• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-24 15:14:53    
சீனாவின் வடகிழக்குப் பகுதியிலான சாங் சிங் தீவு பற்றி

cri

கடந்த இரு ஆண்டுகளில் எமது chang xing தீவு மாபெரும் மாற்றங்களைக் கண்டுள்ளது. மின் மற்றும் நீர் வினியோக பிரச்சினைகளைத் தீர்த்து, உயர்வேக நெடுஞ்சாலையையும் chang xing அரசு கட்டியமைத்துள்ளது. தீவில் இருப்புப் பாதையையும் முழுதாகக் கட்டியமைக்கப்படும் என்று தெரிய வருகிறது. அப்போது, இங்கு வாழ்கின்ற மக்கள் வெளியே செல்வது, மேலும் எளிதாக அமையும். மேலும் அதிகமான தொழில் நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்வது திண்ணம் என்றார் அவர்.

வளர்ச்சி மற்றும் கட்டுமானத்தில் chang xing அரசு சர்வதேச ஒத்துழைப்புக்கு முக்கியத்துவமளிக்கிறது. வளர்ந்த நாடுகளின் முன்னேறிய அனுபவங்களை உட்புகுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இதில், சிங்கப்பூருடனான ஒத்துழைப்பு ஒரு நல்ல மாதிரியாகக் குறிப்பிடத்தக்கது. இங்கு தொழில்துறை மண்டபத்தின் பொறுப்பாளர் fan hui செய்தியாளரிடம் அறிமுகப்படுத்திக் கூறியதாவது,

2006ம் ஆண்டின் ஆகஸ்ட் திங்களில், சீன-சிங்கப்பூர் ஒத்துழைப்பு கூட்டுக் குழுவின் 3வது கூட்டத்தில், chang xing தீவு-சிங்கப்பூர் ஒத்துழைப்பை ஆதரிப்பதாக சீனத் துணைத் தலைமையமைச்சர் wu yi அம்மையார் தெரிவித்தார். ஒட்டுமொத்தத் திட்டம், மேலாண்மைத் தொழில் மற்றும் முதலீடு, சுற்றுலா, கல்வி, பணியாளர்களுக்கான பயிற்சி, தகவல்மயமாக்கக் கட்டுமானம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அரசுப் பணியாளர் பயிற்சி முதலியவற்றில், இரு தரப்பு ஒத்துழைப்பு, முக்கியமாகக் கவனம் செலுத்துகிறது. பெருமளவில் கட்டியமைக்கும் அதே வேளையில், இத்தீவின் தொடரவல்ல வளர்ச்சியைப் பொறுத்தவரை, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை, தொடர்புடைய வாரியங்கள் உணர்ந்துள்ளன.

chang xing தீவிலுள்ள துறைமுகத் தொழில்துறை மண்டலத்தின் துணைத் தலைவர் chen guangyin செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது கூறியதாவது,

அரசின் கோரிக்கையின்படி, சுற்றுச்சூழல் மதிப்பீட்டின் அடிப்படையில், தொழில்துறைத் திட்டபணிகளை உருவாக்குகிறோம். சுற்றுச்சூழல் மதிப்பீட்டு துறையில், தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் மற்றும் நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணர்கள் சிலரை அழைத்துள்ளோம். அவர்கள், இத்தீவு பற்றி செய்த மதிப்பீடு, தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தால் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.

கட்டுமானத்தின் ஒட்டுமொத்த திட்டத்தின்படி, 2010ம் ஆண்டுக்குள், இங்கு அடிப்படை வசதிகளின் கட்டுமானம், முழுமையாக நிறைவேற்றப்படும். தயாரிப்பு தொழிலை முக்கிய தனி்ச்சிறப்பு கொண்ட துறைமுகத் தொழில்துறை பிரதேசம் உருவாக்கப்படும். பூர்வாங்க ரீதியில் ஐந்து 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் டன் எடை கொண்ட கப்பல் தங்கும் 5 இடங்கள் கட்டியமைக்கப்படும். da lian துறைமுகத்தின் சில கப்பல் போக்குவரத்துக் கடமைகளை நிறைவேற்றி, சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக் கடமை chang xing தீவு மேற்கொள்ளத் தொடங்கும்.


1 2