படிக்காதவர்கள் அதிகரிக்கும் அரபு நாடுகள்
அரபு நாடுகளில் படிக்காதவர்களின் மொத்த எண்ணிக்கை 99.5 மில்லியன் என்றும் இது மொத்த அரபு மக்கள்தொகையில் 29.7 விழுக்காடு என்றும் அரபு கல்வி, பண்பாடு மற்றும் அறிவியல் நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இதில் 75 மில்லியன் மக்கள் 15 முதல் 45 வயதுக்கு இடையிலானவர்கள் என தெரிய வந்துள்ளது. உயர்வான படிக்காதவர்களின் எண்ணிக்கை அரபு நாடுகளின் சமூக வளர்ச்சியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். உயர் கல்விநிலை கொண்ட அரபு நாடுகள் அறியாமை ஒழிப்பு மற்றும் வயது வந்தோர் கல்வி ஆகியவற்றிற்கு தங்கள் தேசிய வளர்ச்சி திட்டங்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவை பயனுள்ள நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை கட்டாய கல்வி சட்டம் மூலம் கல்வியை பரவலாக்க வேண்டும் என்று அரபு கல்வி, பண்பாடு மற்றும் அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அரபு நாடுகளில் உலகிலேயே குறைவான 62.7 விழுக்காடு கல்வியறிவு தான் உள்ளது என்று கடந்த நவம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் தனது ஆண்டறிக்கையில் தெரிவித்தது குறிப்பிடதக்கது.
பயிற்சி பெற்றால் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு

தேசிய வருமானத்தை அதிகரிக்க தொழில்துறை பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தனது நாட்டவர் பலரை வெளிநாட்டில் பணியிலமர்த்த எண்ணுவதாக பிலிப்பைன்ஸ் அரசு அண்மையில் அறிவித்தது. 2006 ஆம் ஆண்டு 60 விழுக்காடு தொழில்துறை பட்டம் பெற்ற மற்றும் தேர்ச்சி பெற்ற பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் பணியிலமர்த்தப்பட்டனர். இவ்விகிதம் 2007 இல் தொழில்துறை பட்டம் பெற்றவர்கள் 73 விழுக்காட்டினராகவும், தொழில் பயிற்சி பெற்றவர்கள் 27 விழுக்காட்டினராகவும் மாறியது. 2008 ஆம் ஆண்டு உயர்ந்த ஊதியத்திலான அதிக வேலைவாய்ப்பு ஆண்டாக இருக்கும் என்று தொடர்புடைய துறை செயலாளர் இன்னாசியோ புன்யே தெரிவித்தார். 1 2
|