கலை.......அண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தேசிய மாநாடு பற்றிய விளக்கம் பற்றி விவாதித்துள்ளோம்.
தமிழன்பன்.......ஆமாம். விவாதத்தின் மூலம் பல அரசியல் கருத்துக்களையும் நிலைமைகளையும் அறிந்து கொண்டுள்ளேன். அதை போலவே நேயர்களும் நண்பர்களும் நிகழ்ச்சியை கேட்டதன் மூலம் சில தத்துவங்கள் பற்றி தெளிவுபடுத்தியுள்ளார்கள். அப்படிதானே.
கலை.......ஆமாம். இத்தகவலை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. அதே ஊக்கத்துடன் இன்றைய நிகழ்ச்சியில் சீனாவின் நிர்வாக மேலாண்மை அமைப்பு முறையின் சீர்திருத்தம் பற்றி விளக்கி கூற ஆசைபடுகின்றோம்.
தமிழன்பன்........ அண்மையில் சீன நிர்வாக மேலாண்மை அமைப்பு பற்றிய பன்னாட்டு அறிஞர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கு பெய்சிங்கில் நடைபெற்றது.
கலை.........ஆமாம். அப்போது சீனா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் அரசு அதிகாரிகள், அறிஞர்கள், நிபுணர்கள் என ஆக 300க்கும் அதிகமானோர் பெய்சிங்கில் ஒன்று கூடினர்.
தமிழன்பன்.......4வது சீன-ஐரோப்பிய அரசு மேலாண்மை தொடர்பான உயர் நிலை கருத்தரங்கில் அவர்கள் நிர்வாக மேலாண்மை அமைப்பு முறையின் சீர்திருத்தம் மற்றும் அரசின் செயல் திறனை உயர்த்துவது பற்றி தாராளமாக கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
கலை.......அதில் அவர்கள் பல பயன் தரும் கருத்துக்களை முன்வைத்தார்கள்.
தமிழன்பன்.......அது மட்டுமல்ல நிர்வாக மேலாண்மை அமைப்பு முறையின் சீர்திருத்தம் என்ற நெடுநோக்கு குறிக்கோள் கடமை, அரசின் கடப்பாட்டு மாற்றம், அரசின் பயன்களை உயர்த்துவது பற்றி மதிப்பிடுவது முதலியவை பற்றி அவர்கள் போதியளவில் ஆராய்ந்து விவாதம் நடத்தினர்.
கலை........சீன அரசு அதிகாரிகளுக்கும் ஐரோப்பிய நாடுகளின் உயர் நிலை அதிகாரிகளுக்குமிடையில் நடகின்ற உயர் நிலை மேலாண்மை கருத்தரங்கு 2004ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுக்கும் பெய்சிங்கில் நடைபெறுகின்றது.
தமிழன்பன்.........ஆமாம். இத்தகைய கருத்தரங்கு சீன-ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நிர்வாக ஒத்துழைப்பு நிகழ்ச்சிகளில் முக்கிய பகுதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
கலை........உண்மையே. அரசு நிர்வாக துறையில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான சீன ஒத்துழைப்பு நிகழ்ச்சிகளில் இது மிக முக்கிய நிகழ்ச்சியாகும்.
தமிழன்பன்.......இந்த முயற்சியின் நோக்கம் என்ன?
கலை.......அரசின் நிர்வாக மேலாண்மை துறையில் இருதரப்பின் அனுபவங்களையும் அறிவையும் பரிமாறிக் கொள்வது அதன் நோக்கமாகும்.
தமிழன்பன்........சீன அரசு மேலாண்மை கழகம் மற்றும் ஐரோப்பிய நிர்வாக கழகம் ஆகியவை கூட்டாக இக்கருத்தரங்கை நடத்துகின்றன. பல ஆண்டுகளாக அரசு மற்றும் கல்வியியல் வட்டாரங்களின் உயர் கவனத்தை இக்கருத்தரங்கு ஈர்த்துள்ளததோடு. மாபெரும் சமூக செல்வாக்கையும் ஏற்படுத்தியுள்ளது.
கலை.......கருத்தரங்கு நடைபெற்ற பின் ஏற்பட்ட செல்வாக்கு பற்றி மதிப்பீடு செய்யும் போது சீன அரசவை உறுப்பினரும் அரசு மேலாண்மை கழகத்தின் வேந்தருமான குவா சியென் மிங் கூறியதாவது.
தமிழன்பன்........சீன-ஐரோப்பிய பொது மேலாண்மை ஒத்துழைப்பு நிகழ்ச்சிகளும் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சீன-ஐரோப்பிய அரசு நிர்மாக உயர் நிலை கருத்தரங்கும் ஒத்துழைப்பு நிர்வாகம் பற்றிய இருதரப்பின் புரிந்துணர்வை ஆழமாக்கியுள்ளன. நிர்வாக மேலாண்மை அமைப்பு முறையின் சீர்திருத்தத்திலும் புத்தாக்கத்திலும் இருதரப்பும் ஒன்றிடமிலிருந்து மற்றது கற்றுக் கொள்வதும் பயன்படுத்துவதும் முன்னேற்றப்பட்டுள்ளது. இருதரப்பின் நட்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் வளர்ப்பதற்கு கருத்தரங்கு துணை புரியும். இருதரப்பின் முழுமையான நெடுநோக்கு கூட்டாளி உறவை தொடர்ந்து ஆழமாக்குவதற்கும் துணை புரியும்.
கலை........நிர்வாக மேலாண்மை அமைப்பு முறையின் சீர்திருத்தத்தை ஆழமாக்குவதும் அரசின் நிர்வாக பயனை உயர்த்துவதும் தற்போதைய சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பொது தேவையாகும்.
தமிழன்பன்........ தற்கால நிர்வாக மேலாண்மையின் வளர்ச்சி போக்கை இந்த சீர்திருத்தம் முழுமையாக எடுத்துக்காட்டுகின்றது.
கலை........ஆமாம் சீனாவிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் சேர்கி அபு இருதரப்பும் கூட்டாக எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் பற்றி கூறியதாவது.
1 2
|