
கடந்த சில ஆண்டுகளில், தொடரவல்ல வளர்ச்சிக்கான கொள்கையை சீன அரசு பரவல் செய்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி சமூகத்தில் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து வருவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கருத்து மென்மேலும் மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது. இது ZHANG ZHENG XIANGகிற்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. 2003ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 8ஆம் நாள், XI SHAN மலையிலுள்ள 56 பெரிய மற்றும் நடுத்தர கற் சுரங்கங்கள், வேதியியல் தொழிற்சாலைகள், வேதியியல் உர தயாரிப்பு ஆலைகள், சுண்ணாம்பு ஆலைகள் ஆகியவை அனைத்தும்
தடைவிதிக்கப்பட்டன அல்லது மூடப்பட்டன. ZHANG ZHENG XIANGகின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயலை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பலர் அவருக்கு ஆதரவளிக்கத் துவங்கினர். ஏன் அவரை எதிர்த்தவர்களும் கூட அவர் பக்கம் நிற்கத் துவங்கினர். இது குறித்து ZHANG ZHENG XIANG கூறியதாவது—
"தற்போது என்னுடன் பழக விரும்பும் மக்கள் அதிகமாகி வருகின்றனர். முந்தைய கற் சுரங்கத்தின் முதலாளிகளில் ஒருவர் தனது எதிர்ப்பு மனநிலை மாறி, இப்போது என்னை ஆதரிக்கிறார்" என்றார் அவர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு, தனது விளை நிலத்தில் ZHANG ZHENG XIANG மரக் கன்றுகளை நட்டார். அவரின் தாக்கத்தில் அவரது மூத்த மகள் தனது விளை நிலத்தில் மரக் கன்றுகளை நட்டார். மூத்த மகள் ZHANG XIU MEI பேசுகையில், தற்போது தந்தையாரின் செயலை புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறினார். மேலும் தன் தந்தையை தான் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் புகழ்பெற்றவராக ZHANG ZHENG XIANG மாறியுள்ளார். தற்போது, உயிரின வாழ்க்கைச் சூழலைச் சீர்குலைக்கும் சம்பவத்தை கண்டதும் அல்லது சந்தித்ததும், கிராமவாசிகள் ZHANG ZHENG XIANG அவர்களிடம் என்ன செய்வது என்று வழி கேட்கின்றனர்.

60 வயது நெருங்கிய ZHANG ZHENG XIANG அவர்களுக்கு ஒரு குறிக்கோள் மட்டும் இருக்கிறது. அதாவது, DIAN CHI ஏரியின் முந்தைய தோற்றம் மீட்கப்படுவது என்பதாகும்.
"XI SHAN மலை மேலும் பசுமையாகவும் DIAN CHI ஏரி மேலும் தூய்மையாகவும் KUN MING நகரம் மேலும் அழகாகவும் இருக்கச் செய்ய வேண்டும் என விரும்புகின்றேன். இதுதான் எனது ஆசையாகும்" என்றார் அவர்.
2005ஆம் ஆண்டில், சீன அரசு சாரா சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்ட 10 தலைசிறந்தவர்களில் ZHANG ZHENG XIANG இடம் பெற்றார். இவ்வாண்டில், YUN NAN மாநிலத்தின் KUN MING நகரைச் சேர்ந்த 10 நன்மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனச் சுற்றுச்சூழல் அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் அவர் மாறியுள்ளார்.
தற்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை தாம் மேற்கொள்ளும் அளவை ZHANG ZHENG XIANG விரிவாக்கிக் கொண்டிருக்கிறார். DIAN CHI ஏரி, XI SHAN மலை ஆகியவற்றைத் தவிர, YUN NAN மாநிலத்திலுள்ள கன்னிக்காடு, இந்திய யானை, யாங்சி ஆற்றுப்பள்ளத்தாக்கின் உயிரின வாழ்க்கைச் சூழல் ஆகியவை அவர் பாதுகாக்கும் புதிய அம்சங்களில் அடங்கும். 1 2
|