• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-26 13:55:56    
DIAN CHI ஏரியைப் பாதுகாக்கும் ZHANG ZHENG XIANG என்பவர்

cri

ஆழகான DIAN CHI ஏரி

விவசாயி ZHANG ZHENG XIANG, சீனாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள YUN NAN மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, பீடபூமியிலுள்ள DIAN CHI ஏரியை அவர் முன்முயற்சியுடன் பாதுகாத்து வருகிறார். அரசு சாரா சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணரான அவரது தாக்கத்தினால், சுற்றுப்புறத்திலுள்ள கிராமவாசிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ZHANG ZHENG XIANG என்பவர் பற்றிக் குறிப்பிடுகையில், அவர் வாழும் இடமான YUN NAN-GUI ZHOU பீடபூமியில் அமைந்துள்ள YUN NAN மாநிலத்தின் KUN MING புறநகரத்திலுள்ள FU SHAN கிராமம் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். இந்தச் சிறு கிராமம் DIAN CHI ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. சீனாவில் 6வது பெரிய நன்னீர் ஏரியான DIAN CHI ஏரியின் பரப்பளவு 300 சதுர கிலோமீட்டருக்கு மேலாகும். பீடபூமியின் முத்து என அது அழைக்கப்படுகிறது.

ZHANG ZHENG XIANG என்பவர்

ஆனால் 1970ஆம் ஆண்டுகளின் பிற்பாதியிலிருந்து, DIAN CHI ஏரியின் நீர் தரம் மாசுப்பட்டது. 1990ஆம் ஆண்டுகளில், கடும் மாசுப்பாட்டினால், அங்குள்ள உயிரின வாழ்க்கைச் சூழல் சீர்குலைந்து, மீன் வகைகள் அழிவின் விளிம்பில் உள்ளன.

தூய்மையாக இருந்த ஏரி நீர் அசுத்தமாகி இருப்பதைக் கண்டு, ZHANG ZHENG XIANG மனக் கசப்பு அடைந்தார். 1980ஆம் ஆண்டில் 31 வயதான அவர், முன்முயற்சியுடன் DIAN CHI ஏரியைப் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளத் துவங்கினார்.

"DIAN CHI ஏரியின் நீரை மட்டுமே பாதுகாப்பதற்குப் பதிலாக, ஊற்று மூலத்திலிருந்து, ஆற்றுப்பள்ளத்தாக்கு, XI SHAN மலை மற்றும் நிலத்தடி ஆறுகளையும் பாதுகாக்கின்றேன்" என்றார் அவர்.

மாசுப்பட்ட DIAN CHI ஏரி

DIAN CHI ஏரி சீர்குலையாமல் தவிர்ப்பது பற்றியும் தெளிந்த நீரில் மீன் வகைகள் அதிகமாக காணப்படக் கூடிய நிலைக்கு மீட்பது பற்றியும் ஆய்வு செய்ய, ZHANG ZHENG XIANG அதிக நேரம் செலவிட்டார். அவர் வாழும் வீட்டின் சிறு அறையில் நூல்கள், படங்கள் மற்றும் செய்தியேடுகள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலனவை DIAN CHI ஏரியின் நீர் பரப்புக்கான பாதுகாப்புடன் தொடர்புடையவை. தரவு மூல ஆய்வு, DIAN CHI ஏரியை ZHANG ZHENG XIANG பாதுகாப்பதற்கான அடிப்படை மட்டுமே. மலைகளிலும் ஏரியின் ஓரத்திலும் நடமாடுவதில் அவர் மேலதிக நேரம் செலவிட்டார். DIAN CHI ஏரியை சீர்குலைக்கும் செயலை நிறுத்தி, XI SHAN மலையில் சுரங்கத்தை தோண்டி கற்களை எடுக்காமல் தடுக்குமாறு அவர் அறிவுரை கூறுகிறார்.

மாசுப்பட்ட DIAN CHI ஏரி

கடந்த நூற்றாண்டின் 80, 90ஆம் ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற சொற்றொடர் மக்களின் கண்ணோட்டத்தில் ஏறக்குறைய தென்படவில்லை. கிராமவாசிகளும் குடும்பத்தினரும் ZHANG ZHENG XIANGகின் செயலை புரிந்து கொள்ள இயலவில்லை. அயலவர் அவருடன் பழகாமல் தவிர்த்தனர். அவரது மனைவி அவர்களின் வீட்டிலிருந்து விலகினார். ஒரு முறை, படம் பிடித்து சான்றுகளைச் சேகரிக்க, XI SHAN மலை கற் சுரங்கத்திற்குச் சென்ற வழியில் அவர் சாலை விபத்துக்குள்ளாகியது. அவரது வலது கை உழைப்புத் திறனை இழந்தது. இருந்த போதிலும், DIAN CHI ஏரியைப் பாதுகாக்கும் அவரது மன உறுதி அசையவில்லை.

"இத்தகைய சீர்குலைவை யாரும் தடுக்காமல் இருந்தால், இந்தச் சமூகத்தில் நல்லிணக்கம் காணப்பட முடியாது. சீர்குலைவு மட்டுமே இருந்து பாதுகாப்பு இல்லாமல் இருத்தல் என்பது இணக்கமற்றது. உயிரின வாழ்க்கைச் சூழல் இல்லாவிட்டால் உயிர் இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு இல்லாவிட்டால் எதுவும் இல்லை. இது எனது மிக முக்கிய நம்பிக்கை" என்றார் அவர்.

1 2