• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-28 17:40:59    
திபெத்தின் நீல வானத்தைப் பாதுகாப்பது பற்றி

cri

இருந்த போதிலும், திபெத்தின் நீல வானம், தூய்மையான ஏரி நீர், பிரம்மாண்டமான பனி மலைகள், கம்பீரமான Potala மாளிகை, தனித்தன்மை வாய்ந்த நடையுடை பாவனைகள் ஆகியவற்றால், திபெத்தின் மீது மக்கள் ஆசை கொண்டுள்ளனர் என்பதை உள்ளூர் அரசும் மக்களும் அறிந்து கொண்டுள்ளனர். மேலும் முக்கியமானது, சீனா, தெற்காசியா மற்றும் தென் கிழக்காசியாவில் உள்ள "ஆறுகளின் ஊற்று மூலம்" திபெத்தில் அமைந்துள்ளது. இது மட்டுமல்ல, சீனா, கூட பூமியின் கிழக்கு பாதியின் காலநிலை சரிப்படுத்தல் பிரதேசமாகவும் திபெத் இருக்கின்றது என்பதாகும். இதனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உள்ளூர் பிரதேசத்தில் மிக முக்கியமான பணியாக கருதப்படுகிறது.

திபெத்தின் நீல வானம் மற்றும் தூய்மையான நீரைப் பாதுகாக்கும் பொருட்டு, திபெத் தன்னாட்சி பிரதேச அரசு தொழிற்துறையை வளர்க்கும் வேளையில், பொருளாதாரப் பயன், சமூகப் பயன் மற்றும் சுற்றுச்சூழல் பயனை ஒருங்கிணைத்து அதிகரிக்கப் பாடுபட்டு, சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டை ஊற்று மூலத்திலேயே கட்டுப்படுத்தியுள்ளது.

சிங்காய்-திபெத் இருப்புப்பாதை கட்டியமைக்கப்பட்ட போக்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கருத்து உறுதியாக கடைபிடிக்கப்பட்டது. திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான லாசாவுக்கு 400 கிலோமீட்டர் தொலைவில், Cuo Na என்ற ஏரி அமைந்துள்ளது. இதன் பரப்பளவு, 300 சதுர கிலோமீட்டருக்கு மேலானது. அங்குள்ள தூய்மையான ஏரி நீர் மற்றும் ஏரிக்கரையில் உள்ள புல்வெளி, கருங்கொண்டை நாரை, அன்னம், காட்டு வாத்து, திபெத் Takin ஆடு உள்ளிட்ட வன விலங்குகளின் வசிப்பிடமாகும். திபெத்திலான ஏரிகளில், அழகான Cuo Na ஏரி, சிங்காய்-திபெத் இருப்புப்பாதைக்கு மிகக் குறுகிய தொலைவில் அமைந்துள்ளது. இவற்றுக்கிடை மிகக் குறுகிய தொலைவு, பல பத்து மீட்டர் மட்டுமே. Yan Pei Zun என்பவர், இப்பகுதியிலான சிங்காய்-திபெத் இருப்புப்பாதை கட்டுமானத் திட்டப்பணியின் பொறுப்பாளர். Cuo Na ஏரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை பற்றி எமது செய்தியாளருக்கு அவர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

"Cuo Na ஏரி நீர் மாசுபடாமல் தவிர்க்கும் பொருட்டு, மணல் பைகளால் தடுப்புச் சுவரையும், தடுப்பு வலைப்பின்னலையும் கட்டியமைத்தோம். இதன் மூலம், ஏரி நீரின் தூய்மை உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது" என்றார், அவர்.

சிங்காங்-திபெத் இருப்புப்பாதை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டு, ஓராண்டு காலம் ஆகின்றது. Cuo Na ஏரி, முன்பைப் போல் தூய்மையாகவே உள்ளது. ஏரியிலும், ஏரிக்கரையிலும் கருங்கொண்டை நாரை, அன்னம், காட்டு வாத்து முதலிய விலங்குகள் இப்போதும் அமைதியான வாழ்க்கை நடத்துகின்றன.

சீனாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவது, முழுச் சமூகத்தின் பொது கருத்தாக மாறியுள்ளது. பல அரசு சாரா அமைப்புகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய சக்தியாக மாறியுள்ளன. எடுத்துக்காட்டாக, சிங்காய்-திபெத் இருப்புப்பாதை தொடர் வண்டிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற கருத்தை பிரச்சாரம் செய்ய, "பசுமை ஆற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னேற்றச் சங்கம்" அண்மையில் தொண்டர்களைச் சேர்த்தது. திபெத்தின் உயிரின வாழ்க்கைச் சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றி அங்கு செல்லும் பயணிகளிடம் இத்தொண்டர்கள் விளக்குகின்றனர்.

பிரதேச மேம்பாட்டைச் சார்ந்து, சூரிய ஒளி ஆற்றல் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எரியாற்றலை வளர்ப்பதில் திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு மிகவும் கவனம் செலுத்துகிறது. தன்னாட்சி பிரதேசத்து அரசின் நிரந்தர துணைத் தலைவர் Hao Peng கூறியதாவது: 

"திபெத், சீனாவில் சூரிய ஒளி ஆற்றல் மிக அதிகமான பிரதேசமாகும். ஆண்டுதோறும் சராசரியாக மூவாயிரம் மணிக்கு மேலான சூரிய ஒளி அங்கு வீசுகின்றது. தவிர, சூரியனுக்கு மிகக் குறுகிய தொலைவில் திபெத் அமைந்துள்ளதால், ஆண்டுதோறும் ஒவ்வொரு சதுர சென்டி மீட்டர் சூரிய ஒளி ஏற்படுத்தும் வெப்பம் மிக அதிகம். சூரிய ஒளி ஆற்றலை வளர்ப்பதில் திபெத்துக்கு மேம்பாடு உண்டு" என்றார், அவர்.

தற்போது, திபெத்தில் சூரிய ஒளி ஆற்றல் மின் உற்பத்தித் திறன், 10 ஆயிரம் கிலோவாட்டை எட்டியுள்ளது. உள்ளூர் பிரதேசத்தில், பெரும்பாலான விவசாயக் குடும்பங்களில், சூரிய ஒளி ஆற்றல் சாதனம் பொறுத்தப்பட்டுள்ளது. பல செய்தித்தொடர்பு, வானொலி மற்றும் தொலைக்காட்சி சாதனங்களுக்கு சூரிய ஒளி ஆற்றல் வழங்கப்படுகிறது.
இவ்வாறு, திபெத்தில் பெரும்பாலான வனங்கள், ஆறுகள், ஏரிகள், மேய்ச்சல் நிலங்கள், சதுப்பு நிலங்கள், பனிக்கட்டி ஆறுகள், பனி மலைகள், வன விலங்குகள், தாவரங்கள் முதலியவை செவ்வனே பாதுகாக்கப்பட்டுள்ளன. உள்ளூர் பிரதேசத்தின் நீர் மற்றும் காற்றுத் தரம் சீரான நிலையில் இருக்கிறது.

இது வரை, திபெத்தில் 7 தேசிய நிலை இயற்கை பாதுகாப்பு மண்டலங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த இயற்கை பாதுகாப்பு மண்டலங்களின் நிலப்பரப்பு, சுமார் 4 லட்சத்து 10 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். இது, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும்.


1 2