• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Apr 17th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-07 11:28:46    
ஏன் குடை சாயவில்லை

cri

பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்

பகல் இரவால் கண்விழித்து வளர்த்தாள்

வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்

மேதினியில் நாம் வாழ வழி வகுத்தாள்...

பொதுவாகவே தாய்மை பற்றி சொல்லும் போது பத்து மாதம் சுமந்து பெற்றாள் என்பதை தவறாமல் சொல்வதை நாம் அறிவோம். பத்து மாதம் தன் வயிற்றில் ஒரு புதுச்சுமையாய், கருவை சுமப்பது உண்மையில் அவ்வளவு ஒன்றும் எளிதானதல்ல. வேண்டுமானால் ஒரு 5 கிலோ எடையுள்ள பொருளை வயிற்றோடு சேர்த்து கட்டிக்கொண்டு ஒரு நாள் முழுதும் இருந்து பாருங்களேன். தமிழ் திரைப்படம் ஒன்றில் கூட இப்படி ஒரு ஆணுக்கு வயிற்றில் கல்லைக் கட்டி நடக்க வைத்து தாய்மையின் மேண்மையை, அவள் அனுபவிக்கும் சிரமங்களை அவனுக்கு உணர்த்துவார் கதையின் நாயகன். ஆக 24 மணி நேரமும் கொஞ்ச நேரம் கூட இறக்கி வைத்து அப்பாடா என்று பெருமூச்சு விட்டு ஆசுவாசப் படுத்திக்கொள்ள வாய்ப்பேயின்றி தொடர்ச்சியாக பத்து மாதம் வளர்ந்த மேனியிலுள்ள சுமையை தாங்கி நிற்பது வேடிக்கையானதல்ல. இதையெல்லேம் ஏன் சொல்கிறோம் என்ற கேள்வி இப்போது எழக்கூடும். கேள்விகள் இல்லாவிட்டால் மனிதன் இன்றைக்கு இவ்வளவு வளர்ச்சியடைந்திருக்க மாட்டான். ஆனால் சில கேள்விகள் கொஞ்சம் வித்தியாசமானவை. அதிலும் குறிப்பாக இளமை பருவத்தில், அறிவுத்தேடலிலான உந்துதலில் நிறையவே கேள்விகள் எழுவதுண்டு. ஒரு சிலருக்கு அந்த சந்தேகங்கள் இன்றளவும் விடை தெரியா புதிராக தொடர்ந்துகொண்டிருக்கக்கூடும்.

புவியியல் பாடத்தில் புவிப்பரப்பு நேர் சமனாக இல்லை, குவியாடி போல, வளைந்த நிலையில் உள்ளது என்பதை விளக்க, கடலில் கப்பல் கண் பார்வையிலிருந்து மறைவதை படம் போட்டு காட்டினால், சரி கப்பல் வளைந்துள்ள பரப்பில் சென்றால், ஓரத்தில் சரிந்து விழுந்து விடாதா என்று ஆசிரியரை கேட்டவர்கள் நம்மிடையே இருக்ககூடும்.

பூமிதான் சுற்றிக்கொண்டிருக்கிறதே, விமானம் ஏன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பறந்து செல்லவேண்டும்? மேலெழும்பி ஓரிடத்திலேயே மிதந்துகொண்டிருந்தால், பூமி சுற்றுவதற்கு ஏற்றபடி நாம் செல்லவேண்டிய இடம் வந்ததும் விமானம் தரையிறங்கலாமே? அடடா அதானே, என்று தங்களைத் தானே கேட்டுக்கொள்பவர்களுக்கு ஒரு பலே, நீங்கள் நம்மவர்.

பூமி ஒரு பந்துபோல உருண்டையாக இருக்கிறது. நிலமும் நீருமான பூமியை ஒரு முனையில் ஆழத்தோண்டி அடுத்த முனையை அடைய முடியுமா? 12,756.32 கி மீ விட்டம் கொண்டது பூமி. ஆக நீங்கள் ஒரிடத்தை தேர்ந்தெடுத்து 12750 கி மீ தோண்டினால் பூமியின் மறுபுறத்தை சென்றடையலாம். அப்படித்தானே? ஆனால் இது உண்மையில் சாத்தியமா?

