• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-03 11:58:46    
எய்ட்ஸ் தடுப்பு மற்றும் சிகிச்சையிலான ஒத்துழைப்பு

cri

கலை.........தற்போது சுமார் 1800 கோடி அமெரிக்க டாலர்

நண்கொடையாக திரட்டப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளிண் அரசாங்கங்கள் தனிபட்ட தொழில் நிறுவனங்கள், அறக்கட்டளை அமைப்புகள் ஆகியவற்றால் இந்த தொகை வழங்கப்பட்டது.

தமிழன்பன்......இதற்கு சீன அரசு நன்கொடை தொகை வழங்கியதா?

கலை..... நிச்சயமாக.

தமிழன்பன்......எவ்வளவு?

கலை.......ஒரு கோடி அமெரிக்க டாலர்.

தமிழன்பன்........நிகழ்ச்சியின் துவக்கத்தில் சீன சுகாதார

அமைச்சகமும் உலக நிதியமும் ஒத்துழைப்பு உடன்படிக்கை ஏற்படுத்தியது பற்றி கூறினீர்கள். அதன் மூலம் சீனாவுக்கு எத்தகைய ஆதரவு வழங்கப்படுகிறது?

கலை........இந்த உடன்படிக்கையின் மூலம் தனிப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் சீனாவின் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் பங்கெடுப்பதற்கு நிதி உதவு வழங்கப்படுகிறது. இது பற்றி சீன சுகாதார அமைச்சின் துணை அமைச்சர் வுவாங் ச்சியே வ் கூறியதாவது.

தமிழன்பன்.........ஒத்துழைப்பு நிகழ்ச்சிகள் அமுலாக்கத்தின் மூலம் பொது நிறுவனங்களையும் அரசு சாரா அமைப்புக்களையும் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சையில் பங்கெடுக்க மேலும் ஊக்கமளிக்க விரும்புகின்றோம். அவற்றின் தனிப்பட்ட மேம்பாட்டை வெளிக் கொணர்ந்து சீனாவின் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் சிகிச்சைத் துறையை ஆக்கப்பூர்வமாக முன்னேற்ற வேண்டும்.

கலை........எய்ஸட், காச நோய் மற்றும் மலேரியா நோய்கள் மனித குலத்தின் உடல் நலத்தை அச்சுறுத்தியுள்ளன. உலகின் பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளன. சீனா வளர்கின்ற மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு. இவற்றின் அச்சுறுத்தலுக்கு சீனாவும் ஆளாகியுள்ளது.

தமிழன்பன்.........உலக நிதியம் நிறுவப்பட்டது முதல் திரட்டப்பட்ட தொகை மிகவும் தேவைப்படும் நாடுகள் மற்றும் பிரதேசங்கள் குறிப்பாக வளரும் நாடுகளுக்கு வழங்க பாடுபடுகின்றது. அப்படிதானே?

கலை.......ஆமாம். சீனாவும் உலக நிதியமும் நெருங்கிய ஒத்துழைப்புகளை மேற்கொண்டுள்ளன. உலக நிதியத்தின் நிர்வாக தலைவர் கச்சாக்கின் இதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது.

தமிழன்பன்.........சீனா உலக நிதியத்தின் மிக பெரிய ஒத்துழைப்பு கூட்டாளிகளில் ஒன்றாகும். இத்துறைக்கு சீனா உலக நிதியம் மிக அதிகமான தொகை ஒதுக்கிவைத்த இரண்டாவது பெரிய நாடாகவும் திகழ்கின்றது. இவைகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றிய 10 நிகழ்ச்சிகள் சீனாவின் 31 மாநிலங்கள், நகரங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் பரவியுள்ளன. அதன் மொத்த தொகை 42 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலரை எட்டியது.


1 2