• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-03 11:58:46    
எய்ட்ஸ் தடுப்பு மற்றும் சிகிச்சையிலான ஒத்துழைப்பு

cri

கலை......பிரியமான நேயர்களே வணக்கம். இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.

தமிழன்பன்.....கலை டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் தடுப்பு நாளாகும்.

கலை.......ஆமாம். இந்நாளை முன்னிட்டு எய்ட்ஸ் தடுப்பிலான சீன முயற்சி என்னும் செய்தித் தொகுப்பு நவம்பர் 30ம் நாள் நமது வானொலியில ஒலிப்பரப்பட்டது.

தமிழன்பன்..........இனறு இது பற்றிய சர்வதேச சமூகத்துடனான சீன ஒத்துழைப்பு பற்றி மேலும் விபரமாக விவாதிக்கலாம்.

கலை.......நீங்கள் தெரிவித்தமை என் எண்ணத்துக்கு ஒத்ததாக உள்ளது.

தமிழன்பன்.......அப்படியானால் நாம் இன்றைய நிகழ்ச்சியில் சீன சுகாதார அமைச்சகத்திற்கும் எய்ட்ஸ் நோய், காச நோய் மற்றும் மலேரியா நோய்களளை தடுப்புக்குப் பொறுப்பான உலக நிதியத்திற்குமிடையிலான ஒத்துழைப்பு பற்றி விளக்கிக் கூறலாம்.

கலை.......அது நல்லதென்றே தோன்றுகின்றது. முதலில் சீனச் சுகாதார அமைச்சகமும் இந்நிதியமும் அண்மையில் ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தியுள்ளன.

தமிழன்பன்........உடன்படிக்கையின் படி உலக நிதியம் அடுத்த 5 ஆண்டுகளில் சீனாவுக்கு உதவியாக வழங்க உள்ள தொகை எவ்வளவு?

கலை.......அடுத்த 5 ஆண்டுகளில் உலகநிதியத்திலிருந்து ஒரு கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலரை சீனா பெறலாம்.

தமிழன்பன்.........இந்த தொகை எந்த துறையில் பயன்படுத்தப்படும்.

கலை.......சீனாவில் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் ஈடுபடும் பொது நிறுவனங்களுக்கும் அரசு சாரா அமைப்புகளுக்கும் ஊக்கமளிப்பதிலும் ஆதரவளிப்பதிலும் இது பயன்படுத்தப்படும்.

தமிழன்பன்.........இதுவரை சீனா உலக நிதியத்துடன் நிறைவேற்றியுள்ள உடன்படிக்கை நிகழ்ச்சிகள் எத்தனை?

கலை.....இதுவரை மொத்தம் பத்து நிகழ்ச்சிகளை நிறைவேற்றியுள்ளது.

தமிழன்பன்........உலக எய்ட்ஸ் காச நோய், மற்றும் மலேரியா நோய்கள் தடுப்பு நிதியம் எப்போது நிறுவபட்டது? அதன் நோக்கம் என்ன? கலை இது பற்றி நீங்கள் விபரமாக விளக்கிக் கூறலாமா?

கலை......கண்டிப்பாக. மனித குலத்திற்குக் கடுமையான

அச்சுறுத்தல் ஏற்படுத்திய இந்த மூன்று வகை நோய்களைத் தடுப்பது தான் 2002ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிதியத்தின் நோக்கமாகும்.

தமிழன்பன்......அப்படியானால் இது வரை இந்நிதியத்தற்கு

எவ்வளவு தொகை நன்கொடையாக திரட்டப்பபட்டுள்ளது? அவை எங்கிருந்து சேர்க்கப்பட்டன?

1 2