இந்த வரிசையில் தான் நம்மில் பலருக்கும் தோன்றாத ஒரு கேள்வி, சில அறிவியலாளர்களுக்கு தோன்றியது. அது என்ன தெரியுமா...

பெண்கள் கருத்தரிக்கும்போது அவர்களது வயிற்றில் எடை கூடுகிறது. எப்படி அவர்களது உடல் முன்னேயுள்ள கூடுதலான எடையின் கனத்தில் முன் சரிந்து விழுந்துவிடாமல் தாங்கி பிடிக்கிறது? நியாயமான கேள்விதானே. எடை எந்த பக்கமோ அப்பக்கம் தானே தராசு கூட சரிகிறது அல்லது சாய்கிறது. தள்ளுவண்டியில் எடை கூடிப்போனால் அது குடைசாய்வதில்லையா? அதுபோல ஏன் கருத்தரிக்கும் பெண்கள் எடை கூடுவதால் குடைசாய்வதில்லை என்பதுதான் மூன்று மனிதவியலாளர்களின் மண்டையை வாட்டிய கேள்வி. எனவே இந்த மூவரும் சேர்ந்து இதை கண்டறிய முற்பட்டனர். இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட அவர்கள் இந்த கேள்விக்கு விடையும் கண்டறிந்துள்ளதாக நம்புகின்றனர்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடலமைப்பில் காணப்படும் வேறுபாடுகளில் இந்த விடை ஒளிந்திருக்கிறது. பெண்களின் முதுகெலும்பின் கீழ் பகுதியிலுள்ள ஒரு எலும்பும், இடுப்புப் பகுதியிலுள்ள ஒரு மூட்டும் தான் அவர்களது உடலில் இந்த வியத்தகு அற்புதத்தை செய்ய உதவுகின்றன என்கிறார்கள்.

இந்த இவ்விரு மாற்றங்களும் மனித இனத்தின் பெண்களிடமும், மனிதனுக்கு முன்னோடியான ஆஸ்ட்ராலோபிதகஸ் என்ற இனத்தின் பெண்களிடமும் மட்டுமே காணப்படுவதாகவும், பரிணாம வளர்ச்சியின் இதற்கு முந்தைய இனங்களான சிம்பன்ஸிகள், குரங்குகள் ஆகியவற்றில் காணப்படவில்லை என்றும் அறியப்படுகிறது. ஆக நாலுகால் நடை நடந்த இனங்களுக்கல்ல, பரிணாம வளர்ச்சியின் மாற்றத்தில் இரண்டு காலில் நடைபழகத்தொடங்கிய இனங்களுக்கே இந்த வேறுபாடுகள் உள்ளன. பரிணாம வளர்ச்சியின் மகத்தான பொறியியல் செயல்பாடே இதுவாகும்.

இந்த ஆய்வு பற்றிய முடிவுகள் கடந்த வாரம் இயற்கை என்ற இதழில் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மனிதவியல் பேராசிரியர் லீசா ஷாபிரோ இந்த ஆய்வில் ஈடுபட்ட மூவரில் ஒருவர். இந்த மூவரில் கருத்தரித்தலை அனுபவம் மூலம் உணர்ந்தவர் இவர் மட்டுமே. கருவை சுமந்திருக்கும் போது ஏகப்பட்ட இன்னல்களை எதிர்நோக்கவேண்டியிருக்கும். சட்டென எழுந்து நிற்க முடியாது, புரண்டு படுக்க முடியாது, வேகமாக நடக்கக்கூட முடியாது. சின்ன சின்ன விடயங்களுக்குக் கூட பிறரின் உதவி தேவைப்படும். இத்தகைய நிலையில் பரிணாம வளர்ச்சியின் அங்கமாக பெண்களின் உடலமைப்பில் முதுகெலும்பின் கீழ் பகுதியிலுள்ள ஒரு எலும்பு, இடுப்புப் பகுதியிலுள்ள ஒரு மூட்டு ஆகிவற்றிலான மாற்றங்கள் இல்லாவிட்டால் பெண்களது நிலை இன்னும் மோசமாகத்தான் இருக்கும் என்கிறார் லீசா ஷாபிரோ.

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040