• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-16 15:14:47    
தமிழ் மூலம் சீனம் பாடம் 114

cri

வாணி -- க்ளீடட்ஸ், கடந்த வகுப்பில் நாம் 9வது பாடத்தைக்கற்றுக்கொள்ளத் துவங்கியுள்ளோம். கடந்த வாரம் கற்றுக்கொண்டதை இன்று முதலில் நேயர்களுடன் சேர்ந்து மீளாய்வு செய்வோம்.
க்ளீட்டஸ் -- சரி
வாணி—9வது பாடத்தில் 出行, அதாவது வெளியே போவது பற்றி கற்றுக்கொள்கின்றோம். என்னை பின்பற்றி நான் சொல்வதை திரும்ப சொல்லுங்கள். 出行, chu xing
க்ளீட்டஸ் -- 出行, chu xing , வெளியே போவது
வாணி -- வெளியூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, வழி பற்றி கேட்பது அதிகம். நீங்கள் சீனாவில் பயணம் செய்யும் போது, 请问,在哪儿?என்பதை கேட்கலாம். 请问,qing wen, தயவு செய்து, 在哪儿?zai na er?எங்கே இருக்கிறது?请问,在哪儿?qing wen, zai na er?
களீட்டஸ் -- 请问,在哪儿?qing wen, zai na er? தயவு செய்து, எங்கே இருக்கிறது?
வாணி -- இந்த வாக்கியத்தில் நீங்கள் போக வேண்டிய இடத்தின் பெயரைச் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, 请问,餐厅在哪儿?qing wen, can ting zai na er? 餐厅, உணவு விடுதி. 请问,餐厅在哪儿?qing wen, can ting zai na er?
க்ளீட்டஸ் -- 请问,餐厅在哪儿?qing wen, can ting zai na er? தயவு செய்து, உணவு விடுதி எங்கே இருக்கிறது?
வாணி-- 请问,友谊商店在哪儿?qing wen, you yi shang dian zai na er? 友谊商店, நட்புறவு கடை. 请问,友谊商店在哪儿?qing wen, you yi shang dian zai na er?
க்ளீட்டஸ் -- 请问,友谊商店在哪儿?qing wen, you yi shang dian zai na er? தயவு செய்து, நட்புறவு கடை எங்கே இருக்கிறது?
வாணி -- வழி பற்றி கேட்க இன்னொரு பயன்பாடு உண்டு. அதாவது, 请问,怎么走? தயவு செய்து, எப்படி செல்ல வேண்டும்? 请问,怎么走? qing wen zen me zou?
க்ளீட்டஸ் -- 请问,怎么走? qing wen zen me zou? தயவு செய்து, எப்படி செல்ல வேண்டும்?

வாணி -- 请问,天安门广场怎么走? qing wen,tian an men guang chang zen me zou? 天安门广场, tian an men guang chang தியேன் ஆன் மன் சதுக்கம். 请问,天安门广场怎么走? qing wen,tian an men guang chang zen me zou?
க்ளீட்டஸ் -- 请问,天安门广场怎么走? qing wen,tian an men guang chang zen me zou? தயவு செய்து, தியேன் ஆன் மன் சதுக்கத்துக்கு எப்படி செல்ல வேண்டும்?




வாணி – மேலும், க்ளீட்டஸ் சீன மொழியில் நன்றி என்பதை எப்படி தெரிவிக்க வேண்டும்?
க்ளீட்டஸ் -- 谢谢,xie xie.
வாணி – நல்லது. 谢谢,xie xie. 4வது தொனி. 谢谢,xie xie.
அடுத்த சொற்கள், 请问,qing wen,问, wen, 4வது தொனி.请 qing, 3வது தொனி. 请问,qing wen, மற்றவரிடம் கேள்வி கேட்கும் போது மதிப்புடன் கேட்க இதை பயன்படுத்தலாம்.请问, qing wen.
களீட்டஸ் -- 请问,qing wen,问, wen, 4வது தொனி.请 qing, 3வது தொனி. 请问,qing wen, தயவு செய்து.
இசை
வாணி—சரி. புதிய வகுப்பைத் துவக்கலாம். கடந்த முறை வழி கேட்பது பற்றி கற்றுக்கொண்டோம். இன்று எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதை அறிமுகப்படுத்துகின்றோம்.
க்ளீட்டஸ்— வாணி, 请问,友谊商店怎么走?நட்புறவு கடைக்கு எப்படி செல்ல வேண்டும் எந்று இப்படி கேட்கலாமா?
வாணி – 友谊商店,就在那儿。You yi shang dian, jiu zai na er. நட்புறவு கடையா? அதோ அங்கே தான். 就,jiu, 4வது தொனி, தானே என்ற பொருள். 那儿,那里,Na er,அல்லது na li ஒரே பொருள். அங்கே என்ற பொருள். 友谊商店,就在那儿。You yi shang dian, jiu zai na er.
க்ளீட்டஸ் --友谊商店,就在那儿。You yi shang dian, jiu zai na er. நட்புறவு கடையா? அதோ அங்கே தான்.
வாணி --友谊商店,就在那儿。You yi shang dian, jiu zai na er.
க்ளீட்டஸ் --友谊商店,就在那儿。You yi shang dian, jiu zai na er. நட்புறவு கடையா? அதோ அங்கே தான்.
க்ளீட்டஸ் – வாணி, Na er,அல்லது na li, அங்கே என்ற பொருள்.
என்று நீங்கள் சொன்னீர்கள். இங்கே என்பதை சீன மொழியில் எப்படி சொல்ல வேண்டும்?

1 2