• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-09 16:32:00    
கனவு

cri

இதைக் கேட்ட ஆசிரியர், " அட, நீ அன்பளிப்பாக பொற்காசுகளை தருமளவுக்கு நான் ஒன்றும் அப்படி பெரிதாக செய்யவில்லையே என்று சொன்னபடி, தனது சமையல்காரரை அழைத்து நல்ல சுவையான விருந்தொன்றை சமைக்குமாறு பணித்தார். விருந்து தாயாரானது மணவனை அழைத்து மகிழ்ச்சியாக சிரித்து பேசி, உண்டு குடித்தார். இருவரும் நன்றாக மது அருந்தி ஒருவர் மற்றவரின் நல்வாழ்க்கைக்காக வாழ்த்துக்கள் கூறி ஆரவாரமாக இருந்த நிலையில் போதை கொஞ்சம் தலைக்கேறத் தொடங்கிய போது. திடீரென சுதாரித்த ஆசிரியர், அது சரி நான் கூப்பிட்டு அனுப்பியதால் நீ அவசர அவசரமா புறப்பட்டு வந்தாய், வருவதற்கு முன் அந்த பொற்காசுகளை பத்திரமாக ஏதாவது பெட்டிக்குள் வைத்து பூட்டினாயா? என்று கேட்டார்.

அதற்கு மாணவன் அமைதியாக எழுந்து நின்றபடி, ஆசிரியரே ஆயிரம் பொற்காசுகளை எப்படி செலவழிக்கலாம் என்று திட்டமிட்டு முடித்த சீக்கிரம், என் மனைவி என் பக்கம் உருண்டு படுத்தால், நான் திடுக்கிட்டு எழுந்தேன், கண் திறந்தால் பொற்காசுகளை காணவில்லை. எனவே பெட்டியிருந்தும் பயன் என்ன என்றானாம்.

ஆக இவ்வளவு நேரமும் நீ கண்ட கனவை பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறாயா என்றாராம் ஆசிரியர், ஆமாம் ஐயா என்றானாம் மாணவன். ஆசிரியருக்கு கோபம் தலைகேறியது ஆனால் மாணவனை விருந்துக்கெல்லாம் அழைத்து தனது விருந்தோம்பலை வெளிப்படுத்திய நிலையில் தனது சினத்தை காட்டினால் அது முரட்டுத்தனம். எனவே அவர் வேறு வழியின்றி தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும் விதமாய், நீ கனவில் கூட என்னை நினைவில் வைத்துள்ளது புரிகிறது.

உண்மையிலேயே பொற்காசுகள் கிடைத்தால் நீ நிச்சயம் என்னை மறக்கமாட்டாய் என்றாராம். மாணவனை தன்னோடு மேலும் சில கோப்பைகள் மது அருந்த சொல்லி, பிறகே அவனை வீட்டுக்கு அனுப்பினாராம்.


1 2