• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-11 21:24:26    
சீனாவின் காஷ் நகரின் உய்கூர் இன நடையுடை பாவனைகள் பற்றி

cri

அடுத்து, உய்கூர் இனத்தின் உணவுப் பண்பாடு பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். உய்கூர் இனத்தின் உணவு வகைகளில், பிரதிநிதித்துவம் மிக்க உணவு, நெருப்பில் வாட்டிய இறைச்சி ஆகும். வாட்டும் அடுப்பின் மேல், இறைச்சி தொங்க விடப்படுகிறது. இறைச்சியில் உப்பு, சீரகம், மிளகாய்த்தூள் உள்ளிட்ட மசாலாக்கள் சேர்க்கப்பட்டு, சுவை மிகுந்த நெருப்பில் வாட்டிய இறைச்சி தயாரிக்கப்படுகிறது. நெருப்பில் வாட்டிய இறைச்சி வகைகள் அதிகம். இவ்வகைகளில், கம்பியில் வைக்கப்பட்டு சுடப்பட்ட ஆட்டிறைச்சி மிக அதிகம். சுட்ட முழு ஆடு, நெருப்பில் வாட்டிய இறைச்சி வகைகளில் மிகவும் அரிது. பெரிய ஹோட்டல்களிலும், விருந்து மண்டபங்களிலும் மதிப்புக்குரிய விருந்தினர்களுக்கு இது அளிக்கப்படுகிறது.

கம்பியில் வைக்கப்பட்டு சுடப்பட்ட ஆட்டிறைச்சிகள் சிலவற்றை உட்கொண்ட பின், ஒரு வகை சோறு மேசையின் மேல் வைக்கப்பட்டது. இது சுவையானது. இதன் மூலப் பொருட்கள் பற்றி இந்த உய்கூர் இன உணவகத்தின் பணியாளர் Ahmetcan கூறியதாவது: 

"அரிசி, கேரட், ஆட்டிறைச்சி ஆகியவை கலந்து, இந்த உணவு வகை தயாரிக்கப்படுகின்றது. வலது கையின் மூன்று விரல்களால் இதை எடுத்து, உட்கொள்ளலாம்" என்றார், அவர்.

உய்கூர் இன உணவுப் பண்பாட்டில், "Nang" என்னும் தனித்தன்மை வாய்ந்த ஒரு வகை உணவைச் சாப்பிட வேண்டும் என்று இப்பணியாளர் வற்புறுத்தினார். உய்கூர் இன மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத முக்கிய உணவு இதுவாகும். மாவு புளித்த பின், வெதுப்பு செய்வதன் மூலம் Nang தயாரிக்கப்படுகின்றது. இது வட்டமானது. இது சுவையானது. மட்டுமல்ல, ஊட்டச்சத்துள்ளது.

உய்கூர் இன உணவுகளைச் சாப்பிட்டப் பின், இனிமையான உய்கூர் இன இசையைக் கேட்டு ரசிக்க, ஒரு உய்கூர் இன இசைக்கருவி கடைக்குச் சென்றோம். இக்கடையை சென்றடைந்த போது, உய்கூர் இன இளைஞர் ஒருவர், Rewapu என்ற உய்கூர் இன இசைக் கருவியால், உய்கூர் நாட்டுப்புற இசையை இசைத்துக் கொண்டிருந்தார்.

இசை, இலக்கியம், நடனம் உள்ளிட்ட பல்வகை கலை வடிவங்களை உய்கூர் இன மக்கள் பயன்படுத்தி, தமது இன மக்களின் செழிப்பான வாழ்க்கையை வெளிக்காட்டுகின்றனர். தவிர, உய்கூர் இனத்தவர்களின் உயர்ந்த சிந்தனை, ஆசை, குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில், இவ்வினத்தவர்களின் இன்பம் மற்றும் துன்பம் ஆகியவற்றை அவர்கள் பிரதிபலிக்கின்றனர். தலைசிறந்த இந்த இசை வடிவம், உலகில் பல்வேறு தேசிய இனங்களின் கலை வரலாற்றில் தனிச்சிறப்பியல்பு வாய்ந்தது.


1 2