• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-11 21:24:26    
சீனாவின் காஷ் நகரின் உய்கூர் இன நடையுடை பாவனைகள் பற்றி

cri

சீனாவின் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தென் பகுதியில் காஷ் நகரம் அமைந்துள்ளது. உய்கூர் இனத்தை முக்கியமாக கொண்ட சிறுபான்மைத் தேசிய இனங்கள் இந்நகரில் செறிந்து வாழ்கின்றன. சிங்கியாங்கில் ஒரே ஒரு தேசிய நிலை வரலாற்று பண்பாட்டு புகழ் பெற்ற நகரம் இதுவாகும். காஷ் நகருக்கு வரவில்லை என்றால், சிங்கியாங்கிற்கு வரவில்லை என்பதற்குச் சமமாகும் என்று கூறப்படுகின்றது. இன்றைய நிகழ்ச்சியில், சிங்கியாங்கின் காஷ் நகரில் உள்ள உய்கூர் இன நடையுடை பாவனைகளை உணர்ந்து கொள்வீர்கள்.

காஷ் நகரின் மையப்பகுதியில் உள்ள Etigar சதுக்கம், உய்கூர் இன நடையுடை பாவனைகளை உணர்ந்து கொள்ள மிக நல்ல இடமாகும். சாதாரண நாட்களில், இச்சதுக்கம், காஷ் நகரவாசிகளின் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு இடமாகும். விழா நாட்களில் மக்கள் இங்கு ஒன்று திரள்கின்றனர். Etigar சதுக்கத்தில் அலைந்து திரிந்ததில், பெரும்பாலானோர், உய்கூர் இன மக்கள் ஆவர் என்று கண்டுள்ளோம். சிலர், மலர் படுக்கையைச் சுற்றி வளைக்கும் கல் மேடைகளில் அமர்ந்து ஓய்வு பெற்றனர். சிலர், சிறு வியாபாரம் செய்தனர். வியாபாரிகள் சிலர் சரளமாக இல்லையெனினும் சீன மொழியில் பேசி பயணிகளின் கவனத்தை ஈர்த்தனர்.

ஆர்வம் மிக்க பயணிகள், சதுக்கத்துக்கு அருகில் உள்ள சந்தைகளுக்குச் செல்லலாம். கோலாகலமான உய்கூர் இன தனிச்சிறப்பியல்பை இங்கு காணலாம். மிக தனித்தன்மை வாய்ந்தது, உய்கூர் இன ஆடைகளாகும். குறிப்பாக, அனைவரின் தலையிலும் பூத்தொப்பிகள். பூத்தொப்பி கடை ஒன்றுக்கு வந்தோம். அழகான உய்கூர் இன மங்கை ஒருத்தி இக்கடையில் அமர்ந்து கொண்டிருந்தார். அவரது பெயர் Aysha. உய்கூர் இனத்தின் பாரம்பரிய ஆடைகள் பற்றி அவர் கூறியதாவது:

"உய்கூர் இன மக்களின் பாரம்பரிய ஆடைகள் இவ்வாறு: வெளியே நீளமான பாவாடையை மக்கள் அணிகின்றனர். உட்புறத்தில் கால் சட்டையை அணிகின்றனர். குழந்தைகள் பூத்தொப்பியை அணிகின்றனர். வயதுவந்தோர் தலை பாகையை அணிகின்றனர்" என்றார், அவர்.
உய்கூர் இன மங்கைகள், பூத்தொப்பியை அணிய விரும்புகின்றனர். இது மட்டுமல்ல, அவர்களின் நீளமான கூந்தலில் பல பத்து பின்னல்கள் இருக்கின்றன. பிறை நிலா வடிவிலான சீப்பு தலைமுடியில் காணப்படுகின்றது. இது பற்றி Aysha கூறியதாவது:

"பொதுவாக கூறின், உய்கூர் இன மங்கைகளின் நீளமான கூந்தலில் 19 முதல் 21 வரை பின்னல்கள் இருக்கின்றன. மிக அதிகப்பட்சமானது, 41 பின்னல்கள் தான். இஸ்லாமிய மதத்தின் திரு குரானின் படி, 41 மிக நல்ல எண். திருமணம் செய்த மகளிர்களின் கூந்தலில் 2 பின்னல்கள் மட்டுமே பின்ன முடியும்"

ஆடைகளில், அலங்காரப் பொருட்களை சேர்க்க உய்கூர் இன மக்கள் விரும்புகின்றனர். எடுத்துக்காட்டாக, வெள்ளி மணிக்கற்களால் தயாரிக்கப்பட்ட டாலர், எலும்பால் தயாரிக்கப்படும் சங்கிலி, மரத்தால் செய்யப்பட்ட முடி சொக்கி, கத்தி. இவை, ஆடைப் பண்பாட்டுக்கு எழிலூட்டுவதாக அமைந்துள்ளன. அலங்காரப் பொருட்கள் கடை ஒன்றுக்கு வந்தோம். இக்கடையில் கத்திகளை விற்பனை செய்யும் உய்கூர் இன இளைஞர் Mehmetcan, எங்களிடம் Ying Ji Sha கத்திகளை ஆர்வத்துடன் அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:

"Ying Ji Sha கத்திகள் கைகளால் தயாரிக்கப்படுகின்றன. காஷ் நகரில், Ying Ji Sha என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள், கத்திகள் தயாரிப்பில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். குடும்பங்கள் அனைத்தும் கத்திகளைத் தயாரிக்க முடியும்" என்றார், அவர்.

கத்தி தயாரிப்பு கலையின் வளர்ச்சியுடன், கலைஞர்கள் பல்வகை வடிவங்களிலான கத்திகளைத் தயாரித்துள்ளனர். கத்தியின் கைப்பிடியில், பித்தளை, வெள்ளி, வெள்ளி மணிக்கல், எலும்பு ஆகியவை உட்பொதிக்கப்படுகின்றன. தவிர, தேசிய இன தனித்தன்மை மிக்க வடிவங்கள் இதில் செதுக்கப்படுகிறன. கத்தி, அலங்காரப் பொருளாக திகழ்கின்றது. தவிர, இதற்கு பயன்பாட்டுப் பயன் உண்டு என்று Mehmetcan எங்களிடம் கூறினார்.

1 2