவு, கடந்த சில ஆண்டுகளாக மென்மேலும் அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பார்வையை ஈர்க்கிறது. வடக்கிழக்கு பழைய தொழிற்துறை தளத்தை மறுமலர்த்தி, கடலோரப் பொருளாதாரத்தை வளர்க்கும் liao ning மாநிலத்தின் கொள்கையின் ஆதரவுடன், முன்பு அறியப்படாத இந்தத் தொலை தூர சிறிய தீவு, வியத்தகு வேகத்தில், வடகிழக்கு சீனாவில் முதலீட்டில் முன்னணியில் அமைந்துள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் chang xing தீவின் வளர்ச்சி மற்றும் கட்டுமானம் பற்றி அறிமுகப்படுத்துகிறோம்.

chang xing தீவின் நிலப்பரப்பு, சுமார் 250 சதுர கிலோமீட்டராகும். தீவைச் சுற்றிய கடலோர பரப்பு 90 கிலோமீட்டராகும். இது, சீனாவின் 5வது மிகப் பெரிய தீவாகும். இது, சீர்திருத்தத்தின் ஜன்னலாக அழைக்கப்படும் சீனாவின் தா லியன் நகரத்தைச் சேர்ந்ததாகும். இங்கு தலைசிறந்த துறைமுக மூலவளம் உண்டு. தீவைச் சுற்றிய கடலோரப் பகுதிகளில் துறைமுகங்களைக் கட்டியமைத்து அல்லது துறைமுகத்திற்கு சேவை புரியும் தொழில்துறையை வளர்க்க முடியும்.

chang xing தீவின் கடலோரத் தொழிற்துறை மண்டலத்தின் பொறுப்பாளர் fan hui செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது கூறியதாவது

2003ம் ஆண்டு வடகிழக்கு பழைய தொழிற்துறைத் தளத்தை மறுமலர்ச்சி செய்வதை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி முன்வைத்தது. 2005ம் ஆண்டு, வட கிழக்குப் பிரதேசத்தின் திறப்புப் பணியை மேலும் விரிவாக்க வேண்டும் என்று மத்திய கமிட்டி முன்வைத்த பின்புதான், chang xing தீவு, liao ning கடலோர பிரதேச வளர்ச்சியில் இணைந்தது. முழு மாநிலத்தின் திறனை அணிதிரட்டி, chang xing தீவை வளர்க்கும் அதே வேளையில் தீவில் அடிப்படை வசதிகளைக் கட்டியமைக்கும் வகையில், 300கோடி யுவான் ஒதுக்கும் என்று லோ நிந் மாநிலத்தின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தெரிவித்துள்ளார். தவிர, தேசிய வளர்ச்சி வங்கியும் இதற்கு 800 கோடி யுவான் வரியில்லாத கடனளித்து, இதன் துவக்கக் காலகட்டத்தின் அடிப்படை வசதிகளைக் கட்டியமைப்பதற்கு நிதியுதவி வழங்கியுள்ளது.

தற்போது, மக்களின் குடியேற்றம், வணிகர்களையும் முதலீட்டையும் ஈர்ப்பது, கப்பல் தங்கும் இடம் கட்டியமைப்பது, இருப்புப்பாதை, நெடுஞ்சாலை ஆகியவற்றின் கட்டுமானம் சுமூகமாக நடைபெற்று வருகின்றது. chang xing தீவு சுற்றி வளைந்த அடிப்படை வசதிகளுக்கான துணைத் திட்டப்பணிகள், சீராக நடைபெற்று வருகின்றன என்று தெரிகிறது. எடுத்துக்காட்டாக, தீவுக்குள் நுழையும் இருப்புப் பாதை, உயர் வேக நெடுஞ்சாலை, மின் வினியோகம், நீர் வினியோகம் முதலிய திட்டப்பணிகள் தொடங்கியுள்ளன.

கப்பல் கட்டும் துறை, எண்ணெய் வேதியியல், சிறந்த உருக்குச் சுருள் முதலிய முக்கிய தொழில்களை chang xing தீவு, பெரும் முயற்சியுடன் வளர்த்துள்ளது. இத்துறைகள் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் முன்னேற்றமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தென் கொரியா மற்றும் சிங்கப்பூரில் புகழ் பெற்ற கப்பல் கட்டும் தொழில் நிறுவனங்கள் பல, இங்கு நுழைந்துள்ளன.

Wang jun, chang xing தீவில் நீண்டகாலமாக வாழ்கின்றார். கடந்த சில ஆண்டுகளில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இங்கு நடைபெற்ற மாற்றங்களைக் கண்டு அவர் பெரிதும் மகிழ்ச்சியடைகிறார்.

1 2