• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-28 17:40:59    
திபெத்தின் நீல வானத்தைப் பாதுகாப்பது பற்றி

cri

மேற்கு சீனாவின் திபெத்துக்கு "உலகத்தின் கூரை" என்ற புகழ் சூட்டப்பட்டுள்ளது. திபெத் இனத்தைத் தவிர, ஹான், ஹுவெய், Men Ba, Luo Ba, Na Xi, Nu, Du Long உள்ளிட்ட பத்துக்கு அதிகமான தேசிய இனங்கள் தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்கின்றன. திபெத்தின் உயிரின வாழ்க்கைச் சூழல் பலவீனமாக இருப்பதால், நீண்டகாலமாக, சீனாவின் இதர பிரதேசங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, திபெத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சி பின்தங்கிய நிலையில் இருந்தது. இருப்பினும், இந்நிலைமை விரைவாக மாறி வருகிறது. திபெத்தில் சமூகப் பொருளாதார வளர்ச்சி வேகமாகி வருவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

திபெத், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது அமைந்துள்ள சிங்காய்-திபெத் பீடபூமி, உலகில் மிக உயர்ந்த பீடபூமியாகும். சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரம் மீட்டருக்கு மேலான இடத்தில் இது அமைந்துள்ளது. இருந்த போதிலும், நீண்டகாலமாக, மக்கள் திபெத்துக்குள் நுழைந்து, இங்கிருந்து வெளியேறுவது கடினம். நவ சீனா நிறுவப்பட்ட துவக்கக்காலத்தில், குதிரை சவாரி செய்வது அல்லது நடந்து செல்வதன் மூலம் மக்கள் திபெத்துக்குள் நுழைந்தனர் அல்லது இந்த இடத்திலிருந்து வெளியேறினர். இதற்கு சில மாதக்காலம் தேவைப்பட்டது. 

இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, "புனிதப் பாதை" என்னும் இனிமையான பாடல். சிங்காய்-திபெத் இருப்புப்பாதையை இப்பாடல் பாராட்டுகிறது.
கடந்த ஆண்டு, சிங்காய்-திபெத் இருப்புப்பாதை, போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, போக்குவரத்து உள்ளிட்ட திபெத்தின் அடிப்படை வசதிகளுக்கான ஒதுக்கீட்டுத் தொகை அதிகரித்து வருவதுடன், "திபெத்துக்குள் நுழைவது கடினம்" என்ற பிரச்சினையும் இல்லாமல் போய் விட்டது. தற்போது, கார், தொடர் வண்டி, விமானம் ஆகியவற்றில் இந்த புதிரான இடத்துக்குள் மக்கள் நுழையலாம். திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசின் நிரந்தர துணைத் தலைவர் Hao Peng கூறியதாவது: 

"கடந்த ஆண்டு சிங்காய்-திபெத் இருப்புப் பாதை போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது. இதனால் திபெத்தின் போக்குவரத்து நிலைமை அடியோடு மாறியுள்ளது. இதற்கிடையில், திபெத்தின் பயணியர் விமானச் சேவையும் வளர்ச்சி பெற்றுள்ளது. இது வரை, 3 விமான நிலையங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. தவிர, போக்குவரத்துக்கான நெடுஞ்சாலையின் நீளம், 45 ஆயிரம் கிலோமீட்டரை எட்டியுள்ளது" என்றார், அவர்.

வசதியான போக்குவரத்தின் காரணமாக, மேலதிக மக்கள் திபெத்துக்கு பயணமாக வருகை தருகின்றனர். தனித்தன்மை வாய்ந்த புவிநிலை, மர்மமான மதங்கள், நாட்டுப்புற பழக்க வழக்கங்கள் ஆகியவை, திபெத்தின் தனித்தன்மை வாய்ந்த சுற்றுலா வளமாகும். ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் பேர், திபெத்துக்கு வந்து பயணம் செய்கின்றனர். இது, திபெத்துக்கு மாபெரும் பொருளாதாரப் பயனைத் தந்துள்ளது.

1 2