தமிழன்பன்..........எடுத்துக்காட்டாக எரியாற்றல் சிக்கனப்படுத்துவது பொதுசேவையில் நாங்கள் எதிர்நோக்குகின்ற அறைக்கூவலாகும். இத்துறையில் விவேகமான வழிமுறை மேற்கொள்ளப்பட வேண்டும். விலை நிர்ணயக் கொள்கையை பயன்படுத்துவது, வரையறையை உறுதிப்படுத்துவது, பொது புரிந்துணர்வை உயர்த்துவது, ஊக்கம் மற்றும் தடை நடவடிக்கைகளை முன்வைப்பது போன்ற நெடுநோக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் தான் எரியாற்றல் சிக்கனத்தை எளிதாக கையாளலாம்.
கலை.......கடந்த 13ம் நாள் முதல் 15ம் நாள் வரை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டோர் பல நல்ல கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
தமிழன்பன்........விபரமாக கூறலாமே.
கலை.........சரிசரி விபரமாகவே கூறுகிறேன். யார் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மேலாண்மை அமைப்பு முறையை முழுமையாக்குவது தற்போதைய பணிகளில் முக்கிய பகுதியாகும். இது பற்றி சீன மேலாண்மை கழகத்தின் பேராசிரியர் லீ ப்பன் ச்சுங் கூறியதாவது.
தமிழன்பன்........முதலாவதாக நிர்வாக பொறுப்பையும் மேலாண்மையுடனான நிர்வாக பொறுப்பையும் தெளிவாக உருவரைவு செய்ய வேண்டும். இரண்டாவதாக சட்டம் மீறல், நிர்வாக கோரிக்கைகளுக்கு ஏற்றதல்லாத செயல் ஆகியவற்றுக்கான பொறுப்பை வலுப்படுத்த வேண்டும். இதற்கிடையில் பொது மக்களின் நலனுக்குத் தீங்குவிளைக்கும் செயல்கள் மீது கட்டுப்பாட்டை திணிக்க வேண்டும். மூன்றாவதாக, மேலாண்மை பொறுப்பு ஏற்க வேண்டிய அமைப்பு முறையை முழுமையாக்க வேண்டும். நான்காவதாக மேலாண்மை பொறுப்பு ஏற்க வேண்டிய அமைப்பு முறையுடன் இணையும் துணை நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்.
கலை........பிரான்ஸ் அரசு மேலாண்மை கழகத்தின் வேந்தர் பெர்னார்டு புகெணட் தாம் மாநில தலைவராக பணிபுரிந்த அனுபவங்களை கொண்டு கருத்தரங்கில் அவருடைய எண்ணங்களை தெரிவித்தார். அவருடைய கருத்தை கேளுங்கள்.
தமிழன்பன்.......உலக முழுவதிலும் செயல்படக் கூடிய மேலாண்மை மாதிரி இதுவரை எதுவும் காணப்பட வில்லை. ஒவ்வொரு நாடும் அதற்கு ஏற்ற வரலாறு, பண்பாடு மற்றும் மதிப்பீடுகளின் கருத்துக்களை உறுதிப்படுத்தும் நிர்வாக மேலாண்மை மாதிரியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதேவேளையில் மற்ற நாடுகளிடமிருந்து அனுபவங்களையும் பட்டறிவையும் கற்றுக் கொள்ள வேண்டும். நடுவண் அரசின் அதிகாரத்திற்கும் உள்ளூர் வாரியங்களுக்குமிடையிலான உறவை மேலும் இணக்கம் செய்ய அரசுக்கு உதவ வேண்டும். பொது மக்களுடன் நெருங்கி பழகி அவர்களுக்கு சேவை புரிய வேண்டும்.
கலை.......இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக மேலாண்மை அமைப்பு முறையின் சீர்திருத்தம் பற்றிய விவாதத்தை கேட்டீர்கள்.
தமிழன்பன்.......இது பற்றி உங்கள் கருத்தை மின்னஞ்சல் அல்லது கடிதம் மூலம் தெரிவியுங்கள்.
கலை.........இத்துடன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.
தமிழன்பன்......அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம். 1 2
|