• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-07 11:28:46    
ஏன் குடை சாயவில்லை

cri

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கேத்தரின் விட்கோம்ப்தான் பெண்களுக்கும் ஆண்களுக்குமிடையில் உள்ள அந்த உடலமைப்பு வேறுபாட்டை கூர்ந்து கவனித்து அறிந்தவர். உடலில் பின் பகுதியில் முதுகெலும்பின் கீழ் பகுதி எலும்புக்கும் இடுப்பு எலும்புக்கும் இடையிலான எலும்பு ஒன்று பெண்களுக்கு ஒரு முனையில் குறுகியும் மறு முனையில் அகன்றும் உள்ளது, ஆண்களுக்கு ஒரே நீண்ட சதுரமாக இருக்கிறது. அவ்வண்ணமே இடுப்பெலும்பின் முக்கிய மூட்டு ஒன்று பெண்களுக்கு ஆண்களை விட 14 விழுக்காடு பெரிதாக காணப்படுகிறது. இந்த மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு பொறியியல் ரீதியான சில சோதனைகள் செய்து பார்த்தபோது, இவை பெண்களை முன் பகுதியில் எடை கூடினாலும், குடைசாயாமல், கவிழ்ந்து விழாமல் தாங்கிக்கொண்டு நடக்க வழிசெய்கிறது என்பது கண்டறியப்பட்டது.

கருத்தரித்த பெண்கள் நாளுக்க நாள் கூடும் எடையோடு நடந்து செல்வதை பார்க்கத்தான் எளிதாக இருக்கிறது. அவர்கள் உண்மையில் ஒரு பெரும் சவாலையே எதிர்கொண்டு நடக்கின்றனர் என்கிறார் விட்கோம்ப். பரிணாம வளர்ச்சி, இந்த சவலை அவர்கள் தாங்கக்கூடிய அளவுக்கு மாற்றித் தந்திருக்கிறது. பழுதுபார்க்கும் கடையில் சிலவற்றை தட்டி, வெட்டி, ஒட்டி மாற்றியமைப்பது போல், பரிணாம வளர்ச்சியும் கொஞ்சல் தட்டி, உருட்டி செய்த இந்த மாற்றங்கள் உண்மையில் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஒரு சிறிய மாற்றம் எவ்வளவு பெரிய சவாலை சமாளிக்க உதவுகிறது என்று அங்கலாய்க்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

இரண்டு கால்களால் நடப்பது மனிதனை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. பரிணாம வளர்ச்சியின் இந்த நாலிலிருந்து இரண்டுக்கு மாறிய நடைமாற்றம் எந்த விதத்தில் மனிதனுக்கு பயன் தருகிறது என்பது பல ஆய்வாளர்களிடம் கேல்வியாய் இருக்கிறது. ஆனால் இது பெண்களுக்கு குறிப்பாக கருவை சுமந்த பெண்களுக்கு வலியை, துன்பத்தையே தருகிறது எனலாம். நாலு காலில் நடக்கும் இனங்கள் தங்கள் கருத்தரிப்பை எளிதாக கையாள முடிகிறது. ஆக பரிணாம வளர்ச்சியிலான மனித உடலமைப்பின் மாற்றம், குறிப்பாக பெண்களின் பின் பகுதியிலான மாற்றம் இரண்டு கால்களால் நடப்பதிலான இழப்புகளை சரிகட்டவே என்கிறார், ஆய்வுக்குழுவின் மூன்றாவது நபரான டேனியல் லீபெர்மென்.

கர்ப்பிணிப் பெண்கள் சரி, தொந்தியும் தொப்பையுமாய் அசைந்தாடி வரும் ஆண்கள் எப்படி குடை சாயாமல், எடையால் கவிழ்ந்து விடாமல் இருக்கிறார்கள்? அதானே, நியாயமான கேள்வி இல்லையா..

இதற்கு ஆண்களின் உடலின் பின்னிடுப்புப்பகுதியிலான தசைகள் ஈடுகொடுக்கின்றன என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். சிறிதோ பெரிதோ அளவுக்கு ஏற்றார் போல் முன்னிருக்கும் தொப்பைக்கு ஏற்றபடி பின் பகுதியில் தசைகள் அதிகரிப்பதை ஆண்களிடம் காணமுடிகிறது. உங்கள் முன்னிருப்பவரை பார்த்து தெரிந்துகொள்ளலாம் அல்லது உங்களையே பார்த்து தெரிந்துகொள்ளலாம். நான் கூட என் பின்னிடுப்புப்பகுதியை பார்த்துதான் இதை உறுதி செய்தேன்.


1 2